என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாநகராட்சி தேர்தலுக்கு தி.மு.க., அ.தி.மு.க.வில் வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் ஒடுகத்தூர், பள்ளி கொண்டா, திருவலம், பென்னாத்தூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. வேலூர் மாநகராட்சி மேயர் பதவி (பொது) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தி.மு.க- அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்காணல் நடந்தது.

    வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ, கதிர் ஆனந்த் எம்.பி. கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேர்காணல் நடத்தினர். 

    இதில் வேலூர் மாநகராட்சி 2 நகராட்சிகள் மற்றும் 4 பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

    இதேபோல காட்பாடியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு தலைமையில் நேர்காணல் நடந்தது. மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதீஷ்குமார் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
    வேலூர் மாவட்டத்தில் இன்று 315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 54,266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,964 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,150 பேர் பலியானார்கள். தற்போது 2,152 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    இன்று 315 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 249 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உதவி செய்ய வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திரா நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 55). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர்.

    ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றதும் சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பிறகு சுகாதாரத்துறையில் கார் டிரைவர் வேலைக்கு சேர்ந்தார். அந்த வேலையில் அவருக்கு சரியான ஈடுபாடு இல்லாததால் பணியிலிருந்து நின்றுவிட்டார்.

    அதன் பிறகு வீட்டிலேயே சொந்தமாக மாவு அரைக்கும் தொழிலில் ஈடுபட்டார். அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் இவர் வைத்திருக்கக்கூடிய எந்திரத்தில் மாவு அரைத்து சென்றனர். அனைவரிடமும் சேகர் சகஜமாக பழகி உள்ளார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவர் சேகர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார். கடந்த ஆண்டு கொரோனா விடுமுறையில் இருந்த மாணவி சேகர் மாவு மில்லில் அவருக்கு உதவியாக இருந்துள்ளார். மேலும் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போதும் சேகர் வீட்டிலிருந்து படித்துள்ளார்.

    இந்த நிலையில் மகள் வயதில் இருக்கும் மாணவி மீது சேகர் காம பார்வை வீச தொடங்கினார்.

    அடிக்கடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இது பற்றி மாணவி வெளியே சொல்ல பயந்தார். ஒருகட்டத்தில் மாணவியை அடைய துடித்த சேகர் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறினார்.

    பள்ளிகள் திறந்ததும் வழக்கம் போல மாணவி பள்ளிக்கு செல்ல தொடங்கினார். இதனை பயன்படுத்திக் கொண்டு சேகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமடக்கினார். மாணவியை பொன்னம்பட்டி கவுண்டன்யா ஆற்றங்கரைக்கு தனியாக அழைத்து சென்றார். அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். பயந்துபோன மாணவி இதை வெளியே சொல்லாமல் இருந்தார்.

    இந்த நிலையில் மாணவி கர்ப்பமானார். அதையும் அவர் பெற்றோரிடம் கூறவில்லை. மாணவிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரது பெற்றோர் குடியாத்தத்தில் உள்ள டாக்டரிடம் மாணவியை அழைத்துச் சென்றனர். அப்போது தான் மாணவி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மாணவியிடம் விசாரித்தபோது முன்னாள் ராணுவ வீரர் சேகர் பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானது தெரியவந்தது.

    இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இதனையடுத்து சேகர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சேகர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 

    வேலூர் காகிதப்பட்டறையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை குப்பையில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் காகிதப்பட்டறை எல்.ஐ.சி. காலணி டாஸ்மாக் கடை அருகே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அந்த பகுதியில் இருந்து இன்று காலை குழந்தை அழும் குரல் கேட்டது. சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அழுதபடி கிடந்தது. குழந்தையை மீட்ட பொதுமக்கள் உடனடியாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டனர். குழந்தை அருகே ஒரு பை மட்டும் கிடந்தது. பெண் குழந்தையை வீசி சென்றது யார் என தெரியவில்லை.

    108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து பச்சிளம் பெண் குழந்தையை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்த குழந்தையை குப்பையில் வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் சைதாப்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட பைப்புகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வேலூரில் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட குடிநீர் முற்றிலும் தடைபட்டது.

     மழை வெள்ளத்தில் சேதம் அடைந்த கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

    வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி ரோட்டில் இன்று குடிநீர் கேட்டு அப்பகுதி ஆண்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் சாலையில் காலி குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குப்பன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இன்னும் 10 நாட்களில் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். மேலும் மாநகராட்சி லாரிகள் மூலம் என்று குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர்.

     இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    வேலூர் ஜெயிலில் 16 கைதிகள் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    நோயால் பாதிக்கப்படும் கைதிகள் மீது உ£¤ய கவனம்  செலுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தொடக்க காலத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டால் உயிரை காப்பாற்ற முடியும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

     இந்த நிலையில் வேலூர் சிறையில் உள்ள 16 கைதிகள் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். 
    இதுகுறித்து ஜெயில் அதிகா£¤கள் கூறுகையில்:- 

    வோ¤சல்லா எனப்படும் வைரஸ் தொற்று மூலமாக பரவக்கூடியது சின்னம்மை எந்த தருணத்தில் வேண்டுமானாலும் ஒருவருக்கு சின்னம்மை பாதிப்பு ஏற்படலாம்.

     தற்போது வேலூர் மத்திய சிறையில் 16 கைதிகள் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் மூலம் சிறையில் உள்ள மற்ற கைதிகளுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக 16 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் குணம¬ட்நது வருகின்றனர். 

    கைதிகள் குணமடைந்த பிறகு மற்ற கைதிகளுடன் தங்க வைக்கப்படுவர் என்றனர்.
    வேலூர் மாவட்டத்தில் இன்று 221 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 54,003 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,715 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,150 பேர் பலியானார்கள். தற்போது 2,138 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    இன்று 221 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 286 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் பலியானார்.

    பொதுமக்கள் கூட்டமாக கூட வேண்டாம். முடிந்த அளவு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் மாடு விடும் விழா நடந்தது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 120 கிராமங்களில் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் பட்டியலும் வெளியிடப்பட்டது.

    கடந்த 15-ந்தேதி காளை விடும் விழா தொடங்கியது.கணியம்பாடி அருகே உள்ள கீழ்அரசம்பட்டு, கே.வி.குப்பம் அருகே உள்ள கீழ்முட்டுக்கூர், குடியாத்தம் அடுத்த வி.மத்தூர் ஆகிய கிராமங்களில் இன்று மாடு விடும் விழா நடந்தது.

    கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின், வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 

    500-க்கும் மேற்பட்ட காளைகள் ஓடுபாதையில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதற்கிடையில் ஓடு பாதையில் நின்றிருந்த பலரையும் காளைகள் முட்டித்தள்ளின. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    மாடு விடும் விழா புதிய கட்டுப்பாடுகள் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மாடு விடும் விழாக்களை கண்காணித்தனர்.
    வேலூர் நேதாஜி மைதானத்தில் 200 போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர், போலீசார், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி அமைப்பினருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே போலீசார் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெரும்பாலான போலீசார் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை. அதைத்தொடர்ந்து இன்று வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

    போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடாத அனைத்து போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

    முகாமில் டாக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் போலீசாரின் பெயர், பணிபுரியும் இடம் ஆகியவற்றை பதிவு செய்து கொண்டு வரிசையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினர்.

    இந்த சிறப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
    குடியாத்தம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பி.கே.கேபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது32) தச்சு வேலை செய்து வந்தார்.

    கிஷோர் குமாரின் பாட்டி வீடு குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிபல்லி கிராமத்தில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக கிஷோர் குமார் தனது பாட்டி ஊருக்கு குடும்பத்துடன் வந்தார். 

    நேற்று உறவினர்களுடன் அதே பகுதியில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது கிஷோர்குமார் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார்.

    உடன் குளித்துக் கொண்டிருந்த உறவினர்கள் உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 1 மணி நேரம் போராடி கிஷோர் குமாரை பிணத்தை மீட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரதராமி போலீசார் கிஷோர் குமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்துபோன கிஷோர் குமாருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
    குடியாத்தம் வனப்பகுதியில் சுற்றி திறியும் 25 சிறுத்தைகள் 4 ஆடுகளை கடித்து குதறியதால் அப்பகுதி கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் வனப் பகுதியில் 6 ஜோடி பெரிய சிறுத்தைகளும், குட்டிகளும் என 25 இற்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தைகள் வனப்பகுதியில் சுற்றி வருவதாகவும் மேலும் கிராம பகுதியை ஒட்டிய படி இரவு நேரங்களில் சுற்றுகின்றன.

    இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் வனத்துறையினர் கிராமங்களில், டாம் டாம் அடித்து சிறுத்தைகள் குறித்து எச்சரிக்கை செய்தனர்.

    குடியாத்தம் கல்லப்பாடி காப்புக் காடுகள் மற்றும் வீரிசெட்டிபல்லி காப்புக் காடுகள் பகுதியில் காட்டின் நடுவே வனத்துறையினர் கொட்டகை அமைத்து தங்கி இரவு முழுவதும் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த சில நாட்களாக 2 பெரிய சிறுத்தைகள் ரோந்து செல்லும் வன ஊழியர்கள் அருகே சில மீட்டர் தொலைவில் நின்று கொண்டு அச்சுறுத்தும் வகையில் உறுமியுள்ளது.இதனால் அச்சத்துடனே வன ஊழியர்கள் ரோந்து செல்கின்றனர்.

    குடியாத்தம் அடுத்த துருகம் அடுத்த கோலத்தான்பட்டி வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது அங்கு வசிக்கும் விவசாயி இருசப்பன் 4 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். 

    நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறுத்தைகள் உறுமும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த இருசப்பன் வீட்டுக்குள்ளேயே அச்சத்துடன் இருந்துள்ளார்.
    அப்போது அவர் அவர்களுக்கு சொந்தமான ஆடு பட்டியில் நுழைந்த சிறுத்தைகள் ஆடுகளை வேட்டையாடின. அப்போது ஆடுகளின் சத்தம் கேட்ட இருசப்பன் பயந்தபடியே இருந்துள்ளார்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு 2 ஆடுகள் மட்டும் சிறுத்தைகள் கடித்து குதறியதில் காயங்களுடன் இறந்து கிடந்தன. மேலும் 2 ஆடுகளை சிறுத்தைகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளது தெரிய வந்தது. குறித்து இருசப்பன் குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன்பாபு, வனவர் முருகன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    மேலும் சிறுத்தைகளால் கடித்துக் குதறப்பட்ட ஆடுகளை பார்வையிட்டனர். சிறுத்தைகள் ஆட்டுப் பட்டிக்குள் நுழைந்த சம்பவம் அடுத்து அப்பகுதியில் வனப்பகுதியை ஒட்டியபடி வசிக்கும் கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

    வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
    வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது பூங்காக்களுக்கு வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்று முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.

    இதனால் வேலூர் மாநகர பகுதியில் பால் மெடிக்கல் ஆஸ்பத்திரிகள் தவிர வேறு எதுவும் திறக்கப்படவில்லை. வேலூர் அண்ணா சாலை, காட்பாடி ரோடு, ஆற்காடு ரோடு, ஆரணி ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. காட்பாடி காந்திநகர் மற்றும் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, வி.ஐ.டி. சாலை பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

    மாவட்டத்தின் புறநகர் பகுதியான குடியாத்தம், பேரணாம்பட்டு, ஒடுகத்தூர், அணைக்கட்டு, கே. வி. குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க மாநில, மாவட்ட எல்லைகள் உட்பட 100- க்கும் மேற்பட்ட இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆந்திர மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வருவபவர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இன்று காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் கோட்டை பூங்கா மற்றும் அமிர்தி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. கோட்டை அருகே போலீசார் தடுப்புகளை அமைத்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    காணும் பொங்கலையொட்டி வேலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் கோழி ஆடு உள்ளிட்ட இறைச்சிகள் ரகசியமாக விற்பனை செய்யப்பட்டன. இதனை அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
    ×