என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிஷோர் குமார்
கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி
குடியாத்தம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பி.கே.கேபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது32) தச்சு வேலை செய்து வந்தார்.
கிஷோர் குமாரின் பாட்டி வீடு குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிபல்லி கிராமத்தில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக கிஷோர் குமார் தனது பாட்டி ஊருக்கு குடும்பத்துடன் வந்தார்.
நேற்று உறவினர்களுடன் அதே பகுதியில் உள்ள சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது கிஷோர்குமார் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார்.
உடன் குளித்துக் கொண்டிருந்த உறவினர்கள் உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 1 மணி நேரம் போராடி கிஷோர் குமாரை பிணத்தை மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரதராமி போலீசார் கிஷோர் குமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்துபோன கிஷோர் குமாருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
Next Story