search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்பாடி அடுத்த கீழ்முட்டுகூரில் காளை விடும் விழா இன்று நடந்தது. சீறி பாய்ந்து சென்ற காளைகள்.
    X
    காட்பாடி அடுத்த கீழ்முட்டுகூரில் காளை விடும் விழா இன்று நடந்தது. சீறி பாய்ந்து சென்ற காளைகள்.

    3 இடங்களில் மாடு விடும் விழா

    வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் மாடு விடும் விழா நடந்தது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 120 கிராமங்களில் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் பட்டியலும் வெளியிடப்பட்டது.

    கடந்த 15-ந்தேதி காளை விடும் விழா தொடங்கியது.கணியம்பாடி அருகே உள்ள கீழ்அரசம்பட்டு, கே.வி.குப்பம் அருகே உள்ள கீழ்முட்டுக்கூர், குடியாத்தம் அடுத்த வி.மத்தூர் ஆகிய கிராமங்களில் இன்று மாடு விடும் விழா நடந்தது.

    கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின், வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 

    500-க்கும் மேற்பட்ட காளைகள் ஓடுபாதையில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதற்கிடையில் ஓடு பாதையில் நின்றிருந்த பலரையும் காளைகள் முட்டித்தள்ளின. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    மாடு விடும் விழா புதிய கட்டுப்பாடுகள் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மாடு விடும் விழாக்களை கண்காணித்தனர்.
    Next Story
    ×