என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுத்தைகளால் கடித்துக் குதறப்பட்ட ஆடுகள்.
குடியாத்தம் வனப்பகுதியில் 25 சிறுத்தைகள்?
குடியாத்தம் வனப்பகுதியில் சுற்றி திறியும் 25 சிறுத்தைகள் 4 ஆடுகளை கடித்து குதறியதால் அப்பகுதி கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் வனப் பகுதியில் 6 ஜோடி பெரிய சிறுத்தைகளும், குட்டிகளும் என 25 இற்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. சிறுத்தைகள் வனப்பகுதியில் சுற்றி வருவதாகவும் மேலும் கிராம பகுதியை ஒட்டிய படி இரவு நேரங்களில் சுற்றுகின்றன.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் வனத்துறையினர் கிராமங்களில், டாம் டாம் அடித்து சிறுத்தைகள் குறித்து எச்சரிக்கை செய்தனர்.
குடியாத்தம் கல்லப்பாடி காப்புக் காடுகள் மற்றும் வீரிசெட்டிபல்லி காப்புக் காடுகள் பகுதியில் காட்டின் நடுவே வனத்துறையினர் கொட்டகை அமைத்து தங்கி இரவு முழுவதும் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக 2 பெரிய சிறுத்தைகள் ரோந்து செல்லும் வன ஊழியர்கள் அருகே சில மீட்டர் தொலைவில் நின்று கொண்டு அச்சுறுத்தும் வகையில் உறுமியுள்ளது.இதனால் அச்சத்துடனே வன ஊழியர்கள் ரோந்து செல்கின்றனர்.
குடியாத்தம் அடுத்த துருகம் அடுத்த கோலத்தான்பட்டி வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது அங்கு வசிக்கும் விவசாயி இருசப்பன் 4 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறுத்தைகள் உறுமும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த இருசப்பன் வீட்டுக்குள்ளேயே அச்சத்துடன் இருந்துள்ளார்.
அப்போது அவர் அவர்களுக்கு சொந்தமான ஆடு பட்டியில் நுழைந்த சிறுத்தைகள் ஆடுகளை வேட்டையாடின. அப்போது ஆடுகளின் சத்தம் கேட்ட இருசப்பன் பயந்தபடியே இருந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு 2 ஆடுகள் மட்டும் சிறுத்தைகள் கடித்து குதறியதில் காயங்களுடன் இறந்து கிடந்தன. மேலும் 2 ஆடுகளை சிறுத்தைகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளது தெரிய வந்தது. குறித்து இருசப்பன் குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ்குமார் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன்பாபு, வனவர் முருகன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சிறுத்தைகளால் கடித்துக் குதறப்பட்ட ஆடுகளை பார்வையிட்டனர். சிறுத்தைகள் ஆட்டுப் பட்டிக்குள் நுழைந்த சம்பவம் அடுத்து அப்பகுதியில் வனப்பகுதியை ஒட்டியபடி வசிக்கும் கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
Next Story






