search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பைக் மீது லாரி மோதி கணவன் மற்றும் மனைவி படுகாயம்

    வேலூர் பாலாற்று பாலத்தில் பைக் மீது லாரி மோதியதில் கணவன்&மனைவி படுகாயம் அடைந்தனர்.
    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே காட்பாடியில் இருந்து வேலூர் வரும் சாலையில் உள்ள பழைய பாலாற்று பாலத்தில் இன்று காலை லாரி ஒன்று எதிர்திசையில் காட்பாடி நோக்கி சென்றது.

    அப்போது தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் அவரது கணவருடன் பைக்கில் வேலூருக்கு வந்து கொண்டிருந்தார். பாலத்தில் வந்தபோது பைக் மீது லாரி மோதியது. இதில் தம்பதி இருவரும் படுகாயமடைந்தனர்.மேலும் பைக் முழுவதும் லாரி சக்கரத்தில் சிக்கி நொறுங்கியது.

    இந்த விபத்தால் பழைய பாலாற்று பாலத்தில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நகர முடியாதபடி அளவிற்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    அப்போது அந்த வழியாக வந்த காட்பாடி டி.எஸ்.பி. பழனி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    மேலும் இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் சிக்கிய பைக் மற்றும் லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது.
    Next Story
    ×