என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செ.கு.தமிழரசன்
    X
    செ.கு.தமிழரசன்

    ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது குடியிருப்பு வாசிகளுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்

    குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது குடியிருப்பு வாசிகளுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என செ.குதமிழரசன் வலியுறுத்தி உள்ளார்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் நிருபர்களிடர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றங்கரையில் இருபக்கமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    ஆனால் அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்காமலும் உரிய இழப்பீடு வழங்காமலும் வாழ்வாதாரத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்காமலும் திடீரென ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எந்த வகையிலும் நியாயமாகாது.
    அவர்களுக்கு கால அவகாசம் வழங்கி வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்த பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மேலும் அவர்களை 50,60 ஆண்டுகளாக அங்கேயே குடியிருக்கின்றனர் அவர்களை திடீரென அகற்றுவதால் அவர்களுக்கு வாடகைக்குகூட வீடு கிடைக்காத அவல நிலையில் உள்ளனர்.

    பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் திடீரென நீதிமன்ற உத்தரவு எனக் கூறுவது சரியில்லை பல ஆண்டுகளுக்கு முன்பே நீதிமன்ற உத்தரவு வந்தது ஆனால் அப்போது அமல்படுத்தாமல் திடீரென குடியாத்தத்தில் மட்டும் அகற்றுவது உள்நோக்கம் கொண்டது. 

    அங்கு வசிப்பவர்களுக்கு  உரிய மாற்று இடம் உடனடியாக வழங்க வேண்டும்.

    ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது அங்கு குடியிருப்பவர்களுக்கு வாடகை வீடு கிடைக்காத அவலநிலையால் விரக்தியில் பவுனம்மாள் என்ற பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தமிழக அரசு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.

    நீதிமன்ற உத்தரவை காட்டி குடியிருக்கும் வீடுகளை அகற்றுவோம் என கூறுபவர்கள் தமிழ்நாட்டில் இரண்டரை லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது அதை மீட்க வேண்டும்.

    சென்னையில் தீவு திடல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது எதிர்கட்சிகள் ஆக இருந்தவர்கள் குரல் எழுப்பினார்கள் அவர்கள் இப்போது எங்கே போனார்கள் என கூறினார்.

    பேட்டியின்போது குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் தலித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×