என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாக்கம் ஏரியில் தேடும் தேசிய பேரிடர் மீட்பு படையினர்.
ஏரியில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி பலி
குடியாத்தம் அருகே ஏரியில் மீன் பிடிக்க சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஸ் குமார் (வயது 40) தேங்காய் உரிக்கும் தொழிலாளி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களின் கிராமத்தில் உள்ள பாக்கம் ஏரி நிரம்பியது.
பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்களும் பொதுமக்களும் ஏரியில் மீன் பிடித்து வந்தனர் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஏரியில் மீன் பிடிக்க வலை வலைவீசி உள்ளனர்.
அவர்களுடன் ரோஸ் குமாரும் செல்வது வழக்கம் நேற்றுமுன்தினம் காலையில் வழக்கம்போல் பாக்கம் ஏரியில் வலைவீசினர் மாலையில் வலையில் மீன் சிக்கியுள்ளதா என்பதை பார்க்க ரோஸ்குமார் ஏரியில் இறங்கினார். அப்போது நீரில் மூழ்கினார்.
அதனால் கரை மேல் இருந்த அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து அவர்களது உறவினர்களுள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பேர்ணாம்பட்டு, குடியாத்தம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிராம மக்கள் உதவியுடன் பாக்கம் ஏரியில் நேற்றுமுன்தினம் இரவு சுமார் 7 மணி வரை தேடினர்.
நேற்று காலையில் மீண்டும் தீயணைப்பு வீரர்கள் பாக்கம் ஏரியில் இறங்கி ரோஸ் குமாரின் உடலை தேடினர் பல மணி நேரம் தேடியும் கிடைக்காததால் ஏரியில் பல அடி ஆழம் இருப்பதாலும் ஏரி நிரம்பி உள்ளதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.
நேற்று மாலையில் குடியாத்தம் வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையின் கமாண்டர் சுரேஷ் சக்காரியா தலைமையில் 15 பேர் இரண்டு பைபர் படகுகளில் பாக்கம் ஏரியில் இறங்கி தேடினர். சுமார் 40 மணி நேரத்திற்குப் பின் ரோஸ் குமாரின் சடலம் மீட்கப்பட்டது.
மேலும் பரதராமி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story