என் மலர்
வேலூர்
வேலூரில் பெண் போலீசாருக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளியில் 276 புதிய பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியின் ஒரு பகுதியாக முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டது.
முதல்வர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.துணை முதல்வர் மற்றும் டி.எஸ்.பி.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
முதன்மை கவாத்து அலுவலர் பாலாஜி வரவேற்றுப் பேசினார்.
இந்தியன் ரெட்கிராஸ் காட்பாடி ரெட் கிராஸ் அவைத் தலைவர் மற்றும் முதலுதவி பயிற்சியாளர் செ.நா.ஜனார்த்தனன் முதல் உதவி விரிவுரையாளர் முருகேசன் முதலுதவி பயிற்சி பெற்ற வி.பழனி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
முதன்மை சட்ட விரிவுரையாளர் கனிமொழி காட்பாடி ரெட்கிராஸ் துணைத்தலைவர் ஆர் சீனிவாசன் யூத் ரெட் கிராஸ் தலைவர் ரமேஷ்குமார் ஜெயின் மருத்துவக் குழு தலைவர் டாக்டர் தீனபந்து செயற்குழு உறுப்பினர் எ.ஸ்ரீதரன் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயக்க நிலையில் இருந்தால் எப்படி முதலுதவி அளிப்பது செயற்கை சுவாசம் அளிக்கும் முறை எலும்பு முறிவு ஏற்பட்டால் கட்டுப் போடும் முறைகள் பாம்புக்கடி விஷப் பூச்சிக் கடி ஏற்பட்டால் செய்யக்கூடிய நடைமுறைகளில் காயம் ஏற்பட்ட பகுதியில் ரத்த போக்கை தடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல் முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
இறுதியில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு சிறப்பாக பதிலளித்த பயிற்சி பெண் காவலர்களுக்கு பரிசுகளை துணை முதல்வர் ரவிச்சந்திரன் வழங்கினார்.
ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
தமிழக ஆந்திர எல்லையான வேலூர் கிறிஸ்டியான் பேட்டை சோதனைச்சாவடியில் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்&இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த தமிழக அரசு பஸ்சில் சோதனை செய்தனர்.
அப்போது பஸ்சில் இருந்த 3 பயணிகளின் கொண்டு வந்த பையில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இது எடுத்து அவர்களை காட்பாடி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சேர்ந்த ஜோதிராஜ் (27), கோபி (30), சுப்பாராவ் (25) எனவும் ஆந்திராவில் இருந்து விழுப்புரத்திற்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது அவற்றின் மதிப்பு ரூ 2.80 லட்சம் ஆகும் என போலீசார் தெரிவித்தனர்.
வேலூரில் மணல் கொள்ளையனுடன் தனிப்படை போலீஸ்காரர் நடத்திய ஆடியோ உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டில் செயல்படும் தனிப்படை போலீசார் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக புகாருக்கு உள்ளாகி வருகிறது.
தனிப்படையில் செயல்படும் சிலர் கஞ்சா, மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம், குட்கா விற்பனை என சட்ட விரோத நடவடிக்கையில் நேரடி தொடர்பில் இருந்து வருவதாக வேலூர் மாநகர போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி பேச்சு எழுந்துள்ளது.
சமீபத்தில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பில் இருக்கும் தனிப்படை போலீஸ் ஏட்டு குறித்த தகவல் வெளியானது.
தற்போது எஸ்.பி., தனிப்படையில் உள்ள போலீஸ்காரர் ஒருவர் மணல் கடத்தல் தொடர்பாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்ட ஆயுதப்படையில் உயர் முக்கிய பொறுப்பில் இருக்கும் போலீஸ்காரர் ஒருவர் அடுக்கம்பாறை பகுதியில் வீடு கட்டி வருகிறார். அவரது வீட்டுக்கு மணல் தேவை என்பதால் எஸ்.பி., தனிப்படையில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அவருக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்.
இதற்காக கொலை வழக்கில் தொடர்புடைய பஞ்சர் மணி என்பவர் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் மணல் ஏற்றி செல்ல ஏற்பாடும் நடந்தது.
அப்போது மணல் கடத்தல் வாகனத்தை பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பறிமுதல் செய்து பஞ்சர் மணி, வாகன உரிமையாளர் டெல்லிபாபு உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
அந்த வாகனத்தை விடுவிக்க பேரம் பேசியும் முடியாத நிலையில், பஞ்சர் மணி எஸ்.பி., தனிப்படை போலீஸ்காரர் ஒருவரிடம் தொடர்ந்து பேசி வாகனத்தை விடுவிக்க வற்புறுத்தியுள்ளார்.
அந்த உரையாடலில், பஞ்சர் மணி, ‘எஸ்ஐ சொல்லித்தான் மணலை ஓட்டினேன். அவர் சொன்னபடி வண்டியுடன் வந்திருந்தால் வண்டி சிக்கியிருக்காது.
எப்படியாவது அந்த வண்டியை மீட்டுக் கொடுங்கள். என் மீது வழக்கு போட்டதை பற்றி நான் கவலைப்படவில்லை. வண்டியை மீட்க முடியாத நிலையில் உள்ளது. என்னுடைய நம்பரை பார்த்து எஸ்ஐ எடுத்து பேசுவதில்லை’’ என்று கூறுகிறார்.
இதையடுத்து பஞ்சர் மணியை சமாதானம் செய்யும் அந்த எஸ்.பி., தனிப்படை போலீஸ்காரர் ‘எங்கள் தரப்பில் இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது. பார்த்து அட்ஜெஸ்ட் செய்துகொள்’ என்று கூறுகிறார்.
மற்றொரு ஆடியோவில் வீடு கட்டிவரும் காவலர், பஞ்சர் மணியிடம் பேசும்போது:-
‘‘நாளைக்கு 10 ஆயிரம் கொடுக்கிறேன். இப்போதைக்கு இதுதான் செய்ய முடியும்’’ என்கிறார்.
இந்த ஆடியோ உரையாடல் குறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தரப்பில் விசாரித்தபோது, ‘‘டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் என்கிற விநாயகம் (வயது 24). கூலித்தொழிலாளி.
குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரது மகள் சுப்ரஜா (24). இவர்கள் இருவரும் வேலூரில் உள்ள தனியார் ஐடிஐயில் படிக்கும்போது காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். முடினாம் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
காதல் திருமணம் செய்து கொண்டதால் சுப்ரஜாவை அவரது வீட்டில் சேர்க்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுப்ரஜா மாயமாகி விட்டதாக விநாயகம் தெரிவித்தார்.
சுப்ரஜாவின் உறவினர் ஒருவர் சந்தேகமடைந்து இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் இது தொடர்பாக விநாயகத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது விநாயகம் அவரது தம்பி விஜய், உறவினர் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சுப்ரஜாவை தாக்கி உயிருடன் புதைத்து கொன்றது தெரியவந்தது.
சர்க்கார் தோப்பு வனப்பகுதியில் சுப்ரஜாவை புதைத்திருப்பதாக தெரிவித்தனர். நேற்று சர்க்கார் தோப்பில் சுப்ரஜாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும் விநாயகம் அவரது தம்பி விஜய் ஆகியோரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த 17 வயது சிறுவன் சென்னை சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்து விநாயகம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் சுப்ரஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வேலூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த சுப்ரஜா கள்ளக்காதலியுடன் உள்ள தொடர்பை கைவிடுமாறு கண்டித்தார்.
இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் சுப்ரஜாவை சில முறை அடிக்கவும் செய்தேன்.
இந்நிலையில் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் கள்ளக்காதலை கைவிட கூறி என்னிடம் தொடர்ந்து தகராறு செய்தார்.
கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தேன். இதற்கு இடையூறாக உள்ள சுப்ரஜாவை தீர்த்துக் கட்டினால் கள்ளக்காதலியுடன் சந்தோஷமாக வாழலாம் என நினைத்தேன்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது தம்பி விஜய் மற்றும் உறவினர் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து சர்க்கார் தோப்பு வனப்பகுதியில் சவக்குழி தோண்டினோம்.
அதற்கு மறுநாள் எனக்கும் சுப்ரஜாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கைகளால் தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறினேன். அதை நம்பி அவரும் என்னுடன் வந்தார்.
அவரை சர்க்கார் தோப்பு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி விஜய் மற்றும் 17 வயது சிறுவன் இருவரும் தயாராக இருந்தனர். 3 பேரும் சேர்ந்து சுப்ரஜாவை தாக்கினோம் அவர் மயங்கி விழுந்தார்.
ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் அவரை உயிருடன் புதைத்துக் கொன்றோம். பின்னர் எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சி நினைவுத் தூண் அருகே உள்ள கழிவறையில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர் உடனடியாக வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
பழைய பஸ் நிலையத்தில் பர்மா பஜார் கடை முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக போர்டுகள் வைத்திருந்தனர். அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறினார்.
முன்னதாக அண்ணா கலையரங்கம் மற்றும் டவுன்ஹால் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து பாலாற்றங்கரையில் உள்ள முத்து மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து காட்பாடி ஹரிகந்த் நகரில் மாநகராட்சி சார்பில் பூங்கா அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
காட்பாடி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலக வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட கார் லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்வையிட்ட கலெக்டர் உடனடியாக அனைத்தையும் விட உத்தரவிட்டார்.
மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
வேலூரில் ஏழைகளின் சினிமா தியேட்டரான அண்ணா கலையரங்கம் பல்நோக்கு அரங்கமாக மாறுகிறது.
வேலூர்:
வேலூர் மாநகரின் பிரதான சாலையாக உள்ள அண்ணா சாலையில் செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு கடந்த 1968-ம் ஆண்டு 26,838 சதுரடி பரப்பளவு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கடந்த 1969-ம் ஆண்டு சிறுவர் அரங்கம் திறக்கப்பட்டது.
பின்னர், 22,152 சதுரடி பரப்பளவு கொண்ட கட்டிடத்துடன் அண்ணா கலையரங்கம் என பெயர் மாற்றப்பட்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் 1971-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி திறந்து வைக்கப்பட்டது.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த வசதியாக இருந்த அண்ணா கலையரங்கம் மேம்படுத்தப்பட்டு 1978-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் தினசரி 3 காட்சிகள் வீதம் முழு நீள திரைப்படங்கள் வெளியிட தொடங்கப்பட்டது.
இதற்காக பால்கனி, முதல் வகுப்பு, 2--ம் வகுப்பு, 3-ம் வகுப்பு என சுமார் 680 இருக்கைகள் கொண்டதாக மாற்றப்பட்டது. நகரின் மத்தியில் குறைந்த கட்டணத்தில் திரைப்படங்களை சாமானிய மக்கள் கண்டு ரசித்தனர்.
புத்தம் புதிய திரைப் படங்கள் இல்லாவிட்டாலும் இரண்டாம் வெளியீடு திரைப்படங்கள் வெளியிடப்பட்டு கணிசமான வருவாய் ஈட்டியது. அத்துடன் 10 ஆண்டு களுக்கு முன்பு வரை பல்வேறு அரசு விழாக்கள் அண்ணா கலையரங்கில் நடத்தப்பட்டு அதன் மூலமும் வருவாய் கிடைத்தது.
ஆனால், போதிய அளவில் வருவாய் இல்லை என்ற காரணத்தை கூறி கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா கலையரங்கம் மூடியே உள்ளது.
அண்ணா கலையரங்கில் பல்வேறு நிலை பணிகளுக்காக நியமிக்கப்பட்ட 18 பேரும் தற்போது வரை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் அயல் பணியாக பணியாற்றி வருகின்றனர்.
பரப்பான சாலையில் இயங்கிய அண்ணா கலையரங்கம் மூடியே இருப்பதால் இருக்கைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அண்ணா சாலையில் அண்ணாவின் பெயரால் இயங்கிய அண்ணா கலையரங்கம் இன்று அடையாளம் இழந்து காணப்படுகிறது. சகல வசதிகளுடன் இருக்கும் அண்ணா கலையரங்கை மீண்டும் புதுப்பித்தால் திரைப் படங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் வசதியாக இருக்கும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அண்ணா கலை அரங்கத்தினை புதுப்பித்து பல்நோக்கு அரங்கமாகவும், வணிக வளாகம், சுற்றுப்புற அங்காடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மற்றும் அரசு துணை செயலாளர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னருடைய சமாதியான முத்து மண்டபத்தின் சுவற்றிற்கு வண்ணம் பூசிடவும், கழிப்பிட வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அழைத்து சென்றபோது போலீசாரின் பிடியில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் சல்மான் (வயது20). தனியாக செல்பவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தார். இது சம்பந்தமாக வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு சல்மானை பிடித்து கைது செய்தனர்.
அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவதற்காக டோல்கேட் அருகே உள்ள நீதிபதிகள் குடியிருப்பிற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது போலீசாரின் பிடியில் இருந்து சல்மான் தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து வேலூர் மாநகரில் உள்ள பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். நள்ளிரவில் கொணவட்டம் பகுதியில் பதுங்கியிருந்த சல்மானை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மீண்டும் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடியது சம்பந்தமாக பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் சல்மான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் பிடியில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் நேற்றிரவு வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவிகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வு தேவை என டாக்டர் அறிவுரை வழங்கினார்.
வேலூர்:
வேலூர் தோட்டப் பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில் மகப்பேறு மருத்துவர் சுமிதா லட்சுமி கலந்து கொண்டு பேசியதாவது:-
பெண்களுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு வேண்டும். மாணவ மாணவிகள் பேட் டச் குட் டச் குறித்து தெரிந்திருக்கவேண்டும். தங்களை பாதுகாத்து கொள்ள தெரியவேண்டும்.
ஒருவர் தொடுகிறார் என்றால் அவர் எதற்காக தொடுகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த 2018-ம் ஆண்டு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 124 நாள் புகார்கள் வந்தன. 2019-ம் ஆண்டில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகார் 500-ஆக அதிகரித்தது.
15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 23 லட்சம் பேருக்கு புதிதாக எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாலியல் குறித்த கல்வி விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கவிதா குமாரவேல் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் உட்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடியதால் இயல்புநிலை திரும்பியது.
வேலூர்:
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை கள் தொழிலாளர் விரோத திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நேற்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த போராட்டம் காரணமாக நேற்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 75 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. மொத்தமுள்ள 614 பஸ்களில் 100-க்கும் குறைவான பஸ்கள் மட்டுமே மட்டுமே இயக்கப்பட்டன. 2-வது நாளான இன்று 90 சதவீதத்துக்கு மேல் பஸ்கள் இயக்கப்பட்டன.
வேலூரில் இருந்து சென்னை செல்லக் கூடிய அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருவண்ணாமலை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடிய பஸ்கள் கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும் வழக்கம் போல ஓடியது.
இதேபோல திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று அனைத்து பஸ்களும் ஓடியது.இதனால் இயல்புநிலை திரும்பியது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. இன்று ஏராளமான ஆட்டோக்கள் ஓடியது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் வங்கி ஊழியர்கள் உள்ளனர். இதில் இன்று 2- வது நாளாக 1,300 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் வங்கி அலுவலகங்கள் பணி யாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப் பட்டது. 2 நாட்களில் ரூ.400 கோடி வரை வங்கி பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டது.
தபால் நிலையங்களில் பெரும்பாலான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சிறிய தபால் அலுவலகங்கள் இன்று 2-வது நாளாக மூடப்பட்டிருந்தன இதனால் தபால் சேவைகள் பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் இன்று 90 சதவீதத்துக்கு மேல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
வங்கி மற்றும் மத்திய அரசு அலுவலக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டன.
வேலூர் சத்துவாச்சாரியில் பிஸ்கெட் வியாபாரி வீட்டில் 50 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கானாறு தெருவை சேர்ந்தவர் மாணிக்கவேல் (வயது 57). இவரது வீட்டின் பின்பக்கமாக பிஸ்கெட் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன், 2 மகள்கள் உள்ளனர்.
மாணிக்கவேல் தனது மனைவி மற்றும் மகளுடன் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் காரில் கும்பகோணத்தில் உள்ள திருமஞ்சேரி கோவிலுக்கு சென்றார். நேற்று காலை கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு 9 மணியளவில் மாணிக்கவேல் குடும்பத்துடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மாணிக்கவேல் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது அறைகளில் ஆங்காங்கே துணிகள், பொருட்கள் சிதறிக்கிடந்தன.
பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது.
இது குறித்து அவர் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன்பாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் மாணிக்கவேல் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாணிக்கவேலின் குடும்ப நிகழ்வுகளை நன்கு அறிந்த மர்ம கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகை மாதிரிகளை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய் வீட்டினுள் மோப்பம் பிடித்தது. அந்தத் தெருவில் சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
பின்னர் போலீசார் அந்த தெருவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் ஒரு கேமராவில் அந்தத்தெருவில் நள்ளிரவில் பைக்கில் கொள்ளையர்கள் வந்தது தெரியவந்ததுள்ளது. கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளது. அவர்கள் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 3 பேர் கும்பல் பணத்தை திருடி சென்றனர்.
அதில் ஈடுபட்ட 3 பேரும் சிறுவர்கள் தான். அந்த கும்பலுக்கு இதில் தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் அரியூரில் திருடுபோன நகையில் 15 பவுனை வீட்டில் வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த அரியூர் நம்பிராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். இவர் குடும்பத்துடன் கடந்த 21-ந்தேதி அதிகாலை செங்கத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்று விட்டு காலை 11 மணிக்கு வீடு திரும்பினார்.
தொடர்ந்து பீரோவில் நகைகள் வைக்கும்போது அங்கு நகைப்பெட்டியில் வைத்திருந்த நகைகள் எண்ணிக்கை குறைந்திருந்தது.
இதனால் சந்தேகமடைந்து நகைப்பெட்டியில் இருந்த நகைகளை கணக்கு பார்த்தபோது 27 பவுன் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரிரு நாட்களுக்கு முன்னர் வீட்டின் முன்பகுதியில் வைக்கப்பட்டுள்ள மீன்தொட்டி அருகே ஒரு கவரில் 15 பவுன் நகைகள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது.
இதைக்கண்ட குடும்பத்தினர் மாயமான நகைகளில் பாதி மட்டும் இங்கு எப்படி? வந்தது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
போலீசாரும் திருடுபோன நகைகளை கண்டறிவதை விட பாதி நகைகளை யார் கொண்டு வந்து வைத்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் வருகிற 1-ந்தேதி முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
காட்பாடி ரெயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட உள்ளதால் வருகிற 1&ந் தேதி முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காட்பாடி ரெயில்வே மேம்பால ஓடுதளத்தின் இணைப்புகள் வலுவிழந்து காணப்படுகிறது. அவற்றை சரி செய்வதற்கான பணியில் ரெயில்வே நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையொட்டி முதற்கட்டமாக கடந்த 19-ந்தேதி முதல் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. கனரக வாகனங்கள் மாற்றுப்பாதை வழியாக சித்தூர், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து வாகன போக்குவரத்தையும் நிறுத்தி ரெயில்வே மேம்பாலம் பழுது பார்க்கும் பணி தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் இருந்து சித்தூர் செல்லும் அனைத்து பஸ்களும் மீன்மார்க்கெட் அருகே உள்ள தற்காலி பஸ்நிலையத்தில் இருந்து வி.ஐ.டி., இ.பி.கூட்ரோடு, சேர்க்காடு வழியாகவும்,
சித்தூரில் இருந்து வேலூர் வரும் பஸ்கள் சேர்க்காடு, இ.பி.கூட்ரோடு, வி.ஐ.டி. வழியாக தற்காலிக பஸ்நிலையத்துக்கும், குடியாத்தத்தில் இருந்து வேலூர் வரும் பஸ்கள் லத்தேரி, காட்பாடி கூட்ரோடு, கிறிஸ்டியான்பேட்டை, டெல் வரையிலும், அங்கிருந்து குடியாத்தம் வரை செல்லும் பஸ்கள் அதே பாதையிலும், குடியாத்தம் முதல் ஆற்காடு வரை செல்லும் பஸ்கள் லத்தேரி பிரிவு வரையிலும், மீதமுள்ள பஸ்கள் சித்தூர் பஸ்நிலையம் முதல் வி.ஐ.டி. இ.பி.கூட்ரோடு, திருவலம், ஆற்காடு வரையிலும் செல்ல வேண்டும்.
வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் வாகனங்கள் வேலூர் பழைய பஸ்நிலையம், சித்தூர் பஸ்நிலையம், வி.ஐ.டி., இ.பி.கூட்ரோடு, சேர்க்காடு, வள்ளிமலை வழியாக சோளிங்கர், திருத்தணி செல்ல வேண்டும்.
கிறிஸ்டியான் பேட்டையில் இருந்து சித்தூர் பஸ்நிலையம் வரும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்றவை வள்ளிமலை கூட்ரோடு, காமராஜபுரம், ரெயில்வே நுழைவுபாலம், பழைய காட்பாடி வழியாக சித்தூர் பஸ்நிலையமும், வேலூரில் இருந்து கிறிஸ்டியான்பேட்டை செல்லும் வாகனங்கள் சித்தூர் பஸ்நிலையம், பழைய காட்பாடி, ரெயில்வே நுழைவுபாலம், காமராஜபுரம், வள்ளிமலை கூட்ரோடு வழியாகவும் செல்ல வேண்டும்.
கிறிஸ்டியான்பேட்டை, கரசமங்கலம், லத்தேரியில் இருந்து வேலூர் செல்லும் கார், இலகுரக கனரக வாகனங்கள் ஜாப்ராபேட்டை, கழிஞ்சூர், விருதம்பட்டு வழியாக செல்லவும் மாற்று வழித்தடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காட்பாடி ரேயில்வே மேம்பாலப் பணி ஒரு மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது. அதுவரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.