என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல்

    ஆந்திராவில் இருந்து பஸ்சில் கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    வேலூர்:

    தமிழக ஆந்திர எல்லையான வேலூர் கிறிஸ்டியான் பேட்டை சோதனைச்சாவடியில் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்&இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த தமிழக அரசு பஸ்சில் சோதனை செய்தனர்.

    அப்போது பஸ்சில் இருந்த 3 பயணிகளின் கொண்டு வந்த பையில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இது எடுத்து அவர்களை காட்பாடி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சேர்ந்த ஜோதிராஜ் (27), கோபி (30), சுப்பாராவ் (25) எனவும் ஆந்திராவில் இருந்து விழுப்புரத்திற்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது அவற்றின் மதிப்பு ரூ 2.80 லட்சம் ஆகும் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×