என் மலர்tooltip icon

    வேலூர்

    • 50-க்கு மேற்பட்டோர் பொழுது போக்குக்காக ஏறி அமர்ந்திருந்தனர்.
    • 2 பேர் படுகாயம்.

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லல குப்பம் கிரா மத்தில் நேற்று கெங்கையம் மன் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவின் போது ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை சேர்ந்த லோகநாதன் என்பவர் ரங்க ராட்டினம் அமைத்திருந்தார்.

    நேற்று மாலை 6.45 மணியளவில் இந்த ராட்டினத்தில் பல்லல குப்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என 50-க்கு மேற்பட்டோர் பொழுது போக்குக்காக ஏறி அமர்ந்திருந்தனர்.

    அப்போது ராட்டி னத்தின் நடுப்பகுதியின் அச்சு முறிந்து ராட்டினம் பயங் கர சத்தத்துடன் ஒரு பக்கமாக சரிந்தது. இதனால் திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் அலறி கூச்சலிட்டனர். ராட்டினம் ஒரு பக்கமாக சரிந்ததில் யாருக்கும் உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை.

    இந்த விபத்தில் பல்லல குப்பம் கிராமத்தை சேர்ந்த சபரீசன் (10), செண்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சைதன்யா ( 11 ) ஆகிய 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    உடனடியாக இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனை, மேல் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக பேரணாம்பட்டு வருவாய் துறையினர், மேல் பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

    • ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு
    • ஓராண்டில் பணி முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    வேலூர்:

    வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

    இங்கு வரும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளியூர்க்காரர்கள் ஆற்காடு ரோட்டில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி உள்ளனர். இவர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதால் ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    ஒருவழிப்பாதை, சாலைகளில் தற்காலிகத் தடுப்புகள் என பல்வேறு மாற்றங்கள் செய்தாலும் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைப்பது என்பது எட்டாக்கனியாக உள்ளது.

    சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வருபவர்களுக்கு சுரங்க நடை பாதை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும் என சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வேலூர் மக்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் ஆற்காடு ரோட்டில் சி.எம்.சி. ஆஸ்பத்திரி முன்பு சுரங்க நடைபாதை அமைக்க அரசு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    இதனையடுத்து இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ, . மேயர் சுஜாதா ஆனந்த குமார் ஆகியோர் ஆற்காடு ரோட்டில் சிஎம்சி ஆஸ்பத்திரி முன்பு சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    சுரங்க நடைபாதை எந்த இடத்தில் அமைத்தால் வசதியாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து சிஎம்சி நிர்வாகத்தினரிடம் சுரங்கப்பாதை அமைக்க இடம் அளிப்பது குறித்தும் எந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்தனர்.

    இது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:- ஆற்காடு ரோட்டில் சி.எம்.சி. ஆஸ்பத்திரி முன்பு சுரங்க நடைபாதை அமைக்க ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இதற்கான இடம் தேர்வு குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது.

    ஓராண்டு காலத்தில் சிறந்த சுரங்க நடை பாதை பணி முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி கமிஷ்னர் அசோக்குமார், மாநகராட்சி கவுன்சிலர் உடனிருந்தனர்.

    • ஆபாச வார்த்தைகளால் பேச்சு
    • டாஸ்மாக் ஊழியருக்கு மிரட்டல்



    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஓசியில் மது கேட்டு டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் ரகளையில் ஈடுபட்டார்.



    வேலூர்:

    வேலூர் தோட்ட பாளையத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று தினமும் ஓசியில் சரக்கு கேட்டு வந்தார். பணம் தராமல் சரக்கு தர முடியாது என ஊழியர்கள் கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசர் சுந்தர விஜி பணியில் இருந்தார். அங்கு வந்த சின்னத்தம்பி ஓசியில் சரக்கு கேட்டார். பணம் இல்லாமல் சரக்கு தரமுடியாது என சுந்தரவிஜி கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த சின்னத்தம்பி கடை முன்பு ரகளையில் ஈடுபட்டார். மேலும் ஆபாச வார்த்தைகளால் பேசி சுந்தர விஜிக்கு மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து சுந்தர விஜி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஓசி மது கேட்டு ரகளை செய்த சின்னத்தம்பியை தேடி வருகின்றனர்.

    • பைக்குகள் நேருக்கு நேர் மோதியது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 23) ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் கணியம்பாடி சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கனி கனியான் கிராமம் அருகே வந்தபோது எதிரே மேற்கு கொல்லைமேடு பகுதியை சேர்ந்த கார்பெண்டர் உதயகுமார் (35) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    எதிர்பாராத விதமாக இருவரது பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜய் மற்றும் உதயகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கராத்தே, ஜூடோ, சிலம்பம், யோகா பயிற்சி
    • 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதக்கம் பெற்றனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் அரிமா மார்ஷல் ஆர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகடமி சார்பில் ஒரு மாதம் கோடை கால தற்காப்பு கலை பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கராத்தே, ஜூடோ, சிலம்பம், யோகா உள்ளிட்ட தற்காப்பு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலாளர் கேஎம்.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜூடோ சங்க செயலாளர் சி.ஜே.சக்திவேல், நகரமன்ற உறுப்பினர் சி.என்.பாபு, யோகா பயிற்சியாளர்கள் விவேகானந்தன், மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை பயிற்சியாளர் கராத்தே யுவராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ, குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆகியோர் கலந்துகொண்டு கோடைக்கால தற்காப்பு கலை பயிற்சி முகாம் பெற்ற 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

    முன்னதாக மாணவர்களின் தற்காப்பு கலை நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சிலம்பு மாஸ்டர் ஜம்புலிங்கம், கராத்தே உதவி பயிற்சியாளர்கள் ஆர்.ராஜேஷ் ஸ்ரீஹரி, ஏ.ருத்ரா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பசுமையை காப்போம், சுற்றுப்புறத்தை தூய்மையாக காப்போம் என உறுதிமொழி
    • 5 வகையான 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் ஸ்ரீ அபிராமி மகளிர் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவிகள் பங்கேற்கும் பசுமை தினம் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் எம்.என்.ஜோதிகுமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் பொருளாளர் கே.முருகவேல், கல்லூரியின் முதல்வர் ஆர்.எஸ்.வெற்றிவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஸ்ரீகாந்த் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமையை காப்போம், சுற்றுப்புறத்தை தூய்மையாக காப்போம் என மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் தொடர்ந்து மாணவிகளுக்கு 5 வகையான 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அக்னி நட்சத்திரத்தின் பெரும்பாலான நாட்கள் மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது.
    • வேலூரில் நேற்று அதிகபட்சமாக 106.4 டிகிரி திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 100.2 டிகிரியும் வெயில் சுட்டெரித்தது.

    வேலூர்:

    வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அக்னி நட்சத்திரம் காலங்களில் வெயில் கோரத்தாண்டவம் ஆடும். கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி அக்னி நட்சத்திர வெயில் நிறைவடைந்தது. ஆனாலும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கும் முன்பே 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்தது.

    அதன் பிறகு அக்னி நட்சத்திர நாட்களில் எதிர்பாராமல் பெய்த மழை காரணமாக வெயில் உச்சத்தில் இருந்து பொதுமக்கள் தப்பினர்.

    அக்னி நட்சத்திரத்தின் பெரும்பாலான நாட்கள் மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது.

    அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு வெயில் பாதிப்பு ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. தொடர்ந்து 4 நாட்களாக வெயில் அளவு 100 டிகிரியை கடந்து வாட்டி வதைக்கிறது. இரவு நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. பொதுமக்கள் தூங்க முடியாமல் படாதபாடுபட்டு வருகின்றனர்.

    வேலூரில் நேற்று அதிகபட்சமாக 106.4 டிகிரி திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 100.2 டிகிரியும் வெயில் சுட்டெரித்தது. காலை 11 மணியிலிருந்து வெயில் பாதிப்பு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    நேற்று காலையில் இருந்தே சுட்டெரித்த கோடை வெயிலுக்கு ஆறுதல் தரும் வகையில் மாலை 5 மணியளவில் வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் திடீரென மேகம் மந்தமாக காணப்பட்டது.

    தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் வேலூர் காட்பாடி, கே.வி குப்பம், ஒடுகத்தூர் என பரவலாக காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் குடியாத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.

    குடியாத்தம் அடுத்த செண்டத்தூர் கிராமத்தில் இடிதாக்கி 2 தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்து கருகி நாசமானது. தட்டப்பாறை கிராமத்தில் வீட்டில் இருந்த தென்னை மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது.

    அதிர்ஷ்டவசமாக இதில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. அணைக்கட்டு அருகே அகரம் நெடுஞ்சாலையில் இருந்த புளிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், திருப்பத்தூர், நாற்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    மாதனூர் அருகே உள்ள பாலூர் ஊராட்சி பட்டுவாண்பட்டியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி சரஸ்வதி (வயது 45) என்பவர் நேற்று இரவு 8 மணிக்கு தனது விவசாய நிலத்தில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சரஸ்வதி அண்ணாமலை என்பவரது விவசாய நிலத்தின் பழமையான மாட்டுக்கொட்டகையில் ஒதுங்கி இருந்தார்.

    அப்போது பலத்த காற்று வீசியது. இதில் பழமையான மரம் ஓன்று மாட்டுக் கொட்டகை மீது சாய்ந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய சரஸ்வதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ஆம்பூர் தாலுகா போலீசார் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மாலை 5 மணிக்கு மேல் சுமார் 30 நிமிடத்திற்கு மேல் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • 85 சதவீத பணிகள் நிறைவு.
    • மணல் கடத்தலை தடுக்க 12 குழுக்கள் அமைத்து கண்காணிப்பு.

    வேலூர்:

    வேலூரில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 20 அல்லது 21-ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.

    இதன் காரணமாக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர்ஆனந்த் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-

    புதிய பஸ் நிலையத்தில் விளக்குகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் மற்றும் பயணிகளின் இருக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை தேவைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    மீதமுள்ள பணிகள் வரும் ஒரு வார காலத்திற்குள் முழுவதுமாக முடிக்கப்படும்.வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் அதிக அளவில் மணல் காணப்படுகிறது.

    இந்த மணலை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மணல் கடத்திச் செல்வதாக புகார்கள் வருகின்றன.

    மணல் திருட்டை தடுக்க வேலூர் மாவட்டத்தில் 48 பேர் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.

    • 2 நாட்களாக சாமி வீதி உலா.
    • காப்பு அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

    வேலூர்:

    சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் அம்மன் அலங்கரித்து உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் மறு காப்பு அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

    கடந்த 2 நாட்களாக அம்மனை அலங்கரித்து வீதி உலா நடந்து வருகிறது. இன்று செங்குந்தர் சமுதாய கமிட்டி செயலாளர் எஸ்.எம்.சுந்தரம் தலைமையில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பொருளாளர் மார்க்கபந்து, சத்துவாச்சாரி முன்னாள் நகர மன்ற தலைவர் முருகன், கமிட்டி உறுப்பினர்கள் கே.இ. திருநாவுக்கரசு, எஸ்.எம்.செல்வராஜ், எஸ்.டி.மோகன், பார்த்திபன், காலத்தி, எஸ்.லட்சுமணன், எஸ்.பி.ஈஸ்வரன், பி.ராமச்சந்திரன் மற்றும் கவுன்சிலர் சுமதி மனோகரன், முன்னாள் கவுன்சிலர் பி. கிருபானந்தம், பிஎஸ்.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 2 பேர் படுகாயம்
    • லாரி டிரைவர் தப்பி ஓட்டம்

    வேலூர்:

    மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் அக்பர்பாஷா. இவரது மகன் அப்துல்ஜலால் (வயது 18).

    இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களான அப்துல்ரகுமான், அங்சலா ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் ரத்தினகிரியை அடுத்த மேலகுப் பம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது.

    இதில் அப்துல்ஜலால் சம் பவ இடத்திலேயே பரிதாப மாக இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அப்துல் ஜலால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர் .

    • வனத்துறை சார்பில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்
    • 200 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரகத்தில் வனத்துறை சார்பில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி திருமகள் ஆலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு தலைமை தாங்கினார். வனவர் முருகன், வனக்காப்பாளர்கள் கணேசன், நீலகண்டன், வனராஜ் சிவா, சுகந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வனவர் மாசிலாமணி வரவேற்றார்.

    நிகழ்ச்சிக்கு குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், குடியாத்தம் நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி முதல்வர் பொறுப்பு வாசுகி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

    நகர்மன்ற உறுப்பினர் மனோஜ், ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன், நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ.என்.விஜயகுமார் கலந்து கொண்டனர்.

    • தூய்மை கான மக்கள் இயக்கம்
    • மரம் நடும் விழா

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு நகராட்சி சார்பில் தூய்மைகாண மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலமும். மரம் நடும் விழாவும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகர மன்றத் தலைவர் வி.பிரேமா வெற்றி வேல் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹமத், நகரமன்ற உறுப்பினர்களானவை. அதிகுர்ரஹ்மான். பி.நாகஜோதி பாபு, பி.ஜானகி பீட்டர், எஸ்.சுல்தானா அப்துல் பாசித், சி.அப்துல் அஹமது, தன்வீரா பேகம். ஜி.முஜமில் அஹமத், ஆளியார் சுல்தான் அகமது எல் சின்னா லாசர். டி அப்துல் ஜமீல். அஹமத் பாஷா. நூரேசபா அர்ஷத் எம் பாரதி இந்திரா சரவணன் நஜிஹா ஜிபேர் அஹமத். நகராட்சி பொறியாளர். கோபு துப்புரவு ஆய்வாளர் சீனிவாசன் இளநிலை உதவியாளர். பி சுரேஷ் குமார் மேலாளர் முரளிதரன் விஜயகுமார் ராஜ்குமார் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகராட்சி ஆணையாளர் த வ சுபாஷினி வரவேற்புரை யாற்றினார்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×