என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர்ஆனந்த் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், நந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வேலூர் புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும்
- 85 சதவீத பணிகள் நிறைவு.
- மணல் கடத்தலை தடுக்க 12 குழுக்கள் அமைத்து கண்காணிப்பு.
வேலூர்:
வேலூரில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 20 அல்லது 21-ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.
இதன் காரணமாக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர்ஆனந்த் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-
புதிய பஸ் நிலையத்தில் விளக்குகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் மற்றும் பயணிகளின் இருக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை தேவைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
மீதமுள்ள பணிகள் வரும் ஒரு வார காலத்திற்குள் முழுவதுமாக முடிக்கப்படும்.வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் அதிக அளவில் மணல் காணப்படுகிறது.
இந்த மணலை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மணல் கடத்திச் செல்வதாக புகார்கள் வருகின்றன.
மணல் திருட்டை தடுக்க வேலூர் மாவட்டத்தில் 48 பேர் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.






