என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Walibar riot in front of Tasmac store"

    • ஆபாச வார்த்தைகளால் பேச்சு
    • டாஸ்மாக் ஊழியருக்கு மிரட்டல்



    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ஓசியில் மது கேட்டு டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் ரகளையில் ஈடுபட்டார்.



    வேலூர்:

    வேலூர் தோட்ட பாளையத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று தினமும் ஓசியில் சரக்கு கேட்டு வந்தார். பணம் தராமல் சரக்கு தர முடியாது என ஊழியர்கள் கூறியுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசர் சுந்தர விஜி பணியில் இருந்தார். அங்கு வந்த சின்னத்தம்பி ஓசியில் சரக்கு கேட்டார். பணம் இல்லாமல் சரக்கு தரமுடியாது என சுந்தரவிஜி கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த சின்னத்தம்பி கடை முன்பு ரகளையில் ஈடுபட்டார். மேலும் ஆபாச வார்த்தைகளால் பேசி சுந்தர விஜிக்கு மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து சுந்தர விஜி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஓசி மது கேட்டு ரகளை செய்த சின்னத்தம்பியை தேடி வருகின்றனர்.

    ×