என் மலர்
நீங்கள் தேடியது "பசுமை திட்டம்"
- பசுமையை காப்போம், சுற்றுப்புறத்தை தூய்மையாக காப்போம் என உறுதிமொழி
- 5 வகையான 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் ஸ்ரீ அபிராமி மகளிர் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவிகள் பங்கேற்கும் பசுமை தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் எம்.என்.ஜோதிகுமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் பொருளாளர் கே.முருகவேல், கல்லூரியின் முதல்வர் ஆர்.எஸ்.வெற்றிவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஸ்ரீகாந்த் கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பசுமையை காப்போம், சுற்றுப்புறத்தை தூய்மையாக காப்போம் என மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் தொடர்ந்து மாணவிகளுக்கு 5 வகையான 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






