என் மலர்tooltip icon

    வேலூர்

    • பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்
    • 50 மதிப்பெண்கள் கேள்விகள் இடம் பெறும்.

    வேலூர்,

    பள்ளி மாணவர்களி டையே தபால் தலை சேகரிப்பில் ஆர்வத்தை துாண்டும் வகையில் , இந்திய அஞ்சல் துறை சார்பில் ' தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா ' திட்டம் செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் ஊக்கத்தொகையாக ரூ.6 ஆயிரத்தை மாணவர்கள் பெறலாம்.

    மூலம் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் நல்ல கல்வித்தகுதி மற்றும் த்பால் தலை சேகரிப்பை பொழுதுபோக்காக கொண்ட மாணவர்களுக்கு, நடத்தப்படும் வினாடி- வினா எழுதும் போட்டி மற்றும் தபால் தலைகள் திட்டம் ஆகிய இரு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்படும்.

    முதலாம் நிலை தேர் வில் வினாடி, வினாவுக்கு 50 மதிப்பெண்கள் கேள்விகள் இடம் பெறும்.

    இதில் , வரலாறு , அறிவி யல், கலாச்சாரம் , விளையாட்டு, பிராந்திய மற்றும் தேசிய சார்ந்த புவியியல் மற்றும் தபால் தலை ஆகிய தலைப்புகளில் கேள்விகள் இடம் பெறும்.

    இந்த போட்டியில் வெற்றி பெறு பவர்கள் 2-ம் நிலைக்கு தகுதி பெறுவார்கள். 2-ம் நிலை தேர்வில் தபால் தலைகள் திட்டம் என்ற தலைப்பில் தேர்வு நடக்கும். இதில், 16 தபால் தலைகளுக்கு மிகாமல் 500 வார்த்தைக ளுக்குள் தங்களது செயல் பாட்டை சமர்ப்பிக்க வேண்டும்.

    இதில், வெற்றி பெறுவோருக்கு மேற்கு றிப்பிட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    'ஸ்பார்ஷ்' விண்ணப்பம் சமர்ப்பிக்க வரும் 29-ந் தேதி கடைசி நாளாகும். இதற்கான தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 1 ம் தேதி நடக்கும்.

    வேலுார் மாவட்டத்தில் இந்த தேர் வில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் தபால் துறை ஊழியர்கள் மூலம் கோட்ட கண்காணிப்பாளர் அலுவ லகம், வேலுார் கோட்டம், வேலுார்-632001 என்ற முகவரிக்கு விண்ணப்ப ங்களை அனுப்புமாறு கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.

    • வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
    • டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டனர்

    வேலூர்:

    வேலூர் நேதாஜி மைதானத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டத்தில் ஏற்படும் கலவரங்களை தடுப்பது குறித்து கராத்தே வகுப்பு பயிற்சி ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளித்தனர்.

    மேலும் மது போதையில் பொது இடங்களில் கத்தியை காட்டில் மிரட்டுபவர்களை அடக்குவது, அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    • குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில்
    • ஏராளமான பெண்கள் பங்கேற்பு

    குடியாத்தம்

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை குடியாத்தம் முத்தாலம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்துவது வழக்கம்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில் வளாகத்திலேயே சமூக இடைவெளி கடைப்பிடித்து பால்குட ஊர்வலம் நடைபெற்று கெங்கையம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு 2 ஆண்டுகளுக்குப் பிறகு கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கெங்கையம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. குடியாத்தம் தரணம்பேட்டை முத்தாலம்மன் கோவிலில் பால்குட ஊர்வலத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கெங்கையம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் தேவகி கார்த்திகேயன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பால்குட ஊர்வலத்தை முன்னிட்டு மூலவர் கெங்கையம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி டி.திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.எஸ்.சம்பத், தர்மகர்த்தா கே.பிச்சாண்டி, திருப்பணி கமிட்டி தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்ளிட்ட விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

    • குடியாத்தம் நகராட்சி சார்பில் நடந்தது
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசு

    குடியாத்தம்

    குடியாத்தம் நகராட்சி சார்பில் லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கான தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் வி.சடகோபன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் க.ரம்யா, மேலாளர் என். கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ. திருநாவுக்கரசு கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாணவர்கள் பிளாஸ்டிக் நெகிழியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். சிறப்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது. தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் ஆட்டோ மோகன், தூய்மை பாரதம் மேற்பார்வையாளர் ராஜேந்திரன், ஜம்புலிங்கம் உள்பட துப்புரவு மேற்பார்வையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.

    • குடியாத்தம் ஒன்றியத்தில் நடந்தது
    • 15-வது நிதி குழு பணிகள் குறித்து கலந்துரையாடல்

    குடியாத்தம்,

    வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியமான குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவர்களுடன் அதிகாரிகள் கலந்து கொண்ட 15 நிதிக்குழு மானியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் கே.கே.வி. அருண்முரளி, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் மமதாஇமகிரிபாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கதிரவன், தமிழ்வாணன், தமிழ்மாறன், பிரதீப் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர்கள் கே.பி.சுப்பிரமணி, அகிலாண்டேஸ்வரி, எஸ்.பி. சக்திதாசன், பி.கே.குமரன், துளசிராமுடு, முனிசாமி, சாந்திமோகன், லாவண்யா ஜெயப்பிரகாஷ் உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க அலுவலகம் சீல் வைப்புக்கும் தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
    • கொரோனாவால் பாதிக்கபடுபவர்கள் 2 நாட்களில் சரியாகி விடுகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தை கடந்த 30-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சில பணிகள் நிறைவடையாததால் பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது.

    இதனை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வருவதில் நிறைய இடையூறு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    கண்டலேறுவிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும் போது தண்ணீரை அங்குள்ளவர்கள் எடுத்து கொள்கின்றனர்.

    அ.தி.மு.க அலுவலகம் சீல் வைப்புக்கும் தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றுதான். எங்களுக்கு இருவரின் தயவும் தேவையில்லை.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விவகாரத்தில் அரசின் விதிமுறைப்படி விழா அழைப்பிதழில் பெயரை போட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை பின்பற்றப்படவில்லை.

    கவர்னர் சனாதன தர்மம் பற்றி பேசுகிறார் என்றால் அவர் சனாதனவாதி.தமிழ்நாட்டில் கொரோனா கட்டுபாட்டில் இருந்தது. ஆனால் இப்போது கட்டுபாட்டை மீறி வருகிறது. ஆனாலும் பழைய வேகமில்லை. கொரோனாவால் பாதிக்கபடுபவர்கள் 2 நாட்களில் சரியாகி விடுகின்றனர்.

    வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரியில்லை என குற்றம் சாட்டுபவர்களில் நானும் ஒருவன். அதற்கு மாநகராட்சி கமிஷனரும், கலெக்டரும் தான் பதில் சொல்ல வேண்டும்.மேல் அரசம்பட்டு அணை விரைவில் கட்டப்படும்.

    பாலாற்றின் குறுக்கே திருப்பாற்கடல், அரும்பருத்தி, சேண்பாக்கம், பொய்கை, மற்றும் அகரம் ஆறு, கவசம்பட்டு ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-வது மண்டல குழு கூட்டத்தில் பரபரப்பு
    • 25 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் நரேந்திரன் தலைமையில் நடந்தது.இதில் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலர்கள் ஆர்.பி‌. ஏழுமலை, சதீஷ்குமார் பாச்சி, நியமன குழு உறுப்பினர் கணேஷ்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 24-வது வார்டு கவுன்சிலர் சுதாகர் பேசுகையில்:-

    என்னுடைய வார்டில் 3 வருடத்திற்கு மேலாக பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார். மேலும் அவர் கொண்டு வந்த புகைப்படங்களை வீசி எறிந்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    26 -வது வார்டு கவுன்சிலர் சேகர் சத்துவாச்சாரி 57 முதல் 64 வரை உள்ள தெருக்களில் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. மேலும் நாளுக்கு நாள் நாய்கள், பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

    எனது வார்டில் கால்வாய் மற்றும் சாலை வசதி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிவறைகள் சுத்தம் செய்ய பணியாளர்கள் வேண்டுமென கேட்டிருந்தனர். அதனை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் பேசிய மேயர் சுஜாதா மாநகராட்சி பகுதியில் அனைத்து வசதிகளும் துரிதமாக நடந்து வருகிறது. விரைவில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படும் என்றார்.

    கூட்டத்தில் 2-வது மண்டலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து 25 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வேலூரில் அர்ஜுன் சம்பத் பேட்டி
    • சாதி மத சின்னங்கள் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வருவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

    வேலூர்:

    இந்து மக்கள் கட்சி சார்பில் 75- வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் சுதந்திரப் போராட்ட நினைவிடங்கள் தியாகச் சின்னங்களுக்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இதற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று வேலூர் கோட்டைக்கு வந்தார்.அப்போது அவர் கூறியதாவது

    75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் இந்து மக்கள் கட்சி சார்பில் சுதந்திர போராட்ட தியாகச் சின்னங்களை பார்வையிட்டு மரியாதை செலுத்தி வருகிறோம் .இதற்கு போலீசார் தடை வைத்துள்ளனர். இதனை நீக்க வேண்டும்.

    எனது வாகனத்தில் எழுதப்பட்ட வாசகங்களை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனது சொந்த வாகனத்தில் எழுதப்பட்ட வாசகத்தை மறைப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.

    இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளாகும். அவர்தான் பள்ளிகளில் ஜாதி மதத்தை ஒழிப்பதற்காக சீருடை கொண்டு வந்தார்.இலவச உணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் தற்போது அரசு பள்ளிகளின் ஜாதி மத சின்னங்களோடு மாணவர்கள் வருகின்றனர்.

    வேலூர் வாணியம்பாடி பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு மத அடையாளங்களோடு சென்று வருகின்றனர்.

    அது போன்ற சாதி மத சின்னங்கள் அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இது சம்பந்தமாக தற்போது புதிய விதிமுறைகளை அரசு கொண்டுவந்துள்ளது.அதனை வரவேற்கிறேன். மதம் அடிப்படையில் கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை இந்து மாணவ மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்.

    முதல்அமைச்சர் மு க ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற வரவேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டால் தமிழகத்திலும் கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த முடியும்.

    அ.தி.மு.க.வில் தற்போது உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. மோதல் ஏற்பட்ட காரணத்தைக் காட்டி அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை தொண்டர்களின் ஆதரவால் இடைக்கால பொது செயலாளராக தேர் ந்தெடுக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க. தொண்டர்கள் அந்த கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் ஒன்றிணைந்து காப்பாற்றுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீட்டு பண மோசடியில் நடவடிக்கை
    • குடியாத்தத்தில் பரபரப்பு

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஓட்டல்களை நடத்தி வருபவர் பி.சரவணன் வயது 38 இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவரை நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூர் போலீசார் சீட்டுப்பணம் மோசடியில் கைது செய்தனர்.அப்போது கைது செய்த வந்த போலீசாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா போலீசார் மற்றும் தமிழக போலீசார் கூறியதாவது:-

    தற்போது குடியாத்தம்-சித்தூர் சாலையில் பாக்கம் கிராமம் அருகே உள்ள குருராஜா நகரில் வசித்து வருபவர் பி.சரவணன் வயது 38 முன்னாள் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் இவர் குடியாத்தத்தில் ஓட்டல்களை நடத்தி வருகிறார். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகியாக உள்ளார். சரவணன் மனைவி ஜெயப்பிரியா மற்றும் உறவினர்கள் விஜயலட்சுமி, ராகவேந்திரா ஆகியோர் சில வருடங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூர் அடுத்த எலங்கா பகுதியில் சீட்டு நடத்தி பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பெங்களூரில் அடுத்த எலங்காடவுன் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சரவணன் அவரது மனைவி ஜெயப்பிரியா உறவினர்கள் விஜயலட்சுமி, ராகவேந்திரா ஆகியோர் மீது ஒரு கோடியே 28 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கு சம்பந்தமாக நேற்று காலையில் சரவணனை குருராஜா நகரில் உள்ள அவர் வீட்டில் வைத்து பெங்களூர் போலீசார் கைது செய்ய வந்துள்ளனர். அப்போது மப்டியில் இருந்த பெ போலீசாரை கண்டவு டன் சரவணன் தன்னை சிலர் கடத்திச் செல்ல வந்து ள்ளதாக கூச்சலி ட்டு ெள்ளார். கூச்சல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து சரவணன் உடன் சேர்ந்து மப்டியில் இருந்த பெங்களூர் போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பெங்களூர் போலீசார் தங்களை காத்துக் கொள்ள கொண்டு வந்த கை துப்பாக்கியை காட்டியுள்ளனர்.

    இதனை யடுத்து பொதுமக்கள் போலீசாரை தாக்குவதை நிறுத்தி உள்ளனர். இது குறித்து உடனடியாக குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து சென்ற குடியாத்தம் போலீசார் சரவணன் மற்றும் பெங்களூர் போலீசாரை அழைத்துக் கொண்டு குடியாத்தம் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

    அவர்களிடம் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி விசாரணை நடத்தியதில் சரவணன் மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா உறவினர்கள் மீது எலங்கா டவுன் போலீஸில் வழக்கு பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சரவணன் கைது செய்ய எலங்கா டவுன் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ஸ்ரீ சில் மற்றும் இரண்டு போலீசார் உடன் வந்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து நேற்று மாலையில் ஓட்டல் அதிபர் சரவணனை பெங்களூர் போலீசார் கைது செய்து பெங்களூர் அழைத்துச் சென்றனர்.

    • வீட்டை விட்டு வெளியேறினர்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த பாபு இவரது மகன் சுரேஷ் வயது 29 டிராக்டர் டிரைவராக உள்ளார்.

    குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 20)வாணியம்பாடியில் உள்ள கல்லூரியில் பிகாம் படித்து வந்தார். சுரேஷ் நந்தினியும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்த நந்தினி காணாமல் போய்விட்டார் இதனை தொடர்ந்து நந்தினியின் பெற்றோர்கள் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் தாலுகா போலீசார் இன்ஸ்பெக்டர் கணபதி, சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் நேற்று மதியம் நந்தினி தனது காதலன் சுரேஷை திருமணம் செய்து கொண்டதாகவும் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

    அப்போது போலீசார் காதல் ஜோடியை விசாரித்த போது கடந்த 11-ந் தேதி நந்தினி வீட்டை விட்டு வெளியேறி காதலன் சுரேசுடன் திருப்பதிக்கு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டதாகவும் நந்தினியின் பெற்றோர்கள் புகார் அளித்ததால் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நந்தினியின் பெற்றோரை அழைத்த குடியாத்தம் தாலுகா போலீசார் நந்தினி மேஜர் என்பதால் அவருடைய காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    அவர்களை எந்த தொந்தரவும் தரக்கூடாது என அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து நந்தினி தனது கணவர் சுரேஷ் உடன் சென்றார்.

    • தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
    • ஏராளமானேர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    காமராஜர் பிறந்த நாளை ஒட்டி வேலூர் பேலஸ் கபே அருகே உள்ள காமராஜர் சிலைக்கு தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவனத் தலைவர் ஜோதி குமார் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    காமராஜர் கட்சி அலுவலகம் அருகே அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் 100 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன், மத்திய மாவட்ட செயலாளர் வீரவேல், மாநில துணை பொது செயலாளர் அஸ்ரத் அபித், அவைத் தலைவர் சாந்தகுமார், திருவண்ணாமலை மாவட்ட அவை தலைவர் சிவாஜி, மாநில இளைஞரணி துணைத் தலைவர் மூர்த்தி, துணை செயலாளர் ராஜ்குமார், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் அமுதா, ஒன்றிய துணை செயலாளர் ஜமுனா, அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் அன்பரசி, வேலூர் மாவட்ட பொறுப்பாளர் கஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரதீப் மற்றும் கட்சி நிர்வாகிகள் சாந்தி, கவிதா, சசிகலா, லட்சுமி, நீலா, விஜயலட்சுமி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    • 269 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடு
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பயனாளிகளுக்கு வழங்கினார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ஊரக பகுதிகளில் வீடுகள் வழங்கும் திட்டமான பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் 269 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.

    ஒரு வீட்டிற்கு அலகு தொகை ரூ.2,77,290 இதில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 மற்றும் நூறு நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளுக்கு ரூ.281 வீதம் மொத்தம் ரூ.25,290 சேர்த்து வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2021-22 - ம் ஆண்டிற்கு 7,510 வீடுகள் மத்திய அரசிடமிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு இத்திட்டத்தில் வீடு அமைக்கும் முறை வீட்டின் நிலை வாரியாக பயனாளிக்கு வழங்கப்படும் தொகை விவரம், துறை மூலம் வழங்கப்படும் கட்டுமான பொருட்கள் விவரம் மற்றும் புகார் தெரிவிக்க வேண்டிய எண் விவரங்கள் கொண்ட சிற்றேடு ஆகியவற்றை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×