என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் ஏழைகளுக்கு 7,510 வீடுகள் ஒதுக்கீடு
  X

  பிரதம மந்திரி வீட்டுகட்டும் திட்டத்தின் கீழ் கையேடுகளை கலெக்டர் குமார வேல் பாண்டியன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

  பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் ஏழைகளுக்கு 7,510 வீடுகள் ஒதுக்கீடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 269 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடு
  • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பயனாளிகளுக்கு வழங்கினார்

  வேலூர்:

  வேலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ஊரக பகுதிகளில் வீடுகள் வழங்கும் திட்டமான பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் 269 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.

  ஒரு வீட்டிற்கு அலகு தொகை ரூ.2,77,290 இதில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 மற்றும் நூறு நாள் வேலை திட்டத்தில் ஒரு நாளுக்கு ரூ.281 வீதம் மொத்தம் ரூ.25,290 சேர்த்து வழங்கப்படுகிறது.

  இந்த திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2021-22 - ம் ஆண்டிற்கு 7,510 வீடுகள் மத்திய அரசிடமிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு இத்திட்டத்தில் வீடு அமைக்கும் முறை வீட்டின் நிலை வாரியாக பயனாளிக்கு வழங்கப்படும் தொகை விவரம், துறை மூலம் வழங்கப்படும் கட்டுமான பொருட்கள் விவரம் மற்றும் புகார் தெரிவிக்க வேண்டிய எண் விவரங்கள் கொண்ட சிற்றேடு ஆகியவற்றை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×