என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "He disappeared"

    • வீட்டை விட்டு வெளியேறினர்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியை சேர்ந்த பாபு இவரது மகன் சுரேஷ் வயது 29 டிராக்டர் டிரைவராக உள்ளார்.

    குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 20)வாணியம்பாடியில் உள்ள கல்லூரியில் பிகாம் படித்து வந்தார். சுரேஷ் நந்தினியும் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந் தேதி வீட்டில் இருந்த நந்தினி காணாமல் போய்விட்டார் இதனை தொடர்ந்து நந்தினியின் பெற்றோர்கள் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் தாலுகா போலீசார் இன்ஸ்பெக்டர் கணபதி, சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் நேற்று மதியம் நந்தினி தனது காதலன் சுரேஷை திருமணம் செய்து கொண்டதாகவும் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

    அப்போது போலீசார் காதல் ஜோடியை விசாரித்த போது கடந்த 11-ந் தேதி நந்தினி வீட்டை விட்டு வெளியேறி காதலன் சுரேசுடன் திருப்பதிக்கு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டதாகவும் நந்தினியின் பெற்றோர்கள் புகார் அளித்ததால் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நந்தினியின் பெற்றோரை அழைத்த குடியாத்தம் தாலுகா போலீசார் நந்தினி மேஜர் என்பதால் அவருடைய காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    அவர்களை எந்த தொந்தரவும் தரக்கூடாது என அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து நந்தினி தனது கணவர் சுரேஷ் உடன் சென்றார்.

    ×