என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த காட்சி.

    பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • குடியாத்தம் நகராட்சி சார்பில் நடந்தது
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசு

    குடியாத்தம்

    குடியாத்தம் நகராட்சி சார்பில் லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கான தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் என் குப்பை என் பொறுப்பு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் வி.சடகோபன் தலைமை தாங்கினார். பள்ளி செயலாளர் க.ரம்யா, மேலாளர் என். கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன், நகர் மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ. திருநாவுக்கரசு கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாணவர்கள் பிளாஸ்டிக் நெகிழியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். சிறப்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்திய மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது. தொடர்ந்து காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் ஆட்டோ மோகன், தூய்மை பாரதம் மேற்பார்வையாளர் ராஜேந்திரன், ஜம்புலிங்கம் உள்பட துப்புரவு மேற்பார்வையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தூய்மை பணி ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×