என் மலர்
நீங்கள் தேடியது "He gave food to 100 people"
- தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
- ஏராளமானேர் கலந்து கொண்டனர்
வேலூர்:
காமராஜர் பிறந்த நாளை ஒட்டி வேலூர் பேலஸ் கபே அருகே உள்ள காமராஜர் சிலைக்கு தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவனத் தலைவர் ஜோதி குமார் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
காமராஜர் கட்சி அலுவலகம் அருகே அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் 100 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன், மத்திய மாவட்ட செயலாளர் வீரவேல், மாநில துணை பொது செயலாளர் அஸ்ரத் அபித், அவைத் தலைவர் சாந்தகுமார், திருவண்ணாமலை மாவட்ட அவை தலைவர் சிவாஜி, மாநில இளைஞரணி துணைத் தலைவர் மூர்த்தி, துணை செயலாளர் ராஜ்குமார், கணியம்பாடி ஒன்றிய செயலாளர் அமுதா, ஒன்றிய துணை செயலாளர் ஜமுனா, அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் அன்பரசி, வேலூர் மாவட்ட பொறுப்பாளர் கஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரதீப் மற்றும் கட்சி நிர்வாகிகள் சாந்தி, கவிதா, சசிகலா, லட்சுமி, நீலா, விஜயலட்சுமி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.






