என் மலர்tooltip icon

    வேலூர்

    • பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
    • தீமைகள் குறித்து பதாகைகள் ஏந்தி ஊர்வலம்

    குடியாத்தம்:

    தமிழக அரசின் உத்தரவின் பேரில் குடியாத்தத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடைபெற்றது.

    குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நிகழ்ச்சிக்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன் தலைமை தாங்கினார். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு குறித்தும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    முன்னதாக போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வேலுார் மாவட்டத்தில் 150 க்கும் அதிகமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது.
    • வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 101 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

    வேலுார்:

    வேலுார், திருப்பத்துார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பயிரிடப்படும் நெல், நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து, பின்னர் அரிசியாக மாற்றப்பட்டு, ரேசன் கடைகள் மூலமாக மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.

    ஒருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் 150 க்கும் அதிகமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது.

    இதில் வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 101 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

    இந்நிலையில் வேலுார் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வரும் துணை மண்டல மேலாளர் மற்றும் 2 கண் காணிப்பாளர்கள், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யாமல், அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் வாங்கியது போல, போலி பில் தயாரித்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

    இதில் கூடுதலாக ஒரு மூட்டைக்கு 5 ரூபாய் கமிஷனும் எடுத்துள்ளனர். இதுகுறித்து புகார்கள் வேலூர் மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்குச் சென்றது. இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி கவுதமன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இதில் அதிகாரிகள் மோசடி செய்தது உண்மை எனத் தெரிய வந்தது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த துணை மண்டல மேலாளர் விஜயகுமார் (வயது 51), கண்காணிப்பாளர்கள் வேலுாரைச் சேர்ந்த சுரேஷ் பாபு (49), தொரப்பாடியைச் சேர்ந்த கனிமொழி (41) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இங்கு மண்டல மேலாளராக இருந்த நாகராஜன், இதே புகாரின் பேரில், சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்
    • பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் நேதாஜி மைதானத்தில் போதை பொருள் தடுப்பு மற்றும் எதிர்ப்பு உறுதிமொழிநிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீசார் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    விழிப்புணர்வு

    நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது;

    தமிழகத்தில் கொரோனா வந்தது. அதனை முறியடித்தோம் தற்போது குரங்கு அம்மை வருகிறது என்கிறார்கள். இதெல்லாம் கண்ணுக்கு தெரிந்தவை. ஆனால் தற்போது ஒரு புது வியாதி பரவி வருகிறது.

    பள்ளி கல்லூரி மாணவர்களை போதைக்கு அடிமையாக்குகிறது.

    பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இளம் தளிர்களை கருகச் செய்கிறது.

    போதை மிட்டாய்

    மிட்டாய் மாதிரி இருக்கும் போதை பொருளை முதல் நாள் சாப்பிட்டால் போதை வரும். 2-வது நாள் பயன்படுத்த தேடும்.

    3-வது நாள் அதற்கு அடிமை ஆக்கிவிடும். பக்கத்தில் இருந்தவன் சாப்பிட்டால் அவனும் போதைக்கு அடிமையாகி விடுவான்.

    போதைக்கு அடிமையானால் சுயநினைவை விளக்க நேரிடும்.

    போதைப் பொருட்களை எதிர்ப்பவர்களை கொல்லக் கூடிய வைராக்கியத்தை கூட அது தரும்.

    ஆந்திராவில் இருந்து கடத்தி ஒரு காலத்தில் மூலை முடுக்குகளில் விற்பனை செய்யப்பட்ட போதை பொருள் தற்போது பள்ளி கல்லூரிகள் மாணவ மாணவிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது ‌இதனை தடுத்தாக வேண்டும்.

    வளர வேண்டியவர்கள் அரும்பாக இருக்கும் போதே கருகி விடும். சமுதாயம் கெட்டு போய் விடும். ஒவ்வொருவரும் நான் போதைபழக்கத்துக்கு எதிரானவன் என்ற உறுதிமொழி எடுக்க வேண்டும். போதையை ஒழிக்க சபதம் எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார் கார்த்திகேயன் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உதவி கலெக்டர் பூங்கொடி, டி ஐ ஜி ஆனி விஜயா போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி யை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

    • போலீசார் விசாரணை
    • கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்

    வேலூர்:

    கே‌.வி.குப்பம் அருகே உள்ள பி.கே.புரத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரது மனைவி லதா (வயது 49). இவரது தாய் வீடு திருவலத்தில் உள்ளது. இன்று காலை லதா அவரது தாயாரை பார்ப்பதற்காக திருவலம் வந்தார்.

    செயின் பறிப்பு

    அங்குள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நடந்து சென்றார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்தார்.

    லதா முகவரி சொல்ல முயன்றபோது திடீரென வாலிபர் லதா அணிந்திருந்த 5 பவுன் தாலிச்செயினை பறித்தார்.

    பதறி போன லதா அலறி கூச்சலிட்டார்‌ அதற்குள் வாலிபர் பைக்கில் வேகமாக சென்று தலைமறைவாகிவிட்டார்.

    விசாரணை

    இது குறித்து திருவலம் போலீசில் லதா புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 60 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்கியும் தற்போது நடைபெற்று வரும் பாரதி ஜனதா கட்சியின் ஆட்சியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத போக்கினை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறது.

    இரண்டாம் நாள் பாதயாத்திரை நேற்று தொடங்கி குடியாத்தம் வழியாக பாக்கம், ராமாலை, பரதராமி சென்றடைந்தது வழிநெடுகிலும் பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் முத்து மகாதேவன், ஆடிட்டர் கிருபானந்தம், நயீம் பரவேஸ் ஆகியோர் பேசினர்.

    குடியாத்தம் நகர தலைவர் ரங்கநாதன் வரவேற்றார்.மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி, நகர மன்ற உறுப்பினர் விஜயன், வட்டாரத் தலைவர் வீராங்கன், மாவட்ட நிர்வாகிகள் சரவணன், யுவராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விக்ரம் உள்பட ஏராளமானோர் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.

    • 3 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் நெல்லூர் பேட்டை புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துவாரகேஷ் வயது 33 குடியாத்தத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.அதே பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 18)கல்லூரி மாணவர்.

    பைக்குகள் மோதல்

    பேர்ணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகேசன் 21,துளசி நாதன் வயது 33 இவர்கள் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு நிதி நிறுவனத்தின் வேலையாக பேரணாம்பட்டு சென்று விட்டு குடியாத்தம் நோக்கி துவாரகேஷும் சக்திவேலும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் வந்து கொண்டி ருக்கும்போது முருகேசனும், துளசி நாதனும் மோட்டார் சைக்கிளில் குடியாத்தத்தில் இருந்து சொந்த கிராமமாக எருக்கும்பட்டு சென்று கொண்டி ருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

    ஒருவர் பலி

    இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நான்கு பேரும் தூக்கி வீப்பட்டனர்.

    இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலத்த காயமடைந்த துவாரகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1.30 லட்சம் திருட்டு
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கூட நகரம் ஊராட்சி பார்வதியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் கட்டிட மேஸ்திரி.

    இவரது மனைவி அஞ்சலி. இவர்கள் இருவரும்நேற்று காலையில் வழக்கம் போல் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றுள்ளனர்.

    மாலை வீட்டிற்கு இருவரும் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு இல்லாமல் திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது ஜன்னல் மீது வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற மர்ம கும்பல் பீரோவில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அஞ்சலி குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்றனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதியழகன் அவரது மனைவி அஞ்சலியும் தினமும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்வதை கண்காணித்த நபர்கள் அவர்கள் சாவி வைத்த இடத்தை நோட்டமிட்டு சாவியை கொண்டு வீட்டின் பூட்டை திறந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    • 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுக்கா உள்ளி ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தாசில்தார் எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார்.

    மனுநீதி நாள் முகாம்

    சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நெடுமாறன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் ஆனந்திமுருகானந்தம், டி.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் சி.ரஞ்சித்குமார், ஊராட்சி மன்ற தலைவர் வி.ஜெய்சங்கர், துணைத் தலைவர் கே.சதீஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் சுகந்தி வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) எம்.வெங்கட்ராமன், குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு 88 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் உமா சங்கர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரிஹானா, மின்வாரிய உதவி பொறியாளர் மாலினி ஜோதிராம், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், டி.எம். பெரியசாமி, ஊராட்சி செயலாளர் சிவானந்தம், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மண்டல துணை தாசில்தார் சுபிசந்தர் நன்றி கூறினார்.

    • அடிபம்போடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டது வேலூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பொது சொத்தை சேதப்படுத்தியதாக மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தில் அடிபம்போடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை அனுப்பி அடிபம்பை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    பைக், ஜீப் ஆகியவற்றை சேர்த்து சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து அடிபம்போடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டது வேலூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக பணியை செய்த காண்ட்ராக்டரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பணியை வேலூர் கலாஸ்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த காண்ட்ராக்டர் சுரேந்திர பாபு (வயது 49) செய்துள்ளார். அவர் மீது பொது சொத்தை சேதப்படுத்தியதாக மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காண்ட்ராக்டர் சுரேந்திர பாபுவை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • ஆந்திராவிலிருந்து போதை பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுகிறது.
    • தமிழக கவர்னர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல.

    வேலூர்:

    வேலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வேலூரில் அடி பம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதே கட்சியை சேர்ந்தவருக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டுள்ளது. பஜாரில் பீடி, சிகரெட் விற்பனை செய்து கொண்டு இருந்தவருக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வளவு பெரிய பணியை செய்யக்கூடிய தகுதி அந்த காண்ட்ராக்டருக்கு இல்லை. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரூ.20 ஆயிரம் கோடி சுருட்டி விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வருகிறது. அப்போது பார்க்கலாம்.

    ஆந்திராவிலிருந்து போதை பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுகிறது. கும்மிடிப்பூண்டி முதல் கிருஷ்ணகிரி வரை ஆந்திரா பகுதி இருப்பதால் எளிதில் கடத்தி வந்து விடுகின்றனர்.

    கவர்னர், நடிகர் ரஜினி சந்திப்பு சொல்ல முடியாத அரசியல்.

    பாலாற்றில் தற்போது தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

    மேல்அரசம்பட்டு அணை கட்டிட பணி அடுத்த ஆண்டு தொடங்கப்படும். தமிழக கவர்னர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல. அவர் தன்னை உணர்ந்து நீட் உள்ளிட்ட சட்டமசோதாக்களில் கையெழுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதை பொருள் நுண்ணறிவு பிரிவு இணையதள முகவரியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது
    • போலீஸ் சூப்பிரண்டு தகவல்

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டில் போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்களை தயாரித்தல், பயன்படுத்துதல், கடத்துதல் போன்ற குற்றங்களை எதிர்த்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை தமிழக அரசு நடத்திவருகிறது.

    இதன் ஒருபகுதியாக அமலாக்க பணியகம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு இணையதள முகவரியில் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் www.nibcid.org/pledge என்ற இணையதள முகவரியில் தங்களின் சுய விவரங்களான பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், அஞ்சல் குறீயிடு ஆகியவற்றை பதிவு செய்து தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இணையவழியாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

    சான்றிதழ்

    உறுதிமொழி எடுத்தவுடன் தாங்கள் உறுதிமொழி எடுத்ததற்கான சான்றிதழை பதிவிறக்கம் அல்லது தங்களின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொள்ளலாம்.

    எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் உறுதிமொழி எடுத்து அச்சான்றிதழை தங்களின் சமூக வலைதளத்தில் பகிர்ந்து மற்றவர்களையும் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுக்க ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேயரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
    • ரூ.1.22 கோடி மதிப்பில் பணிகள் நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 722 மீட்டர் தூரத்திற்கு ரூ 1.22 கோடி செலவில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனை மேயர் சுஜாதா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் தெருக்களில் உள்ள கால்வாய் விட அதிக உயரத்திற்கு கால்வாய் கட்டப்படுவதால் மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே கால்வாய் உயரத்தை குறைத்து கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து மேயர் சுஜாதா கால்வாய் கட்டும் ஒப்பந்ததாரரிடம் இது எனது வார்டு, எனவே பொதுமக்கள் குறை கூறும் அளவிற்கு இல்லாமல் பணிகளை செம்மையாக செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதை எடுத்து சேம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெறும் பாதாள சாக்கடை வெட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது மாநகராட்சி என்ஜினீயர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×