என் மலர்
நீங்கள் தேடியது "He snatched the 5 pound talichain he was wearing."
- போலீசார் விசாரணை
- கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்
வேலூர்:
கே.வி.குப்பம் அருகே உள்ள பி.கே.புரத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரது மனைவி லதா (வயது 49). இவரது தாய் வீடு திருவலத்தில் உள்ளது. இன்று காலை லதா அவரது தாயாரை பார்ப்பதற்காக திருவலம் வந்தார்.
செயின் பறிப்பு
அங்குள்ள தனியார் திருமண மண்டபம் அருகே நடந்து சென்றார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் முகவரி கேட்பது போல பேச்சு கொடுத்தார்.
லதா முகவரி சொல்ல முயன்றபோது திடீரென வாலிபர் லதா அணிந்திருந்த 5 பவுன் தாலிச்செயினை பறித்தார்.
பதறி போன லதா அலறி கூச்சலிட்டார் அதற்குள் வாலிபர் பைக்கில் வேகமாக சென்று தலைமறைவாகிவிட்டார்.
விசாரணை
இது குறித்து திருவலம் போலீசில் லதா புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.






