என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் நேதாஜி மைதானத்தில் போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழியை அமைச்சர் துரைமுருகன் வாசித்தார். அருகில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, டி. ஐ.ஜி. ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன்.
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

- அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்
- பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் நேதாஜி மைதானத்தில் போதை பொருள் தடுப்பு மற்றும் எதிர்ப்பு உறுதிமொழிநிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் போலீசார் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழிப்புணர்வு
நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது;
தமிழகத்தில் கொரோனா வந்தது. அதனை முறியடித்தோம் தற்போது குரங்கு அம்மை வருகிறது என்கிறார்கள். இதெல்லாம் கண்ணுக்கு தெரிந்தவை. ஆனால் தற்போது ஒரு புது வியாதி பரவி வருகிறது.
பள்ளி கல்லூரி மாணவர்களை போதைக்கு அடிமையாக்குகிறது.
பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இளம் தளிர்களை கருகச் செய்கிறது.
போதை மிட்டாய்
மிட்டாய் மாதிரி இருக்கும் போதை பொருளை முதல் நாள் சாப்பிட்டால் போதை வரும். 2-வது நாள் பயன்படுத்த தேடும்.
3-வது நாள் அதற்கு அடிமை ஆக்கிவிடும். பக்கத்தில் இருந்தவன் சாப்பிட்டால் அவனும் போதைக்கு அடிமையாகி விடுவான்.
போதைக்கு அடிமையானால் சுயநினைவை விளக்க நேரிடும்.
போதைப் பொருட்களை எதிர்ப்பவர்களை கொல்லக் கூடிய வைராக்கியத்தை கூட அது தரும்.
ஆந்திராவில் இருந்து கடத்தி ஒரு காலத்தில் மூலை முடுக்குகளில் விற்பனை செய்யப்பட்ட போதை பொருள் தற்போது பள்ளி கல்லூரிகள் மாணவ மாணவிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது இதனை தடுத்தாக வேண்டும்.
வளர வேண்டியவர்கள் அரும்பாக இருக்கும் போதே கருகி விடும். சமுதாயம் கெட்டு போய் விடும். ஒவ்வொருவரும் நான் போதைபழக்கத்துக்கு எதிரானவன் என்ற உறுதிமொழி எடுக்க வேண்டும். போதையை ஒழிக்க சபதம் எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார் கார்த்திகேயன் மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உதவி கலெக்டர் பூங்கொடி, டி ஐ ஜி ஆனி விஜயா போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆசிரியர் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி யை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
