என் மலர்
நீங்கள் தேடியது "People who were observed going to work after locking their house every day"
- ரூ.1.30 லட்சம் திருட்டு
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த கூட நகரம் ஊராட்சி பார்வதியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் கட்டிட மேஸ்திரி.
இவரது மனைவி அஞ்சலி. இவர்கள் இருவரும்நேற்று காலையில் வழக்கம் போல் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றுள்ளனர்.
மாலை வீட்டிற்கு இருவரும் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு இல்லாமல் திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்த போது ஜன்னல் மீது வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்ற மர்ம கும்பல் பீரோவில் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அஞ்சலி குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதியழகன் அவரது மனைவி அஞ்சலியும் தினமும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்வதை கண்காணித்த நபர்கள் அவர்கள் சாவி வைத்த இடத்தை நோட்டமிட்டு சாவியை கொண்டு வீட்டின் பூட்டை திறந்து இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.






