என் மலர்
வேலூர்
- அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க அறிவுரை
- ஆலோசனைக் கூட்டத்தில் தகவல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முழுமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது அதிக அளவு மழை வெள்ளம் வந்ததால் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அதிகாரிகள் திறம்பட செயல்பட்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த ஆண்டு பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குறிப்பாக அணைக்கட்டு, பேரணாம்பட்டு, குடியாத்தம், மோர்தானா உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்கு செல்லாதவாறு தடுக்க அதிகாரிகள் வாக்கி டாக்கிகளை பயன்படுத்தி மழை வெள்ளம் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்.
நெடுஞ்சாலைகளில் மரைக்கிளைகள் விழுந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த அதற்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இதே போல் மழை மானி சரியாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.
- 2 நாட்கள் செயல்படுத்த படுகிறது
- சனி, ஞாயிற்றுக்கிழமையில் சோதனை முயற்சி
வேலூர், செப்.9-
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தி னம் முதல் பெங்களூரு , திருப்பதி, சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரண மாக கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டு வருகிறது.
இந்தநிலை யில் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக வேலூர் கலெக்டர் குமார வேல் பாண்டியன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சூப்பிரண்டு போலீஸ் ராஜேஷ் கண்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர் . ஆய்வுக்கு பின்னர் கலெக் டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-
கிரீன் சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை குறைக்க வேலூர் பழைய பெங்களூரு சாலை மற்றும் ஆரணி சாலையில் இருந்து காட்பாடி நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேஷனல் சர்க்கிள் அருகே உள்ள அணுகு சாலை வழியாக செல்ல வேண்டும்.
இலகு ரக வாகனங்கள் சிறிய பாலத்தின் வழியாகவும், கனரக வாகனங்கள் ரெயில்வே பாலம் வழியாகவும் புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடிக்கு செல்ல வேண்டும்.
அதேபோல் சென்னையில் இருந்து வேலூருக்கு வரும் பஸ்கள் அனைத்தும் கிரீன் சர்க்கிளை அடுத்துள்ள அணுகு சாலை வழியாக ரெயில்வே பாலத்தின் கீழ் சென்று புதிய பஸ் நிலையத் திற்கு செல்லவேண்டும்.
இந்த மாற்றம் போக்குவரத்து குறை வாக காணப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமையில் சோதனை முயற்சி அடிப்படையில் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக வாகன ஓட்டிகள், பொதுமக் கள் தெரிவிக்கும் கருத்தின் பேரில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- 3 மாணவர்களை வெறிநாய் கடித்து குதறியது
- நகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன இந்த 21 வார்டுகளிலும் தெரு நாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று பெரிய மஜித் தெருவை சேர்ந்த 3 மாணவர்களை வெறிநாய் கடித்து குதறி உள்ளது.
இதனால் அலறிப்போன பெற்றோர்கள், சிறுவர்கள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர். இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த அவசரமான நடவடிக்கைகளை நகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
- கலெக்டர் பாராட்டு
- 144 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். குடியாத்தம் தாசில்தார் எஸ்.விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநா வுக்கரசு, நகர் மன்ற உறுப்பினர்கள் ஜி. எஸ்.அரசு, ஏ.தண்டபாணி, ஏ.சிட்டிபாபு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.டி.கோபி வரவேற்றார்.
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு 144 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்த அரசு பள்ளியைச் சேர்ந்த 3 மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் அதற்காக அந்த மாணவிகளையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டுகிறேன்.
மாணவிகள் சிறப்பாக கல்வியில் தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டத்தை தேர்ச்சி விகிதத்தில் முன்னேறிய மாவட்டமாக கொண்டு வர பாடுபட வேண்டும் என கூறினார்.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு லட்சுமி நன்றி கூறினார்.
இதேபோல் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசினர் மேல்நி லைப்பள்ளி, வள்ளலார் மேல்நிலைப்பள்ளி, நக ராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகர மன்ற தலைவர் சவுந்தரராசன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, சிவப்பிரகாசம், கீதா, நகர மன்ற உறுப்பினர்கள் அரசு, மனோஜ், விஜயன், ஹசீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 25 டன் சிக்கியது
- சர்க்கரை மூட்டையில் வைத்து கடத்தினர்
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த கூட நகரம் ஏரிக்கரை கடந்த ஆண்டு பழுதடைந்து பல மீட்டர் தூரத்திற்கு கீழே இறங்கியது.நீர்வள ஆதாரத்துறையினர் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக ஏரிக்கரையை சீர் செய்து இருந்தனர்.
இந்நிலையில் நேற்று அணங்காநல்லூர் கிராமத்திலிருந்து குடியாத்தம் நோக்கி கர்நாடக பதிவெண் கொண்ட லாரி ஒன்று கூட நகரம் ஏரிக்கரை மீது வந்துள்ளது. பழுதடைந்து இருந்த ஏரிக்கரை பகுதியில் லாரி வந்தது.
சில நாட்களாக பெய்த மழையினால் ஏரிக்கரை சேரும் சகதியாக இருந்தது. அதில் லாரியின் சக்கரங்கள் சிக்கியது. லாரியை அதிலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை. அவர்களிடம் கிராம மக்கள் வசாரித்தனர்.
லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் முன்னுக்கு பின்னாக பேசினர். கிராம மக்கள் அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கவே அவர்கள் அங்கிருந்து நைசாக நழுவி விட்டனர்.
இது குறித்து வருவாய்த்துறைக்கும் மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் ஆகியோர் மேற்பார்வையில் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி இராமலிங்கம், சுகந்தி உள்ளிட்டோர் விரைந்து சென்று அந்த லாரியை சோதனை செய்தனர்.
லாரியில் பிளாஸ்டிக் பைகளால் ஆன மூட்டைகள் இருந்துள்ளது சந்தேகம் கொண்டு அந்த மூட்டைகளை மேலிருந்து பார்க்கும்போது சர்க்கரை மூட்டை காண பிளாஸ்டிக் பை இருந்தது. உள்ளே ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது இதனையடுத்து உடனடியாக இரண்டு மாற்று லாரிகள் கொண்டுவரப்பட்டு தொழிலாளர்கள் மூலம் சுமார் 25 டன் இருந்து 480 அரிசி மூட்டைகளை மற்ற லாரிகளுக்கு மாற்றினார்கள்.பாக்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
- வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறுவதாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
- இன்று காலையில் முருகன் ஜெயில் உணவு சாப்பிடவில்லை.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதே வழக்கில் கைது செய்யப்பட்ட முருகனின் மனைவி நளினிக்கு பரோல் வழங்கப்பட்டு அவர் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். வேலூர் ஜெயிலில் முருகன் நேற்று உணவு சாப்பிட மறுத்தார். மேலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
வேலூர் சிறை காவலர் ஒருவரை அவதூறுவதாக பேசியதாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் முருகன் மீது வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
இன்று காலையில் முருகன் ஜெயில் உணவு சாப்பிடவில்லை. 2-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு
- போர்க்கால அடிப்படையில் கட்ட வலியுறுத்தல்
குடியாத்தம்:
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தார்.
அதில் கூறியிருப்ப தாவது:-
அந்த மனுவின் விவரம் குடியாத்தம் நகராட்சி வேலூர் மாவட்டத்தில் அமையப்பெற்ற முதல் நிலை நகராட்சியாகு, 36 வார்டுகளை உள்ளடக்கி 4.92 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது.
குடியாத்தம் நகராட்சி மையப் பகுதியில் அமையப்பெற்ற அருள்மிகு கெங்கையம்மன் ஆலயம் அருகில் உள்ள கவுண்டன்யா மகாநதி ஆற்றுத்த ரைப்பாலம் நீண்ட காலமாக பிரதான போக்கு வரத்து பயன்பாட்டில் இருந்து வந்தது.
கடந்த ஆண்டு கவுண்டன்யா மகாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து போக்கு வரத்து தடைப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.
தற்போதும் அதே நிலை ஏற்பட்டுள்ளது இதனால் மேம்பால கட்டுமான பணியினை நெடுஞ்சா லைத்துறை அல்லது பொதுப்ப ணித்துறை மூலம் மேற்கொள்ள குடியாத்தம் நகர மன்றம் கூட்டத்தில் ஜூன் மாதம் 30-ந் தேதி ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை போர்க்கால அடிப்படையில் விரைவாக மேம்பாலமாக கட்டிதர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை தலைவர் தகவல்
- 10, பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
வேலூர்:
விஐடியில் பி.எஸ்.சி., பி.சி.ஏ., பட்டதாரிகளுக்கு கல்வி உதவித் தொகையுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை தலைவரும் விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் பி.எஸ்சி., பி.சி.ஏ., பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் கூடிய தகவல் தொழில்நுட்பத் துறை பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் நிறுவனமும் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையும் இணைந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட மாணவர்களுக்கு 4 மாத கால தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.
இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 2021-22 கல்வியாண்டில் பி.எஸ்சி., கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம் மற்றும் பி.சி.ஏ., பாடப்பிரிவுகளில் குறைந்தபட்சம் 60 சதவீதம், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 84284-08872 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பயிற்சியில் சேர விருப்பும் மாணவர்கள் தங்களுடைய சுய விவரங்களை info.uhet@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இம்மாதம் 20-ந் தேதிக்குள் அனுப்பி பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திறனறித்தேர்வு மற்றும் நேர்காணலில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
- கூடுதல் போலீசார் நியமிக்க வலியுறுத்தல்
- கவுண்டன்ய மகாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அவதி
குடியாத்தம்:
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் 800 கன அடி தண்ணீர் தற்போது கவுண்டன்யமகாநதி ஆற்றில் 800 கன அடிக்கும் அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் செல்வ தால் கெங்கையம்மன் தரைப்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் காமராஜர் பாலம் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெற்று வருகிறது இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் நகரமே ஸ்தம்பித்தது.
நேற்று காலை சுமார் 8.15 மணி அளவில் திடீரென குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது புதிய பஸ் நிலையம் தொடங்கி பழைய பஸ் நிலையம், அர்ஜுனன்முதலி தெரு, பெரியார் சிலை, காமராஜர் பாலம், தாழையாத்தம் பஜார் சந்தப்பேட்டை பஜார், பேர்ணாம்பட்டு ரோடு, காந்திசவுக், சேம்பள்ளி கூட்ரோடுவரை பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குடியாத்தம் நகரமே ஸ்தம்பித்தது பல சாலைகளிலும் போக்குவரத்து நெரிசலாகவே இருந்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு, செல்லும் தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் என பலதரப்பு மக்களும் அவதியுற்றனர், நேற்று திருமண நாள் என்பதால் திருமணத்திற்கு சென்றவர்கள் நெரிசலில் சிக்கி வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சீர் செய்யப்பட்டு அப்பகுதியை கடந்து சென்றது.
நேற்று குடியாத்தம் பகுதியில் வரலாறு காணாத அளவு நெரிசலில் சிக்கித் தவித்தது வாகனங்களில் வந்த பெண்கள் குழந்தைகளை உடன் அழைத்து வந்து இருந்தார்கள் அந்த குழந்தைகள் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் அழுதபடி இருந்தனர்.
போக்குவரத்து நெரிசல் கண்டதும் உடனடியாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
2 மணி நேரம் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி இருப்பினும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.
இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி காமராஜர் பாலம் அருகே சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்.
சுமார் 3 மணி நேரத்திற்குப் பின்னரே போக்குவரத்து சீரடைந்தது இதனால் வாகன ஓட்டிகளும் கனரக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
காவல்துறை அதிகாரிகள் குடியாத்தத்தில் மழைக்காலங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிக அளவு போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு உடன டியாக கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் பகுதியை மேம்பாலம் ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அமலு விஜயன் எம்.எல.ஏ. திறந்து வைத்தார்
- பலர் கலந்து கொண்டனர்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அடுத்த கள்ளிப்பேட்டை ஏரிகுத்தி போன்ற கிராமங்களில் புதிதாக கட்டப்பட்டிருந்த ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு கூட்டுறவு சங்க சார்பதிவாளர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார்.
கூட்டுறவு பொது விநியோக திட்ட சார்பதி வாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
பேர்ணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் தனலட்சுமி வரவேற்று பேசினார். 2 புதிய ரேசன் கடைகளையும் அமுலு விஜயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் சித்ரா ஜனார்தனன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் லலிதா டேவிட், ஆத்மா குழு தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் டேவிட் சாத்கர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நீலா கபில், ரேசன் கடை விற்பனையாளர்களான சதீஷ், ரீகன், ரமேஷ், லோகேஷ், பாதுஷா, உஸ்மான், மஞ்சுளா, சங்கீதா, ராஜேந்திரன், கோகிலா, லிவின்குமார், பொறுப்பு ஊராட்சி செயலாளர் நேதாஜி மற்றும் சோக்கன் வில்லியம் அருமை நாயகம் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பி எஸ் கோபிநாத் நன்றி கூறினார்.
- வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது
- 20-க்கும் மேற்பட்ட தண்டுவட நோயாளிகள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, வேலூர் தெற்கு ரோட்டரி சங்கம் , கல்லூரியின் நாட்டுநலப் பணி திட்டம், தண்டுவடம் காயம் அடைந்தோர் அமைப்பு ஆகியவை சார்பில் முதுகு தண்டுவட பாதிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியில் நடத்தப்பட்டது.
வேலூர் தெற்கு ரோட்டரி சங்க தலைவர் பிரகாஷ்ராஜ் தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் என்.ரமேஷ், துணைத்தலைவர் என்.ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக வேலூர் ஜனனி பிக்பஜார் பி.சதீஷ்குமார், வக்கீல் வி.எல்.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர் . கல்லூரி முதல் வர் எம்.ஞானசேகரன் வரவேற்றார்.
இதில் சி.எம்.சி. கல்லூரியின் மறுவாழ்வு நிலைய பணியா ளர்கள் ஓ.ஜேக்கப் , எஸ்.ஜே.மகேஷ், விபத்தினால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட தண்டுவடம் காயம் அடைந்தோர் அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், முதுகு தண்டுவட பாதிப்பினால் ஏற்பட்ட இன்னல்கள், சமூக பொருளாதார இழப்புகள் மற்றும் அன் றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மாண வர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஏ.குமரேசன் செய்திருந்தார்.
- பைக் மோதியதில் மூளைச்சாவு
- சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கொசவன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
மாணவன் மீது பைக் மோதல்
இவருடைய மூத்த மகன் சுதீஷ் (வயது 11) அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் தந்தையுடன் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக குடியான் குப்பம் மெயின் ரோட்டில் சுதீஷ் நின்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையில் வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவனது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன் வந்தனர்.
சிறுவனின் இதயம் கல்லீரல் கிட்னி கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டு வேலூர் சிஎம்சி மற்றும் சென்னை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சிறுவன் சுதீசுக்கு கோகுல், ரோகித் என இரு சகோதரர்கள் உள்ளனர்.






