என் மலர்
வேலூர்
- வேலூர் தலைமை அஞ்சல் கட்டிடத்தில் நடக்கிறது
- குறைகளை தெரிவிக்க மின்னஞ்சல் வெளியீடு
வேலூர்:
வேலூர் அஞ்சலக கோட்டத்தில் அஞ்சலங்கள் மூலமாக தபால் சேவைகள் பெற்று வரும் பயனாளிகள் சேவைகளில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நேரிலோ, தபால் மூலமாகவோ மின்னஞ்சல் (dovellore.tn@indiapost.gov.in)மூலமாகவோ வருகிற 19-ந் தேதிக்குள் அஞ்சலக கண்காணிப்பாளர், வேலூர் அஞ்சல் கோட்டம், வேலூர்-632001 என்ற முகவரிக்கு குறைதீர்வு முகாம் என்ற தலைப்பில் அனுப்பி வைக்க வேண்டும்.
முகாம் நடைபெறும் நாள் அன்றும் கலந்து கொள்ளலாம்.
- அரசு பஸ்கள் வருவது இல்லை
- பெண்கள் மறித்தால் நிற்பதில்லை
வேலூர்:
காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் இருந்து பிரம்மபுரம், சேவூர், சுகர்மில், திருவலம், ராணிப்பேட்டை சிப்காட், முத்துக்கடை வரை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
காலையும் மாலையில் பள்ளி, கல்லூரிக்கும் மற்ற பணிக்களுக்கும் சென்று திரும்புவோர் அதிகம் பயணிக்கும் வழித்தடமாக இருந்து வருகிறது.
இதில் 10ஏ, 10டி, 10சி உள்ளிட்ட அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படுவது இல்லை. குறித்த நேரத்துக்கு போதிய அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் பஸ் நிறுத்தத்தில் பஸ் நிற்க்காமல் தள்ளி நிற்பதாகவும் சில சமயங்களில் நிற்பதே கிடையாது என்றும். காலை வேளைகளில் சில நேரங்களில் ஒரே நேரத்தில் அனைத்து பஸ்கள் சென்றுவிடுவதாகவும் கூறுகின்றனர்.
காலை மற்றும் மாலையில் இயக்கப்படும் பஸ்கள் நேரம் தவறி மிகுந்த கால தாமதத்துடன் இயக்கப்படுவதால் குறித்த நேரத்திற்க்கு பள்ளிக்கோ அல்லது பணிக்கோ செல்ல முடிவது இல்லை என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இடைபட்ட நேரங்களில் பெண்கள் பஸ்கள் நிறுத்தத்தில் நிற்க்கும் போது சில பஸ்கள் நிற்க்காமல் செல்வதாகவும் கூறுகின்றனர்.
இந்த வழிதடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களை முறைபடுத்தி பயணிகள் பயனடையும் வகையில் முறையாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- ஒரே இடத்தில் அடக்கம்
- ஏராளமானோர் திரண்டு அஞ்சலி
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் கஸ்பா கவுதமபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கே.சேகர் (வயது 65), இவரது மனைவி அஞ்சலி (60) இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன் 2 மகள்கள் உள்ளனர்.
சேகரும், அஞ்சலியும் மிகவும் பிரியமுடன், பாசத்துடனும் மற்றவர்க ளுக்கு எடுத்துக்காட்டாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சேகர் நேற்று முன்தினம் காலை திடீரென இறந்தார்.
இதனால் அவரது மனைவி அஞ்சலி அழுது புரண்டுள்ளார் பாசமான தனது கணவர் இறந்துவிட்டார் என அவரது சடலத்தின் அருகே உட்கார்ந்து நேற்று முன்தினத்திலிருந்து அழுதபடியே இருந்துள்ளார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், குடும்பத்தினர் ஆறுதல் கூறியும் தொடர்ந்து அழுதபடியே இருந்தார்.
கணவர் உடல் அருகே இருந்த அஞ்சலி நேற்று மதியம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அஞ்சலி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து மலர் வைத்து அஞ்சலி செலுத்தி னார்கள். சேகர், அஞ்சலி இருவரின் உடல்களும் ஒரே பாடையில் வைத்து கஸ்பா சுடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஒரே குழியில் இருவரது உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.
- பயன்பாட்டுக்கு வராத பூங்கா
- அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட உள்ளது
வேலூர்:
வேலூர் மாநகராட்சிக்கு ஒரு காலத்தில் குடிநீர் ஆதாரமாக இருந்த ஓட்டேரி ஏரி நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. கடந்தாண்டு பெய்த கனமழையால் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறியது.
பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் ஓட்டேரி ஏரிக்கரையில் மாநகராட்சி சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபயிற்சியுடன் கூடிய பூங்கா ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
திறக்கப்படாமலேயே இருந்த பூங்கா மறு சீரமைப்புக்காக மீண்டும் ரூ.25 லட்சம் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்தும் பூங்கா மட்டும் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இதன் காரணமாக, பூங்காவில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள், கட்டிடங்கள் பாழடைந்து வருகின்றன.
மேலும், புதர்கள் மண்டிக்கிடப்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. ஏறக்குறைய 2 கோடி ரூபாய் நிதியில் கட்டப்பட்ட பூங்கா பயன்ப டுத்தப்படாமல் பாழடைந்து வருகிறது.
பூங்காவை விரைவில் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஓட்டேரி ஏரி ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆணையர் அசோக்குமார், கவுன்சிலர் பாபி கதிரவன் உள்ளிட்டோர் உடினி ருந்தனர். பூங்காவை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தியதுடன், பூங்கா மற்றும் ஏரிக்கரை பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.
ஏரிக்கு நடுவில் செயற்கை தீவு அமைத்து அந்த இடத்தை பறவைகளின் புகலிட மாகவும் படகு சவாரி செய்யும் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்ற யோசனையும் முன் வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் கூறும்போது, ''பூங்காவில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றவும், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்ப டவுள்ளது. பூங்காவில் 25 லட்சம் ரூபாய் அளவுக்கு பணிகள் முடிக்க வேண்டியுள்ளன.
அந்த பணிகளை விரைந்து முடிக்கவும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏரியில் செயற்கை தீவு அமைத்து பறவைகளின் புகலிடமாக மாற்றம் செய்வது குறித்து அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட உள்ளது'' என்றார்.
- 788 இடங்களில் முகாம்கள் நடந்தது
- கலெக்டர் ஆய்வு
வேலூர்:
தமிழகத்தில் இன்று 36-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 788 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.
வேலூர் தொரப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 36-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.
முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை ௧௦௦ சதவீதம் போடப்பட்டு உள்ளது. இந்த மெகா முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் செலுத்தப்படுகின்றது. தடுப்பூசி செலுத்தியிருந்தால் 6 மாதம் முடிந்த பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
பூஸ்டர் இலவச தடுப்பூசி வருகிற 30-ந் தேதி வரை மட்டும் போடப்படும். தடுப்பூசி போடுவதற்காக அனைத்து துறைகளிலிருந்தும் 3,940 பணியாளர்கள் பணியில் உள்ளனர் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
இந்த முகாமில் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார், துணை இயக்குநர் (சுகாதாரம்) பானுமதி, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இன்று முதல் அமல்
- கலெக்டர் உத்தரவு
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மாநகரத்துக்குள் கனரக சரக்கு வாகனங்கள் நுழைவது இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தடைசெய்யப்படுகிறது.
சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து வேலூர் மாநகருக்குள் நுழையும் அனைத்து கனரக சரக்கு வாகனங்கள் வேலூர் கிரீன் சர்க்கிள் சாலையில் இருந்து அப்துல்லாபுரம் விமான நிலையம் வழியாக ஊசூர், அரியூர், சாத்துமதுரை, திருவண்ணாமலை மார்க்கமாக செல்ல வேண்டும்.
வேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் பழைய காட்பாடி சாலை ஆகியவற்றில் கனரக சரக்கு வாகனங்கள் செல்வது தடைசெய்யப்படுகிறது.
அதுபோல் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி வரும் அனைத்து கனரக சரக்கு வாகனங்கள் சாத்துமதுரை, அரியூர், ஊசூர் வழியாக அப்துல்லாபுரம் விமான நிலையம் அடைந்து அவரவர் வழித்தடங்களில் பயணிக்க வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மேற்கண்ட கட்டுப்பாடுகள் ஏதுமின்றி வழக்கமான பாதையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முருகனுக்கு பல்வேறு காரணங்களால் பரோல் வழங்கப்படவில்லை.
- பழங்களை மட்டும் உட்கொண்டு வருகிறார்.
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவருடைய மனைவி நளினி தற்போது பரோலில் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.
ஆனால் முருகனுக்கு பல்வேறு காரணங்களால் பரோல் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவர் தனக்கு பரோல் வழங்கக்கோரியும், தன் மீது நிலுவையில் உள்ள அவதூறு வழக்கை விரைந்து முடிக்கக்கோரியும் ஜெயிலில் திடீரென உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார். 3-வது நாளாக நேற்றும் ஜெயிலில் வழங்கப்படும் உணவை அவர் உண்ணவில்லை. ஆனால் பழங்களை மட்டும் உட்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். அவர் மவுன விரதமும் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- போக்குவரத்து மாற்றத்தால் நடவடிக்கை
- கிரீன் சர்க்கிளில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி கிடையாது
வேலூர்:
வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு க்போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து கடந்த 7-ந் தேதி முதல் ஆரணி, திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள் தவிர மற்ற பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் ஆரணி, திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இந்த பஸ்கள் பழைய பஸ்நிலையம் வழியாக செல்லும்.
வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி வேலூரில் இருந்து காட்பாடி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் கிரீன்சர்க்கிள் சாலையில் செல்வதை தவிர்த்து நேஷனல். சர்க்கிள் அருகே இடதுபுற சாலையில் திரும்பி தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலையை அடைந்து சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத் தின் கீழ் வழியாக புதிய பஸ் நிலையம், காட்பாடி, சென்னை நோக்கி செல்ல வேண்டும்.
சென்னையில் இருந்து வேலூர் புதிய பஸ்நிலையம், செல்லும் காட்பாடி அனைத்து வாகனங்களும் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நுழைவதை தவிர்த்து கிரீன் சர்க்கிளை அடுத்துள்ள அணு குசாலை வழியாக சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் வழியாக புதிய பஸ் நிலையம், காட்பாடி நோக்கி செல்ல வேண்டும்.
காட்பாடியில் இருந்து வேலூர் நகரம் மற்றும் வேலூர் புதிய பஸ்நிலையம் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் செல்லியம்மன் கோவில் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி கொள்ள வேண் டும்.
புதிய பஸ்நிலையம் செல்லும் பஸ்கள் கிரீன்சர்க்கிளை சுற்றி வேலூர் - காட்பாடி சாலையில் உள்ள வாயில் வழியாக நுழைய வேண்டும்.
கிரீன் சர்க்கிளை சுற்றிலும் பயணிகள் வாகனங்கள் எதுவும் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கதவை உடைத்து மீட்டனர்
- தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் அப்புசுப்பையர் வீதியை சேர்ந்தவர் முருகேசன் இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவரது மனைவி சுசிலா (வயது 80) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
நேற்று மாலையில் வீட்டின் கதவை தாழிட்டுக் கொண்டு மூதாட்டி சுசிலா இருந்துள்ளார் அப்போது வீட்டின் முன் பகுதியில் இருந்த சமையல் அறையில் தீ பற்றி மளமளவென வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டி சுசிலாவை மீட்டனர்.
108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு வீரர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 16-ந் தேதி கடைசி நாள்
- அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி முதல்வர் அறிவிப்பு
குடியாத்தம்:
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான முதுநிலை தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க www.tngasapg.in என்ற இளையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பக்க கடைசி நாள் 16-ந் தேதியாகும்.
மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி முதல்வர் வாசுகி கேட்டுக் கொண்டுள்ளார்.
- வாகன ஓட்டிகள் கடும் அவதி
- திட்டமிட்டு மாற்றம் செய்யவில்லை
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று காலை முதலே நேஷனல் தியேட்டர் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் பஸ்கள் நேஷனல் தியேட்டர் பகுதியில் இருந்து சர்வீஸ் சாலைக்கு திருப்பி விடப்பட்டு தேசிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன.
இதனால் காட்பாடி சாலையில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.காலை முதல் ஏராளமான வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றது. மக்கான் பகுதியில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் பாதைக்கு சுமார் 5 நிமிடத்தில் செல்லலாம். ஆனால் இந்த போக்குவரத்து மாற்றத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
காட்பாடி சாலையின் ஓரம் ஏராளமான வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டு உள்ளன.அந்த வாகனங்களை அகற்றி முறையாக போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ள ப்பட்டிருந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்காது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பின்னரே அதிக அளவிலான போக்குவரத்து நெரிசலும் பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகள் முறையாக திட்டமிட்டு போக்குவரத்தையும் மாற்றி உள்ளார்களா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை காட்பாடி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வழி வகுத்தது.
இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் விழி பிதுங்கினர். இனியாவது போலீசார் முறையாக வாகனங்கள் செல்ல போக்குவரத்தை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி நடத்த ஏற்பாடு
- கலெக்டர் அறிவிப்பு
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற 15 - ந் தேதி ( வியாழக்கிழமை ) அன் றும், தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி 17 - ந் தேதி ( சனிக்கிழமை ) அன்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு தனித்தனியாக பேச்சு போட் டிகள் வேலூர் முத்துரங்கம் அரசு கல்லூரியில் நடைபெற உள்ளது .
6 முதல் பிளஸ் -2 வரை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ' தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், மாணவர்க்கு அண்ணா,
அண்ணாவின் மேடைத் தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம்' ஆகிய தலைப்புகளிலும் , கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு ' பேரறிஞர் அண்ணாவும் தமி ழக மறுமலர்ச்சியும் , பேரறி ஞர் அண்ணாவின் சமுதாய சிந்தனைகள், அண்ணாவின் தமிழ்வளம் , அண்ணாவின் அடிச்சுவட்டில் , தம்பி மக்க ளிடம் செல்' ஆகிய தலைப்பு களில் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் நடக்கின்றன.
மாணவர்களுக்கு சிறப்பு பரிசு
இதேபோன்று பள்ளி மாண வர்களுக்கு ' தொண்டு செய்து பழுத்த பழம் , தந்தை பெரியா ரும் தமிழ் சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்த னைகள் , தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு தந்தை பெரி யாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம் பிக்கை ஒழிப்பும் , பெண் ஏன் அடிமையானாள்?, இனிவ ரும் உலகம், சமுதாய விஞ் ஞானி பெரியார் , உலக சிந்த னையாளர்களும் பெரியாரும்' என்ற தலைப்புகளில் தந்தை பெரியார் பிறந்தநாள் பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாண விகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் கலந்து கொள் ளும் மாணவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ் வொருவருக்கும் சிறப்பு பரி சுத்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.






