என் மலர்
நீங்கள் தேடியது "பஸ்கள் பழைய பஸ்நிலையம் வழியாக செல்லும்"
- போக்குவரத்து மாற்றத்தால் நடவடிக்கை
- கிரீன் சர்க்கிளில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி கிடையாது
வேலூர்:
வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு க்போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
வேலூர் புதிய பஸ்நிலையத்தில் இருந்து கடந்த 7-ந் தேதி முதல் ஆரணி, திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள் தவிர மற்ற பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் ஆரணி, திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இந்த பஸ்கள் பழைய பஸ்நிலையம் வழியாக செல்லும்.
வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி வேலூரில் இருந்து காட்பாடி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் கிரீன்சர்க்கிள் சாலையில் செல்வதை தவிர்த்து நேஷனல். சர்க்கிள் அருகே இடதுபுற சாலையில் திரும்பி தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலையை அடைந்து சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத் தின் கீழ் வழியாக புதிய பஸ் நிலையம், காட்பாடி, சென்னை நோக்கி செல்ல வேண்டும்.
சென்னையில் இருந்து வேலூர் புதிய பஸ்நிலையம், செல்லும் காட்பாடி அனைத்து வாகனங்களும் சென்னை சில்க்ஸ் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நுழைவதை தவிர்த்து கிரீன் சர்க்கிளை அடுத்துள்ள அணு குசாலை வழியாக சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் வழியாக புதிய பஸ் நிலையம், காட்பாடி நோக்கி செல்ல வேண்டும்.
காட்பாடியில் இருந்து வேலூர் நகரம் மற்றும் வேலூர் புதிய பஸ்நிலையம் செல்லும் அரசு, தனியார் பஸ்கள் செல்லியம்மன் கோவில் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி கொள்ள வேண் டும்.
புதிய பஸ்நிலையம் செல்லும் பஸ்கள் கிரீன்சர்க்கிளை சுற்றி வேலூர் - காட்பாடி சாலையில் உள்ள வாயில் வழியாக நுழைய வேண்டும்.
கிரீன் சர்க்கிளை சுற்றிலும் பயணிகள் வாகனங்கள் எதுவும் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






