search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dog nuisance"

    • சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்பாடமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.
    • பல்வேறு குறைகளை கூறி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சி வளாகம் அவைகூடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரிராஜசேகரன் தலைமை வகித்தார்.

    நகராட்சி ஆணையர் வாசுதேவன், மேலாளர் காதர்கான், நகராட்சி பொறியாளர் சித்ரா, சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், ஓவர்சியர் விஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் முபாரக்அலி பேசுகையில், சீர்காழி நகரில் கடந்த சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்பாடமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.

    இதனால் வார்டு பகுதிகளில் கடும் சுகாதாரசீர்கேடு நிலவுவதால் சீர்மிகு நகராட்சி சீர்கேடு அடைந்து வருகிறது. இதனால் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் மக்களிடம் அவப்பெயர் ஏற்பட்டுவருகிறது.

    குப்பை களை அள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது மக்கள் சாலைமறியல் போரா ட்டம் நடத்தும் முடிவுக்கு வந்துள்ளனர். மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தானும் பங்கேற்பேன் என்றார்.

    நகர்மன்ற உறுப்பினர் வள்ளிபேசுகையில், நாய்கள் தொல்லைஅதிக ரித்துவருவதை கட்டுப்ப டுத்தவேண்டும்.கொசு மருந்து தெளிக்கவேண்டும்.

    இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் செய்பவர்களுக்கு உடனடியாக வழங்காமல் அலைகழிப்பு செய்கின்றனர் என்றார். ஜெயந்திபாபுபேசுகையில், நகர்மன்ற உறுப்பினர்கள் முழுமதி இமயவரம்பன், ராஜேஷ், பாலமுருகன், சாமிநாதன் கிருஷ்ணமூர்த்தி வேல்முருகன், பாஸ்கரன், நாகரத்தினம், ரேணுகாதேவி, கலைசெல்வி, ரஹ்மத்நிஷா உள்ளிட்ட பலரும் நகரில் குப்பைகள் 15 நாட்களுக்கு மேலாக எடுக்கப்படாமல் மூட்டை மூட்டையாக கிடைக்கின்றன.

    இதனால் பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சுகா தாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.

    குப்பைகள் எடுக்கப்படாததால் கவுன்சிலர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எங்களால் பொதுமக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை உடனடியாக குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்தனர்.

    பாலமுருகன் பேசுகையில், ஈமகிரிகை மண்டபம் பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகையில், குப்பைகளை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    கால்நடைகள், பன்றிகளை பிடிக்க உறுப்பினர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கின்றனர்.

    அவ்வாறு பிடித்தால் சில உறுப்பினர்களே போராடும் மக்களுக்கு துணை போகின்றனர். இவ்வாறு செயல்படும் உறுப்பினர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது
    • வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது.

    அவிநாசி :

    அவிநாசி, சேவூர் ரோடு காமராஜ் நகரில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அப்பகுதியில் சுற்றிச்சுற்றி வருகிறது. பகல் மற்றும் இரவு நேரத்தில் சாலையில் சுற்றி திரிவதோடு, நடத்து செல்லும் குழந்தைகளை துரத்துதல், மோ ட்டார் சைக்கிள்களில் செல்வோரை கடிக்க துரத்துதல் போன்ற செயல்களில் நாய்கள் ஈடுபடுகின்றன.இது குறித்து காமராஜ் நகரை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    வெளியில் தனியாக குழந்தைகளை அனுப்ப பயமாக இருக்கிறது. அருகில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்கே நாய்கள் எங்காவது சுற்றி கொண்டிருக்கின்றதா என்று பார்த்து விட்டு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட நாய்கள் ரோட்டில் அங்கும் இங்கும் ஓடுவதால் எந்த சமயத்தில் என்ன நடக்குமே என்ற அச்சமே அதிகரிக்கிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ரோட்டில் வந்து நிற்க முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், நாய்களை பிடித்து அதற்கு கருத்தடை ஊசி போட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்றனர்.

    • 3 மாணவர்களை வெறிநாய் கடித்து குதறியது
    • நகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன இந்த 21 வார்டுகளிலும் தெரு நாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நேற்று பெரிய மஜித் தெருவை சேர்ந்த 3 மாணவர்களை வெறிநாய் கடித்து குதறி உள்ளது.

    இதனால் அலறிப்போன பெற்றோர்கள், சிறுவர்கள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதனால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர். இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த அவசரமான நடவடிக்கைகளை நகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    ×