பேரணாம்பட்டில் பெருகிவரும் நாய் தொல்லை

3 மாணவர்களை வெறிநாய் கடித்து குதறியதுநகராட்சி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பேரணாம்பட்டில் பெருகிவரும் நாய் தொல்லை
Published on

பேரணாம்பட்டு:

பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன இந்த 21 வார்டுகளிலும் தெரு நாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று பெரிய மஜித் தெருவை சேர்ந்த 3 மாணவர்களை வெறிநாய் கடித்து குதறி உள்ளது.

இதனால் அலறிப்போன பெற்றோர்கள், சிறுவர்கள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனால் பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர். இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த அவசரமான நடவடிக்கைகளை நகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com