என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் பகுதியில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும்
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு
- போர்க்கால அடிப்படையில் கட்ட வலியுறுத்தல்
குடியாத்தம்:
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்தார்.
அதில் கூறியிருப்ப தாவது:-
அந்த மனுவின் விவரம் குடியாத்தம் நகராட்சி வேலூர் மாவட்டத்தில் அமையப்பெற்ற முதல் நிலை நகராட்சியாகு, 36 வார்டுகளை உள்ளடக்கி 4.92 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது.
குடியாத்தம் நகராட்சி மையப் பகுதியில் அமையப்பெற்ற அருள்மிகு கெங்கையம்மன் ஆலயம் அருகில் உள்ள கவுண்டன்யா மகாநதி ஆற்றுத்த ரைப்பாலம் நீண்ட காலமாக பிரதான போக்கு வரத்து பயன்பாட்டில் இருந்து வந்தது.
கடந்த ஆண்டு கவுண்டன்யா மகாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்து போக்கு வரத்து தடைப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.
தற்போதும் அதே நிலை ஏற்பட்டுள்ளது இதனால் மேம்பால கட்டுமான பணியினை நெடுஞ்சா லைத்துறை அல்லது பொதுப்ப ணித்துறை மூலம் மேற்கொள்ள குடியாத்தம் நகர மன்றம் கூட்டத்தில் ஜூன் மாதம் 30-ந் தேதி ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை போர்க்கால அடிப்படையில் விரைவாக மேம்பாலமாக கட்டிதர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.