என் மலர்
வேலூர்
- ரூ10-ல் இருந்து ரூ.20-ஆக அதிகரித்தது
- தெற்கு ெரயில்வே அறிவிப்பு
வேலூர்:
அரக்கோணம், காட்பாடி ரெயில் நிலையத்தில் பிளாட்பார கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் காட்பாடி, சென்னை, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் ஆவடி ஆகிய ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் ரூ10-ல் இருந்து ரூ.20-ஆக உயர்த்துவதாக தெற்கு ெரயில்வே அறிவித்தது.
இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. திடீரென கட்டண உயர்வு அதிகரித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரக்கோணம், காட்பாடி ரெயில் நிலையத்திற்கு உறவினர்களை வழியனுப்ப வந்தவர்கள் கட்டண உயர்வு காரணமாக அதிருப்தி அடைந்தனர்.
- கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பதக்கங்கள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியின் 9-வது பட்டமளிப்பு விழா கே.எம்.ஜி. கலையரங்கில் நடைபெற்றது.
கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்களின் செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் விழாத் தொடக்க அறிவிப்பினை அறிவித்து பட்டமளிப்பு விழாவைத் தொடங்கி வைத்தார்.
கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரி இயக்குநர் நடராசன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையினைக் கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் வாசித்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், காவேரியம்மாள் விழாப் பேருரை நிகழ்த்தி 2016-2018 -ம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அளவில் ஆங்கிலப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவி பி.ஆஷிகா மற்றும் 2017-2019 ஆம் கல்வியாண்டில் கல்லூரி அளவில் முதலிடம் பிடித்த மாணவி எஸ்.திவ்யா ஆகிய மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பதக்கங்கள் வழங்கியும், 155 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-கற்றல்- கற்பித்தலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் காரணமாக மாணவர் ஆசிரியர் உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களைப் பாதிக்கும் சமூகக் காரணிகளை மனதில் கொள்ளாமல் மாணவர்களைக் குறை கூற கூடாது.
மாணவர்கள் செல்போனில் அதிக நேரத்தைச் செலவிடாமல் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும். வாழ்க்கை என்பதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்.
பெற்றோர்களுக்கு உரிய மரியாதையை பட்டம் பெற்ற நீங்கள் அளிக்க வேண்டும். மாணவர்களை நேசிக்கும் ஆசிரிர்யகளாக விளங்கவேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசியர்கள்.கே.சாந்தி, .எஸ்.செல்வகுமாரி, ஏ.எஸ்.அறிவுக்கொடி, வி.கலைவாணி, இளையராஜா, கவுதமன் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- கமிஷனுக்கு கடத்திய சென்னை வியாபாரி
- போலீசாரிடம் பேரம் பேசிய கும்பல்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் காரில் இருந்து லாரியில் ஏற்றி கடத்த முயன்ற ரூ.14.71 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த நிஷார் அகமது, வாசிம்அக்ரம், நாசர் சர்புதீன் ஆகியோரை பள்ளி கொண்டா போலீசார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14.71 கோடி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்:-
பிடிபட்ட நிஷார் அஹ்மது சென்னையில் குர்தா விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர், கமிஷனுக்கு ஹவாலா பணத்தை எடுத்துச் செல்லும் தரகராக செயல்பட்டு வந்துள்ளார். சென்னையில் உள்ள தங்க நகைக்கடைகளுக்கு கோவையில் உள்ள வியாபாரிகள் மூலம் பல விதமான தங்க நகைகளை அனுப்பி வைக்கின்றனர்.
இதற்கான பணத்தை வியாபாரிகள் சிலர் வரி செலுத்தாமல் கருப்புப் பணமாக கைமாற்றி வருகின்றனர்.
இதுபோன்ற தொடர்புகள் சென்னை, கோவை, கேரளா வரை உள்ளது. இதில், நிசார் அஹ்மது ஒரு லட்சம் ரூபாய்க்கு 50 வீதம் கமிஷன் பெற்று பணத்தை கடத்தி வருகிறார். மாதத்துக்கு 2 அல்லது 3 முறை இப்படி பணப்பரிமாற்றம் நடந்து வருகிறது.
அதேபோல், கேரளாவில் இருந்து கோவைக்கு மரத்தூள் ஏற்றி வந்த சர்புதீன், நாசர் ஆகியோர் ஊர் திரும்பும் முன்பாக கோவைக்கு பணம் கடத்துவதற்காக வந்து போலீசாரிடம் சிக்கி உள்ளனர். 4 பேரின் செல்போன் எண்களைக் கொண்டு, கடந்த ஓராண்டில் இவர்கள் எத்தனை முறை வேலூர் வழியாக வந்து சென்றுள்ள னர் என்று ஆய்வு செய்யப்படும்.
அவர்களது செல்போன்கள் சைபர் பிரிவு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பணம் பிடிபடும்போது பணியில் இருந்த போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிசார் அஹ்மதுவுக்கு துபாயில் இருந்து வாட்ஸ்அப் மூலம் பணம் கொடுக்கச் சொல்லிய நபரின் விவரங்களும் சேகரிக்கப்படுகிறது'' என்றனர்.
போலீசாரிடம் பேரம் பேசிய கும்பல்
பணம் பிடிபட்ட நேரத்தில் போலீசாரிடம் கடத்தல் கும்பல் பேரம் பேசிய விவரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சோதனையின் போது பணம் இருப்பது குறித்து இன்ஸ்பெக்டர் கருணாகரனுக்கு போலீசார் தகவல் அளித்தனர்.
அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் கருணாகரன் பணம் குறித்து விசாரித்தார்.அவர்கள் எங்களை விட்டு விடுங்கள் இந்த பணத்தில் பாதியை அப்படியே கொடுத்து விடுகிறோம் என்று பேரம் பேசினர்.
அவர்களிடம் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் முதலில் சாப்பிட்டீர்களா என இன்ஸ்பெக்டர் விசாரித்தார். அப்போது கும்பல் பசிக்குது சார் சாப்பிடணும் என்று தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று நைசாக பேசி விட்டு கூடுதல் போலீசாரை வரவழைத்து அவர்களை கைது செய்துள்ளனர்.இந்ந சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஓட்டல்களில் அதிரடி சோதனை
- அதிகாரிகள் எச்சரிக்கை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டு உபயோகசிலிண்டர்களை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து திருப்பத்தூர், வேலூர் மாவட்ட இந்தியன் ஆயில் விற்பனை மேலாளர் ஜெகதீஷ் தலைமையில் ஆம்பூர், திருப்பத்தூர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் டீ கடைகள், ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர்களை பயன்படுத்தியது தெரிய வந்தது. அவ்வாறு பயன்படுத்திய 40 வீட்டு உபயோகசிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் வீட்டிற்கு பயன்படுத் தப்படுத்த கூடிய சிலிண்டர்களை வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது எனவும், அவ்வாறு பயன்படுத்தப்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
- போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்
வேலூர்:
குடியாத்தத்தில் இருந்து வேலூர் நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
திடீரென தனியார் பஸ் பிரேக் பிடித்ததால் அரசு பஸ் தனியார் பஸ் மீது மோதியது. இதில் அரசு பஸ்ஸில் முன்பக்க கண்ணாடி சுக்கு நூறானது. தனியார் பஸ்ஸின் பின்பக்கம் சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
பஸ்கள் விபத்துக்குள்ளா னதால் மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் அதில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
- ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம்
- பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
குடியாத்தம்:
குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகே உள்ள குப்புக்கொட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.
இவர் பல ஆண்டுகளாக ஜான் சீனா என்ற ஒற்றை கொம்புள்ள காளை மாடு வளர்த்து வந்தார். இந்த காளை மாடு விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றது.
இதனை இவரது உறவினரான வீரிச்செட்டி பல்லி கிராமத்தைச் சேர்ந்த ரவி, கோபி என்ற சகோதரர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வளர்த்து எருது விடும் விழாக்களில் பங்குபெற செய்தனர்.
இந்த காளை பல்வேறு ஊர்களில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான பரிசுகளை வென்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வேலூரில் உள்ள தனியார் கால்நடை மருத்து வமனையில் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் ஜான் சீனா காளை இறந்தது. அதைத்தொடர்ந்து ஏராளமானோர் கண்ணீர் மல்க காளைக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து, மலர் மாலைகளை வைத்து அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலையில் ஜான் சீனாவின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
- 10-ந் தேதி நடக்கிறது
- கலெக்டர் அறிவிப்பு
வேலூர்:
இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் வேலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இந்திய சுதந்திர அமுத பெருவிழா 75-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு வேலூரில் வருகிற 10-ந் தேதி இளையோர் திருவிழா நடைபெற உள்ளது.
இதையொட்டி இளம் கலைஞர் ஓவியம், இளம் எழுத்தாளர் (கவிதை), புகைப்படம், பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளும், இளையோர் கலைவிழா, மாவட்ட இளையோர் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ், பரிசு, மாநில போட்டியில் பங்கேற்க வாய்ப்பும் வழங்கப்படும். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது முதல் 29 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து காட்பாடி வி.ஐ.டி. மெயின் கேட் எதிரில் உள்ள நேரு யுவகேந்திரா அலுவலகத்திலோ அல்லது dycnyk.vellore@gmail.com என்ற மின்னஞ்சலிலோ வருகிற 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- குடியாத்தம் நகர மன்ற கூட்டத்தில் தகவல்
- பழுதடைந்த குடிநீர் தொட்டியை சரிசெய்ய கோரிக்கை
குடியாத்தம்:
குடியாத்தம் நகர மன்ற சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற துணைத் தலைவர் எம்.பூங்கொடி மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, பொறியாளர் பி.சிசில்தாமஸ், சுகாதார அலுவலர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர் மனோஜ் பேசுகையில் எனது வார்டில் 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை.
கவிதா பாபு எனது வார்டில் போர் ரிப்பேர் ஆகிவிட்டது. அதனை பொதுமக்களுடைய பணத்தின் மூலம் சரி செய்யப்பட்டது நகராட்சி அதிகாரிகள் சரி செய்யவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் எனது வார்டில் சில பகுதிகளில் கால்வாய் தூர்வார வேண்டும் என்றார்.
ஜாவித் அகமது பேசுகையில்:- எனது வார்டில் கால்வாய் தூர் வாரி துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும்.
ஆட்டோ மோகன் ஒவ்வொரு வார்டிற்க்கும் துப்புரவு பணி மேற்கொள்ள கூடுதலாக பணியாளர்களை நியமிக்க கேட்டிருந்தோம் உடனடியாக நியமித்து தர வேண்டும்.
சிட்டிபாபு பேசுகையில் காந்தி சிலை பின்புறம் உள்ள டேங்க் பழுதடைந்துள்ளது உடனடியாக சரிசெய்து தர வேண்டும்
தீபிகா பேசுகையில் செருவங்கி பகுதியில் கால்வாய் கட்டப்பட்டுள்ளது இன்னும் சிறிது தூரம் கால்வாய் கட்ட வேண்டும் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பாலான உறுப்பினர்கள் குடியாத்தம் நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நகரமன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பைப்புகள் சில தினங்களுக்கு முன் பழுதாகிவிட்டது பைப்புகள் சீர் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு மாற்றாக பசுமாத்தூரிலிருந்து தண்ணீர் தரப்பட்டு வருகிறது.அமிர்தம் திட்டத்தின் கீழ் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அடுத்த மாதம் இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. இப்பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் இப்பணிகள் நிறைவு பெற்றால் குடியாத்தம் நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும் தினம் தோறும் குடிநீர் கிடைக்கும்.
குடியாத்தம் நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
குடியாத்தம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அதற்காக முதல் கட்டமாக பணிகள் மேற்கொள்ள 39 கோடி ரூபாய் ஒதுக்கிய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நகர் மன்றம் சார்பில் நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குடியாத்தம் நகர மன்றத்தின் முதல் நகர மன்ற தலைவர் மறைந்த எம்.வேலாயுதம் முதலியார் நினைவாக அவரது குடும்பத்தினர் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடியாத்தம் நகராட்சி வளாகத்தில் நகரமன்ற தலைவருக்கான அலுவலகம் கட்டி தர உள்ளார்கள் அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை குறித்து பேசினார்கள்.
- வேலூர் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது
- கலெக்டர் அறிவிப்பு
வேலூர்:
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் அனைத்து தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் அனைத்து நிரந்தர ஆதார் சேவை மையங்களில் 10 சதவீதம் சுழற்சி முறையில் ஆதார் சேவை விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி அணைக்கட்டில் இந்தமாதம் 9-ந் தேதி அடுத்த மாதம் 6-ந் தேதி, டிசம்பர் மாதம் 4-ந் தேதியும், குடியாத்தத்தில் இந்த மாதம் 16-ந் தேதி, அடுத்த மாதம் 13-ந் தேதி, டிசம்பர் மாதம் 11-ந் தேதியும், பேரணாம்பட்டில் இந்த மாதம் 23-ந் தேதி, அடுத்த மாதம் 11-ந் தேதி, டிசம்பர் மாதம் 18-ந் தேதியும், வேலூர் மற்றும் காட்பாடியில் இந்த மாதம் 30-ந் தேதி, அடுத்த மாதம் 27-ந் தேதி, டிசம்பர் மாதம் 25 -ந் தேதி ஆதார் சிறப்பு முகாம் நடைபெறும்.
இதனை பொதுமக்கள் பயன்படுத்தி ஆதார் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு எல்ஐசி முகவர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் கிளை சங்க தலைவர் எம்.சுப்பிரமணி தலைமை தாங்கினார். செயலாளர் எம். குலசேகரன், பொருளாளர் ஆர்.சீனிவாசன், நிர்வாகிகள் தலைவர் தேர்வு சி.கண்ணன், செயலாளர் தேர்வு என். விஜயகுமார், நிர்வாகிகள் மல்லிகா, கவிதா, மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாலிசிதாரர்கள் சார்பில் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை கலந்து கொண்டனர்.
எல்ஐசி முகவர் சங்கத்தின் கோட்ட பொதுச் செயலாளர் ஜே.கே.என்.பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி முகவர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், வட்டி வகித்ததை குறைக்க வேண்டும், 5 வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க வேண்டும், பாலிசி மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும், முகவர்களுக்கான பணிக்கொடையை 20 லட்சமாக உயர்த்த வேண்டும், மருத்துவக் குழு காப்பீடு முகவர்களுக்கு வழங்க வேண்டும், குழுக்காப்பீடு வயதுவரம்பு உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- வேலூர் வடக்கு போலீசார் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர்.
- கள்ள நோட்டுகளை வீசி சென்ற கும்பல் யார் என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
வேலூர்:
வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் திருமண மண்டபம் உள்ளது. இதன் அருகே இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்று விட்டனர்.
காற்றில் பிரிந்த ரூபாய் நோட்டுகள் சாலையில் பறந்தன. இதனை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்தனர். அதில் ஒருவர் இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் வடக்கு போலீசார் அங்கு சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். மேலும் பொதுமக்கள் எடுத்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் வாங்கினர். அதனை போலீஸ் நிலையம் கொண்டு வந்து எண்ணிய போது ரூ.14.50 லட்சம் ரூபாய் நோட்டுகள் இருந்தது.
ரூபாய் நோட்டுகளை சோதனை செய்தபோது அது கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.
கள்ள நோட்டுகளை வீசி சென்ற கும்பல் யார் என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இன்று காலையில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் சிலர் எடுத்து சென்றனர். அவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தக்கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வியாபாரிகள் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா அருகே காரிலிருந்து லாரிக்கு பணத்தை மாற்றியபோது போலீசாரிடம் ரூ.14.70 கோடி சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் கள்ள நோட்டுகளை வீசி சென்ற சம்பவம் வேலூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னையில் இருந்து கேரளாவுக்கு கருப்பு பணத்தை எடுத்து செல்வதாகவும், பெரிய இடத்து விவகாரம் என்றும் அவர்கள் கூறினர்.
- பள்ளிகொண்டா போலீசார் 4 பேரையும் கைது செய்து கார் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீசார் நேற்று முன்தினம் இரவு சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கோவிந்தம்பாடி நெடுஞ்சாலையொட்டி கேரள மாநில பதிவெண் கொண்ட லாரியில் காரில் வந்தவர்கள் கொடுத்த பெரிய பைகளை மாற்றிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
பார்சலை சோதனையிட்டதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இதையடுத்து பணப்பைகளுடன் 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இதில் சென்னையை சேர்ந்த நிசார் அஹமத், அவரது உறவினரான மதுரையை சேர்ந்த வாசிம் அக்ரம் மற்றும் கேரள மாநிலம் கோழிக்கோடுவை சேர்ந்த லாரி டிரைவர்கள் சர்புதீன், நாசர் என்பது தெரியவந்தது.
சென்னையில் இருந்து கேரளாவுக்கு கருப்பு பணத்தை எடுத்து செல்வதாகவும், பெரிய இடத்து விவகாரம் என்றும் அவர்கள் கூறினர். யாரிடம் இருந்து யாருக்காக பணம் கொண்டு செல்லப்படுகிறது என்ற தகவலை தெரிவிக்கவில்லை. மேலும் போலீசாரை மிரட்டும் தோணியில் அவர்கள் பேசினர்.
அவர்களிடம் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் விசாரித்ததில் ஹவாலா முறையில் பணப் பரிமாற்றம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட 48 பண்டல்களில் இருந்த பணத்தை எண்ணும் பணி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நீடித்தது. இதில் ரூ.14. கோடிய 70 லட்சத்து 85,400 இருந்தது.
இது தொடர்பாக 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த பள்ளிகொண்டா போலீசார் 4 பேரையும் கைது செய்து கார் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் சென்னையில் உள்ள நாசர் அஹ்மதுவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளும், மத்திய புலனாய்வு குழுவினரும் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் பிடிபட்ட பணம் குறித்து விசாரிக்கப்படும் என மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.






