என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LIC Branch office"

    • பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு எல்ஐசி முகவர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் கிளை சங்க தலைவர் எம்.சுப்பிரமணி தலைமை தாங்கினார். செயலாளர் எம். குலசேகரன், பொருளாளர் ஆர்.சீனிவாசன், நிர்வாகிகள் தலைவர் தேர்வு சி.கண்ணன், செயலாளர் தேர்வு என். விஜயகுமார், நிர்வாகிகள் மல்லிகா, கவிதா, மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாலிசிதாரர்கள் சார்பில் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை கலந்து கொண்டனர்.

    எல்ஐசி முகவர் சங்கத்தின் கோட்ட பொதுச் செயலாளர் ஜே.கே.என்.பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி முகவர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், வட்டி வகித்ததை குறைக்க வேண்டும், 5 வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க வேண்டும், பாலிசி மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும், முகவர்களுக்கான பணிக்கொடையை 20 லட்சமாக உயர்த்த வேண்டும், மருத்துவக் குழு காப்பீடு முகவர்களுக்கு வழங்க வேண்டும், குழுக்காப்பீடு வயதுவரம்பு உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ×