என் மலர்
வேலூர்
- வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் காவலர் வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டது.
அமைச்சர் எ.வ. வேலு, எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், அமலு விஜயன், கலெக்டர் குமார வேல் பாண்டியன், வேலூர் மாநகர மேயர் சுஜாதா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மூன்று முறை 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி போலீசார் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்
பொதுமக்கள் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் பணியின் போது உயிர்த்த காவலர்களுக்கான வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது.
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்கம் நாளில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திருப்பத்தூர் வாணியம்பாடி, ஆம்பூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் இன்ஸ்பெக்டர்கள் மங்கையர்க்கரசி, ஜெயலட்சுமி, சாந்தி, ஹேமாவதி உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
- வாசனை பவுடர் கொட்டி கடத்தல்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு பள்ளி கொண்டா வழியாக போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணா கரன் மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெ க்டர் வெங்கடேசன் ஆகியோர் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது பெங்களூ ரில் இருந்து தினந்தோறும் செல்லும் பார்சல் சர்வீஸ் கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை நோக்கி வந்தது.
போலீசார் வாகனத்தை நிறுத்தி சோதனை யிட்டனர், இதில் வாகனம் முழுவதும் முகத்திற்க்கு பயன்ப டுத்த்கப்படும் பாண்ஸ் பவுடர் கொட்டி இருந்ததும், அதில் பெரிய பெரிய பெட்டிகளில், மூட்கடைளில் பார்சல்கள் இருந்தன.
இதனையடுத்து போலீசார் சந்தேகதின் அடிப்படையில் பார்சல்க ளை பிரித்து பார்க்கும் போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்ப ட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் இருந்தனர்.
வாகனத்துடன் போதைப்பொருட்களை பறிமுதல் செய்து வாகனத்தை ஓட்டி வந்த திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது50) என்பவரை கைது செய்தனர். பள்ளி கொண்டா சுங்கச்சா வடியில் போலீசார் போதைப்பொ ருள்களின் வாசனை வைத்து தான் பிடிக்கின்றனர்.
அதனால் முகத்திற்க்கு பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருளான பவுடரை லாரி முழுவதும் தெளித்து வந்தால் வாசனை வராது இதனால் போலீசார் எங்களை பிடிக்க முடியாது என கூறியுள்ளார்.
- ஒடுகத்தூர் பகுதியில் தொடர் மழை
- விவசாயிகள் மகிழ்ச்சி
அணைக்கட்டு:
ஜவ்வாது மலைப்ப குதியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் மலைப்பகுதியில் அதிக அளவில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒடுகத்தூர் அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்தில் இருந்து உத்திரக்காவேரி ஆறு தோன்றுகின்றது. இந்த ஆறு ஒடுகத்தூர், அகரம், அகரம்சேரி வழியாக பள்ளி கொண்டா பாலாற்றில் கலக்கிறது. மேல்அரசம்பட்டு மலைப்பகுதியில் தற்போது வெள்ளம் ஆர்ப்பரித்து வருகின்றன. இதனால் ஒடுகத்தூர் வழியாக செல்லும் உத்திர காவிரி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கினால் உத்திரக்காவேரி ஆறு செல்லக்கூடிய பகுதியான ஒடுகத்தூர், அகரம், மகமதுபுரம், அகரம்சேரி ஆகிய பகுதிகளை சுற்றியிருக்கும் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த ஆற்றில் ஏற்ப்ப ட்டுள்ள வெள்ளப்பெ ருக்கால் அப்பகுதியை சுற்றி இருக்கும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- வேலூர் மார்க்கெட் பகுதியில் அமைகிறது
- போலீசார் விழிப்புணர்வு
வேலூர்:
தீபாவளி பண்டிகை கொண்டாட பொருட்கள் வாங்க மக்கள் துணிக் கடைகள், நகைக்கடைகளுக்கு குழந்தை களுடன் படையெடுக்கத் தொடங்கியிரு க்கின்றனர். இதனால், வேலூார் லாங்கு பஜாரில் கூட்டம் அலைமோதுகிறது.
வேலுார் மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளில் இருந்தும் வரும் மக்கள் கூட்டத்தால் வேலூர் பழைய, புது பஸ் நிலையம் பகுதிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கூட்டம் அதிகரிப்பதால் பிக்பாக்கெட் திரு டர்கள், சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் மற்றும் கவனத்தை திசை திருப்பி பொருட் களை திருடிச் செல்லும் சமூக விரோதிகளின் நடமாட்டமும் தொடங்கியிருக் கிறது.
இதைத்தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் கூட்டத்தை பயன்ப டுத்தி விலைமதிப்பு மிக்க பொருட்களை திருட வாய்ப்புள்ளதால் மக்கள் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும், முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருடர்களை கண்காணிக்க வசதியாக லாங்கு பஜாரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் இருந்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடு படுகின்றனர்.
இப்போது ஒரு டவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை லாங்கு பஜாரின் பல இடங்களில் டவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தெரிவித்தார்.
- நின்றபடியே உயிர் பிரிந்த பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே உள்ள கேசவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 55).விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வந்தார். இதற்காக வீட்டு அருகிலேயே இரும்பு கம்பி மற்றும் தகரங்களால் ஆன கொட்டகை அமைத்துள்ளார்.
நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்றுடன்மழை பெய்தது. அப்போது மின்கம்பி அறுந்து அவரது மாட்டு கொட்டகையில் விழுந்தது. இதில் மாட்டு கொட்டகை இரும்பு தகடு மற்றும் கம்பி தூண்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.
முருகேசன் மாலை 6.30 மணிக்கு மாடுகளை கட்டுவதற்காக கொட்டகைக்கு சென்றார். அங்குள்ள இரும்பு கம்பியை தொட்ட போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் உறைந்து போன முருகேசன் அப்படியே சுயநினைவு இழந்து கம்பியை பிடித்தவாறு நின்றார். முருகேசன் கம்பியை பிடித்துக் கொண்டு சாதாரணமாக நிற்கிறார் என அவரது மனைவி நினைத்துக் கொண்டார்.
நீண்ட நேரம் அவர் அப்படியே நின்றதால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி முருகேசன் அருகே சென்று அவரை தொட்டார். அப்போதுதான் கணவர் மீது மின்சாரம் பாய்ந்தது அவருக்கு தெரியவந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முருகேசனை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போதுதான் கம்பியை பிடித்தபடியே முருகேசனின் உயிர் பிரிந்தது தெரியவந்தது.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலத்துக்கு மேல் வெள்ளம் வர வாய்ப்பில்லை
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்
வேலூர்:
குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த ஆற்றின் கரைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தற்போது ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூா் சின்ன அல்லாபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் லட்சுமிபிரியா, கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அங்கு, அவா்கள் குழந்தைகளுடன் அமா்ந்து காலை உணவு சாப்பிட்டனா்.
பின்னா், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:
காலை உணவைத் தரமாகவும், சுகாதாரமாகவும் வழங்க வேண்டும். அனைத்து மையங்களுக்கும் கூடுதல் பாத்திரங்கள் வழங்க கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தியுள்ளாா். காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை உணவுப் பாதுகாப்பு அலுவலா்களும், மாநகராட்சி அலுவலா்களும் தொடா்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றுப் பாலத்தில் 2 அடி விட்டம் கொண்ட 8 குழாய்கள் வைத்துள்ளதால், பாலத்துக்கு மேல் வெள்ளம் வர வாய்ப்பில்லை. மேலும், ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 1,000 வீடுகளுக்கு மேல் அப்பு றப்படுத்த ப்பட்டுள்ளன. எனவே, வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
கவுண்டன்யா ஆற்றை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு நாள்தோறும் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. இதனால், கடந்த முறைபோல், சேதம் ஏற்பட வாய்ப்பில்லை என்றாா்.
ஆய்வின்போது உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- அளவீடு செய்த நிலத்திற்கு ஆவணம் கேட்டு முறையீடு
- உதவி கலெக்டர் சமாதானம் செய்தார்
வேலூர்:
அணைக்கட்டு தாலுகா ஒதியத்தூர் அடுத்த மலைகன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகா மில் கலெக்டர் குமாரவே ல்பாண்டியனிடம் " தனது தந்தை பெயரில் உள்ள வீட்டு மனைக்கான நிலத்தின் அளவை குறை வாக காண்பித்து பதிவு செய்து இருக்கிறார்கள்.
அதை மாற்றவேண்டும், நிலத்தை அளவீடு செய்யவேண்டும் என்று பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. தனது தந்தை அலைந்து, அலைந்து இறந்தே போய்விட்டார் என்று முறையிட் டார். மேலும் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதையடுத்து கலெக்டர் வருவாய் துறையினரிடம் விஜயலட்சுமி கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆலோசனையின்பேரில் சப் கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் ரமேஷ், துணை தாசில்தார்கள் ராமலிங்கம், சுதா, வட்ட வழங்கல் அலுவலர் பழனி, வருவாய் அலுவலர் ஜெ யந்தி, சர்வேயர் திலீப்குமார், விஏஓ ரேணு மற்றும் உதவியாளர்கள் பள் ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் பா துகாப்புடன் அளந்து காண்பித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விஜயலட்சுமி மற்றும் அவரது தாயார் மற்றும் தங்கை ஆகியோருடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து 3 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது நிலம் அளவீடு செய்ததற்கான ஆவணங்களை உடனடியாக வழங்க வேண்டும் என விஜயலட்சுமி கோரிக்கை விடுத்தார். ஆவணங்களை தரும் வரை வீட்டுக்கு செல்ல மாட்டோம் எனக்கூறி 3 பேரும் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை உதவி கலெக்டர் பூங்கொடி மற்றும் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அணைக்கட்டு தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- அமிர்தி சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
- விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார்
வேலூர்:
வேலூர் மாவட்டம் அமிர்தியில் வன உயிரின பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தினந்தோறும் சென்று வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நாக நதி கூட்ரோட்டில் இருந்து அமிர்தி பூங்கா வரை உள்ள சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.
தற்போது சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
சில இடங்களில் குலம்போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
இதில் அதிக அளவில் விபத்துகளும் நடக்கிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் கிராம மக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். மேலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
அமிர்தி சாலையை சீரமைக்க கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலையில் நஞ்சுக்கொண்டாபுரம் கிராம மக்கள் அமிர்தியிலிருந்து வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் இந்த ஊராட்சி மன்ற தலைவர் சீதா தமிழ்ச்செல்வன், துணைத்தலைவர் கன்னியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை சீரமைப்பது குறித்து வனத்துறை மற்றும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்சை விடுவித்தனர்.
வனத்துறையில் நிதி இல்லை
அமிர்தி சாலையை சீரமைக்க வனத்துறையினர் தற்போது நிதி இல்லை என கூறுகின்றனர்.இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- வேலூர் மார்க்கெட்டில் சோதனை
- 25 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
வேலூர்:
வேலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதாரத் துறையினர் இது சம்பந்தமாக அடிக்கடி ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
வேலூர் நேதாஜி மார்க்கெட் பூக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.
இதனை தொடர்ந்து இன்று காலை 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்து சாமி தலைமையில் நேதாஜி மார்க்கெட் பூ கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர்.
அப்போது பூக்கள் வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
மொத்தம் 25 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது சம்பந்தமாக 35 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டபோது.மேலும் 35 கடைகளின் உரிமையாளர்களுக்கு 8000 ரூபாய் அபராதம் வகித்தனர். தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- வெல்டிங் வைத்தபோது விபரீதம்
- ஊழியர்கள் மண்ணை கொட்டி அணைத்தனர்
வேலூர்:
வேலூர் பிஷப்டேவிட் நகரை சேர்ந்தவர் டேவிட் (வயது 60). இவருக்கு சொந்தமான ஸ்கூட்டியின் ஸ்டேண்ட் உடைந்துள் ளது. அதை சரி செய்வதற்காக நேற்று அண்ணாசாலையில் போலீஸ் சூப்பிரண்டு பங்களா எதிரே உள்ள வெல்டிங் -கடை க்கு கொண்டு சென்றார். அந்த கடையின் ஊழியர்கள் வெல்டிங் மூலம் ஸ்டேண்டை சரி செய்யும் பணியில் ஈடு பட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் டேங்கில் தீப்பொறி பட்டு திடீரென ஸ்கூட்டர் தீப்பற்றியது. தொடர்ந்து பெட்ரோல் டேங்க் மற்றும் ஸ்கூட்டரின் பின்ப குதி முழுவதும் தீப்பிடித்து சுமார் 10 அடி உயரத்துக்கு எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவ தற்குள் வெல்டிங் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஸ்கூட்டர் மீது மண்ணை கொட்டி தீயை அணைத்தனர்.
- சாலையை கடந்தபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா (வயது 75). இவர் பி.கே. புரம் அருகில் குடியாத்தம் - காட்பாடி தேசிய நெடுஞ் சாலையில் நள்ளிரவில் சாலையை கடந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அதே இடத்தில் சகுந்தலா பலியானார்.
இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகுந்தலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிரைவர் தப்பியோட்டம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொட்டாற்றில் இருந்து மணல் கடத்துவதாக வந்த தொடர் புகார்களின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடி யாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் உள்ளிட்ட போலீசார் நேற்று மாலையில் குடியாத்தம் அடுத்த மேல் தனகொண்டபல்லி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த நபர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
அதைத்தொடர்ந்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிய ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.






