search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீபாவளி கூட்டத்தில் திருட்டை தடுக்க கண்காணிப்பு கோபுரம்
    X

    தீபாவளி கூட்டத்தில் திருட்டை தடுக்க கண்காணிப்பு கோபுரம்

    • வேலூர் மார்க்கெட் பகுதியில் அமைகிறது
    • போலீசார் விழிப்புணர்வு

    வேலூர்:

    தீபாவளி பண்டிகை கொண்டாட பொருட்கள் வாங்க மக்கள் துணிக் கடைகள், நகைக்கடைகளுக்கு குழந்தை களுடன் படையெடுக்கத் தொடங்கியிரு க்கின்றனர். இதனால், வேலூார் லாங்கு பஜாரில் கூட்டம் அலைமோதுகிறது.

    வேலுார் மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளில் இருந்தும் வரும் மக்கள் கூட்டத்தால் வேலூர் பழைய, புது பஸ் நிலையம் பகுதிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கூட்டம் அதிகரிப்பதால் பிக்பாக்கெட் திரு டர்கள், சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் மற்றும் கவனத்தை திசை திருப்பி பொருட் களை திருடிச் செல்லும் சமூக விரோதிகளின் நடமாட்டமும் தொடங்கியிருக் கிறது.

    இதைத்தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதேநேரத்தில் கூட்டத்தை பயன்ப டுத்தி விலைமதிப்பு மிக்க பொருட்களை திருட வாய்ப்புள்ளதால் மக்கள் ஜாக்கிர தையாக இருக்க வேண்டும், முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருடர்களை கண்காணிக்க வசதியாக லாங்கு பஜாரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் இருந்து போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடு படுகின்றனர்.

    இப்போது ஒரு டவர் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளை லாங்கு பஜாரின் பல இடங்களில் டவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தெரிவித்தார்.

    Next Story
    ×