என் மலர்tooltip icon

    வேலூர்

    • மாறாக குறிப்பிட்ட அரங்கு அல்லது மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • கோர்ட்டு உத்தரவுபடி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் வேலூர் மாநகர பகுதியில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். முதலில் கலெக்டர் அலுவலகம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து அண்ணா கலையரங்கம் வரை ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.

    அதற்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆனைகுளத்தம்மன் கோவில் அருகில் இருந்து அண்ணா கலையரங்கம் வரை பேரணியாக செல்ல அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர்.

    இதற்கும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மாறாக குறிப்பிட்ட அரங்கு அல்லது மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவுபடி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.வேலூர் மாவட்ட செயலாளர் நேதாஜி, தலைவர் சசிகுமார், அமைப்பாளர் கணேஷ் ஜி ஆகியோருக்கு போலீசார் விதிமுறைகள் அடங்கிய நோட்டீசை வழங்கி உள்ளனர்.

    இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூறுகையில்:-

    வேலூரில் பேரணி நடத்துவது குறித்து தலைமையில் இருந்து எங்களுக்கு எந்தவிதமான உத்தரவும் இன்னும் வரவில்லை. மேலும் போலீசார் கூறும் விதிமுறைகள் படி பேரணி நடத்த முடியாது என்றனர்.

    • வேலூரில் இதுவரை மொத்தம் 26 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்
    • சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நன்னடத்தை கைதிகள் 700 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு கட்டங்களாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி வேலூரில் உள்ள மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 5 ஆண் கைதிகளும், ஒரு பெண் கைதியும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

    இதுவரை வேலூர் பெண்கள் ஜெயிலில் உள்ள 3. கைதிகளும், ஆண்கள் ஜெயிலில் 23 கைதிகளும் என 26 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் 25 பேர் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடவடிக்கை
    • மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை நடை சாத்தப்படுகிறது

    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் தினமும் பக்தர்களின் தரிச னத்திற்காக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது. வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பவுர்ணமி தினத்தன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை முழு சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்கக்கோவில், சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் நாராயணி கோவில் தரிசன நேரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும். மீண்டும் 9-ந் தேதி காலை 8 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காககோவில் நடை திறக்கப்படும். 

    • வேந்தர் விசுவநாதன் பேச்சு
    • வி.ஐ.டி.யில் எரிபொருள் சம்பந்தமாக தேசிய அளவிலான மாநாடு நடந்தது

    வேலூர்:

    வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் என்ஜீன்கள் மற்றும் எரிபொருள் சம்பந்தமாக தேசிய அளவிலான 27-வது மாநாடு இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. சரஸ்வத். விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன் மற்றும் கவுரவ விருந்தினராக ஜெர்மன் நாட்டின் கிறிஸ்டியன் பெர்னகி கலந்து கொண்டனர்.

    மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆராய்ச்சி மைய இயக்குனர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் வி.ஐ.டி வேந்தர் விஸ்வநாதன் பேசியதாவது:-

    இந்த மாநாடு உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்துள்ளது. அவர்கள் எந்திரம், எரிப்பு மற்றும் எந்திரங்களில் மாற்று எரிபொருள் துறையில் பங்களிப்பில் ஆர்வமாக உள்ளனர்.

    ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவுகளை உள்ளடக்கிய இந்திய வாகனத் தொழில் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய ஒன்றாகும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் ஆகும்.

    2021-2022-ம் ஆண்டில் சராசரியாக ஆண்டுக்கு 23 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்.அதில் சுமார் 5.6 மில்லியன் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2026-ம் ஆண்டுக்குள் ஆட்டோ மொபைல் தொழில் 15 சதவீதம் கூடுதல் வளர்ச்சி பெற்று 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா உலகின் 2-வது பெரிய இரு சக்கர வாகனம் மற்றும் நான்காவது பெரிய கார் உற்பத்தியாளராக உள்ளது . மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வாகனத் துறையின் பங்களிப்பு

    1992-1993 இல் 2.77 சதவீதத்தில் இருந்து 2021-ல் சுமார் 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    இது தவிர, தொழில்துறை வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களை ஏற்றுமதி செய்கிறது, இந்திய வாகனத் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 37 மில்லியன் மக்கள் பணியாற்றுகின்றனர்.

    சமீபகாலமாக, இந்தியா மின்சார வாகனங்களுக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளித்து வருகிறது, மேலும் அது மின்மயமாக்கலுக்காக 2 மற்றும் 3 சக்கர வாகனப் பிரிவில் அதிக கவனம் செலுத்தப் போகிறது.

    இந்திய அரசாங்கம் அனைத்து 3 சக்கர வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகனங்களை (150 சிசி-க்கும் குறைவானது) மின்சார பயன்முறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது.

    மின்சார வாகனங்களின் வளர்ச்சியின் காரணமாக, நகர்ப்புறங்களில் சார்ஜிங் நிலையங்களின் தேவை அதிகமாக இருக்கும். மேலும், மின்சார வாகனங்களை பெருமளவில் ஏற்றுக்கொள்வது வலுவான சார்ஜிங் உள்கட்டமைப்பு, மின்சார வாகனங்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு ஆகியவற்றை கட்டாயமாக்குகிறது.

    மேலும் கனரக வாகனங்களுக்கு தூய மின்சார வாகனங்கள் சாத்தியமில்லை.இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

    அதிநவீன ஆராய்ச்சிகளில் பல இளம் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து சிறப்பு விருந்தினர் சி.எஸ்.ஐ.ஆர். செயலர் கலைச்செல்வி பேசியதாவது:-

    வரும் காலத்தில் பேட்டரியினால் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும். பேட்டரியால் தயாரிக்கப்பட்டு வாகனங்கள் தீப்பற்றி எரிவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு போது கூட அதனை சரிவர கையாள தெரியாமல் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. தற்போது அனைத்து பணிகளுக்கும் மின்சாரம் கையாளப்பட்டடு வருகிறது.

    அதே போல் பேட்டரியினால் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு சரி செய்யப்படும். பேட்டரி வாகனங்கள் பயன்படுத்துவதால் மாசு குறைபாடு ஏற்படுகிறது இவ்வாறு பேசினார்.

    • 30 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான கலை மற்றும் பண்பாட்டுத் திருவிழா காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.

    ஒன்றிய அளவில் தேர்ச்சி பெற்ற வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 30 பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார்.

    காட்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வர பிள்ளை அனைவரையும் வரவேற்றார். சைதாப்பேட்டை கேஏகேஎம் நகரவை மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம் மற்றும் தாதிரெட்டிப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருவலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி, குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியை ஜெயசீலி கிறிஸ்டி, ஜங்காலப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர், செம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேம் சாய்பாபா, சலவன்பேட்டை அரசு நகரவை உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் அகரம்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சினேகலதா உட்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்றனர்.

    காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதன்மை அலுவலர் ராஜா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    முடிவில் உதவி தலைமை ஆசிரியர் குமரன் நன்றி கூறினார்.

    • பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்ற முயற்சி
    • சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்ற 100 பேருக்கு இலவசமாக மரகன்றுகள் வழங்கப்பட்டது.

    அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் முதன்மையான ஊராட்சியாக மாற்ற பல்வேறு விதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒன்றான பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்றுவதாகும்.

    இதற்காக நேற்று கர்ப்பிணி பெண்கள், அங்கன்வாடியில் படிக்கும் குழந்தைகள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோருக்கு சுமார் 100 மரக்கன்றுகாளை ஊராட்சிமன்ற தலைவர் சுகன்யா உமாபதி வழங்கினார்.

    இதில் ஊர் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் கீரை வகை சார்ந்த மரங்கள், பழம் வகையை சார்ந்த மரங்கள், போன்றவைகள் வழங்கப்பட்டது.

    மேலும் இதனையடுத்து அவர் கூறுகையில்:-

    மாதம்தோறும் இலவசமாக வீட்டிற்கு ஒரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அதனை யார் பாதுகாப்பாக பராமரித்து வளர்த்து வருகின்றார்கள் என பார்வையிட்டு அதில் சிறந்தவர்கள் யார் என்பதை பார்த்து அவர்களுக்கு தகுந்த பரிசுகள் வழங்கப்படும் என்றார்.

    • பல்வேறு பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் டவுன் சுண்ணாம்புப்பேட்டையில் வினைதீர்க்கும் விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோபூஜைகள் விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட இந்நிகழ்ச்சியில் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவில் குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் கள்ளூர்ரவி, நத்தம்பிரதீஷ், ரோட்டரி சங்க ஆளுநர் ஜே.கே.என்.பழனி, வழக்கறிஞர் கே.எம்.பூபதி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை மாயகேசவலுநாயுடு குடும்பத்தினர்கள், விழா குழுவினர் பிரதர்ஸ் ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

    • 8-ந்தேதி மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.
    • 8-ந்தேதி மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

    வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் தினமும் பக்தர்களின் தரிசனத்திற்காக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது. வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பவுர்ணமி தினத்தன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை முழு சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்கக்கோவில், சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் நாராயணி கோவில் தரிசன நேரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும். மீண்டும் 9-ந் தேதி காலை 8 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் நடை திறக்கப்படும்.

    • எம்.எல்.ஏ., மேயர் முன்னிலையில் பூஜை நடந்தது
    • வேலூர் மாநகராட்சி பகுதியில் கால்வாய் தூர்வார ஏற்பாடு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி யில் உள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் உள்ள கால்வாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளை தேங்கி விடுகிறது.

    குறுகிய சாலைகளிலும் செல்லும் வகையில் மாநகராட்சி சார்பில் சிறிய வகையிலான 4 பொக்லைன் எந்திரங்களும், பெரிய வகையிலான 4 எந்திரங்களும், மேலும் பெரிய வகையான மற்றொரு பொக்லைன் எந்திரங்கள் என 9 எந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளது.

    புதியதாக வாங்கப்பட்ட எந்திரங்கள் ஒவ்வொரு மண்டலத்திற்கும் சிறிய மற்றும் பெரிய எந்திரங்கள் என 4 மண்டலங்களுக்கும் 8 எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

    புதிதாக வாங்கப்பட்ட எந்திரங்களுக்கு இன்று வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் பூஜை நடந்தது.

    நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர்கள் வீனஸ் நரேந்திரன், யூசுப் கான், வெங்கடேசன், கவுன்சிலர்கள் வி.எஸ்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு டெல்லி முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமை தாங்கினார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாநில திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சீனிவாசன், சென்னை யூனிசெப் நிறுவனத்தின் முன்னாள் கல்வி ஆலோசகர் அருணா ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் பேசியதாவது:-மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் முன் மாதிரியாக தமிழகத்தில் கல்விக்கான தனி குழு அமைத்துள்ளனர். வேறு எங்கும் அமைக்கப்பட வில்லை.

    மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இதுவரை 6 மண்டலங்களில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 7-வது வேலூரில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. நாளை சென்னையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. மற்ற இடங்களில் கூட்டத்தின் போதே மாணவர்கள் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் பின்னால் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தின் நோக்கமே மாணவர்களின் கருத்துக்களை பெறுவது தான். எனவே மாணவர்கள் முன்னால் வரிசையில் அமர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    கருத்துக்களை தெரிவிக்கும் போது மாணவர்கள் அச்சம், தயக்கமின்றி பேசலாம்.தங்க.ள் கருத்துக்களை தாராளமாக தெரிவிக்கலாம் அதுதான் கூட்டத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.

    இவர் அவர் பேசினார். கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் கல்வியா ளர்கள் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எல்.ஆர்.கே.அப்பு மனு
    • வியாபாரிகள், டிரைவர்கள் பாதிக்கப்படுவார்கள்

    வேலூர்:

    வேலூர் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்னர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,500 படுக்கை வசதியுடன் கூடிய புதிய கிளை மருத்துவமனையை தொடங்கியது.

    இந்நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனை வளாகத் தில் செயல்பட்டு வந்த இருதய பிரிவானது ராணிப் பேட்டை மாவட்டத்துக்கு மாற்றப்படுவதாகவும், அவ சர உதவி மற்றும் ஆலோசனை மட்டும் இங்கு வழக்கம்போல் செயல்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

    மேலும் மருத்து வம னையின் முக்கிய பல பிரிவுகள் ராணிப்பேட்டை மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அ.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, சி.எம்.சி. மருத்துவ மனை இயக்குனர் விக்ரம் மேத்யூஸை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    மனுவில், வேலூர் சிஎம்சி மருத்துவ மனைக்கு வெளிநாடு, வெளியூர் மற்றும் உள்ளூர் என பல தரப்பு மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்கள், வருவதால் வேலூரை சேர்ந்த பல வியாபாரிகள், டிரைவர்கள், ஓட்டல்கள் என பல தரப்பு மக்கள் ஆதாயம் அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், மருத்து வமனையில் இயங்கி வரும் பல முக்கிய பிரிவுகள் ராணி ப்பேட்டைக்கு மாற்ற ப்பட் டால் நோயாளிகள் சிரமப் படுவது மட்டுமின்றி, மரு த்துவமனையை நம்பி பிழைப்பு நடத்தும் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

    எனவே, மருத்துவமனையில் இய ங்கி வரும் எந்த பிரிவையும் மாற்ற வேண்டாம். மாறாக ராணிப்பேட்டை மருத்துவ மனையில் புதிய பிரிவு களை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது.

    கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மருத்துவமனை இயக்குனர் விக்ரம் மேத்யூஸ், உரிய ஆலோசனைக்கு பின் பிரிவுகளை மாற்றாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

    • குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
    • ெஜயிலில் அடைப்பு

    வேலூர்:

    காட்பாடி தாராபடவேடு தொகுதியை சேர்ந்தவர் பலராமன் (வயது 27). காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இருவரும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார்.

    அவரது பரிந்துரையின் பேரில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இருவரும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான நகலை வேலூர் ஜெயிலில் உள்ள பலராமன், சீனிவாசனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    ×