search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CMC Hospital"

    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எல்.ஆர்.கே.அப்பு மனு
    • வியாபாரிகள், டிரைவர்கள் பாதிக்கப்படுவார்கள்

    வேலூர்:

    வேலூர் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்னர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,500 படுக்கை வசதியுடன் கூடிய புதிய கிளை மருத்துவமனையை தொடங்கியது.

    இந்நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனை வளாகத் தில் செயல்பட்டு வந்த இருதய பிரிவானது ராணிப் பேட்டை மாவட்டத்துக்கு மாற்றப்படுவதாகவும், அவ சர உதவி மற்றும் ஆலோசனை மட்டும் இங்கு வழக்கம்போல் செயல்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

    மேலும் மருத்து வம னையின் முக்கிய பல பிரிவுகள் ராணிப்பேட்டை மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அ.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, சி.எம்.சி. மருத்துவ மனை இயக்குனர் விக்ரம் மேத்யூஸை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    மனுவில், வேலூர் சிஎம்சி மருத்துவ மனைக்கு வெளிநாடு, வெளியூர் மற்றும் உள்ளூர் என பல தரப்பு மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்கள், வருவதால் வேலூரை சேர்ந்த பல வியாபாரிகள், டிரைவர்கள், ஓட்டல்கள் என பல தரப்பு மக்கள் ஆதாயம் அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், மருத்து வமனையில் இயங்கி வரும் பல முக்கிய பிரிவுகள் ராணி ப்பேட்டைக்கு மாற்ற ப்பட் டால் நோயாளிகள் சிரமப் படுவது மட்டுமின்றி, மரு த்துவமனையை நம்பி பிழைப்பு நடத்தும் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

    எனவே, மருத்துவமனையில் இய ங்கி வரும் எந்த பிரிவையும் மாற்ற வேண்டாம். மாறாக ராணிப்பேட்டை மருத்துவ மனையில் புதிய பிரிவு களை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது.

    கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மருத்துவமனை இயக்குனர் விக்ரம் மேத்யூஸ், உரிய ஆலோசனைக்கு பின் பிரிவுகளை மாற்றாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

    வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் பெண்ணிடம் நகை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ஜனனி (வயது 34). ஊசூர் ஆரம்பசுகாதார நிலையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது உறவினர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை பார்க்க ஜனனி நேற்று இரவு சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    5 சவரன் தங்க நகையை பையில் வைத்து எடுத்து வந்தார். சி.எம்.சி. வந்த ஜனனி அவசர சிகிச்சை பிரிவு அருகே உள்ள கவுண்டரில் பணம் செலுத்த ஜனனி வரிசையில் நின்றிருந்தார்.

    அவருக்கு பின்னால் 2 வாலிபர்கள் வரிசையில் நின்றனர். அதில் ஒருவர் ஜனனி பையில் இருந்த 5 பவுன் தங்க நகையை வெளியே எடுத்தார்.

    அப்போது பை அசைந்தது ஜனனி திரும்பி பார்த்தார். வாலிபர் நகை எடுத்ததை கண்டு திடுக்கிட்டார். சுதாரித்து கொண்ட வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். ஜனனி கூச்சலிட்டார்.

    அங்கிருந்த பொதுமக்கள் வாலிபர்களை விரட்டி சென்றனர். ஆஸ்பத்திரி காவலாளிகள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். இது குறித்து வடக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    அவர்கள் காட்பாடி அடுத்த பனமடங்கியை சேர்ந்த சதீஷ் (25), லத்தேரியை சேர்ந்த கோபி (25) என்பது தெரிந்தது. இவர்கள் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் பணம் செலுத்தும் கவுண்ட்டர் அருகே திட்டமிட்டு திருட வந்துள்ளனர்.

    ஜனனியிடம் நகை திருடியது சம்மந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ், கோபி இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ×