என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கால்நடை மருத்துவமனை முன்பு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடைபெற இருந்த உதவியாளர் காலிபணியிடங்களுக்கான நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தால் 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிபணியிடங்களுக்கான நேர்காணல் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கடந்த 27-ந் தேதி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார் அதில் சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் ஆணையர் அலுவலக கடிதவழி தெரிவிக்கப்பட்டவாறு கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் 29.04.2022 முதல் 11.05.2022 முடிய நடத்திட ஆணை வழங்கப்பட்டது. 

    இதனை தற்போது நேர்காணல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் ஆணையர் அலுவலக கடிதவழி கேட்டு க்கொள்ளப்பட்டுள்ளது. என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோட்டில் உள்ள மாவட்ட கால்நடை பராமரிப்பு மருத்துவம்  முன்பு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அப்போது நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் முறையாக தங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை எனவும் ஏற்கனவே நடைபெறவிருந்த நேர்காணலும் இதேபோன்று நிறுத்தி வைக்கப்பட்டு அதன் பிறகு அந்த நேர்காணல் நடத்தப்படவில்லை தொடர்ந்து இதுபோன்று நடைபெறுவது மிகவும் வேதனையாக உள்ளன.

    மேலும் மன உளைச்சலும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர் இன் சம்பந்தமாக திருவண்ணாமலை போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    அரவிந்தர் வேளாண்மை கல்லூரியில் நீர் மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    இந்திய அரசு நீர்வள அமைச்சகம் மத்திய நிலத்தடி நீர் வாரியத்துடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தென்பள்ளிபட்டு அமைந்துள்ள அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. 

    இதில் ஒருநாள் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திட்டங்கள் மற்றும் செயற்கை நிலத்தடி நீர் செறிவூட்டு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. 

    இவ்விழாவினை கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கி நவீன வேளாண்மையில் மழைநீரின் முக்கியத்துவத்தையும் மற்றும் சேமிப்பையும் எடுத்துரைத்து பேசினார். மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் பணி புரியும் கோபிநாத், மூத்த விஞ்ஞானி, சர்தார் பாஷா, முகமது ரபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டடனர். 


    நிலத்தடி நீர் பாதுகாப்பு மேலாண்மை திட்டங்கள் மற்றும் செயற்கை நிலத்தடி நீர் செறிவூட்டு முறைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரியில் உள்ள மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் உதவிப்பேராசிரியர் மனோஜ் குமார் நன்றி கூறினார்.
    செங்கம் அருகே 4,800 கிலோ ரேசன் அரிசி, லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    செங்கம்:

    திருவண்ணாமலையில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக ேபாலீஸ் சுப்பிரண்டு தகவல் கிடைத்தது. அதன் ேபரில் பவன்குமார்ரெட்டிக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி செங்கம் அருகே உள்ள மேல்செங்கம் அடுத்த ஆனந்தவாடி காவல்சோ தனைச்சாவடியில் நடத்திய வாகன சோதனையில் லாரியில் கடத்தப்பட்ட 4800 கிலோ ரேசன் அரிசியை மடக்கி பிடித்தனர். 

    மேலும் விசாரணை நடத்தியில் திருவண்ணாமலையில் இருந்து நாமக்கலில் உள்ள கோழிப்பண்ணைக்கு ரேசன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. 40 கிலோ எடைகொண்ட 120 அரிசி மூட்டைகளும், கடத்தல் லாரியையும் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ேபாலீஸ் சுப்பிரண்டு ஆர்.சுந்தராம்பாளிடம் ஒப்படைக்கப்பட்டது.
    குடும்ப தகராறில் 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 7 மாத குழந்தை உயிரிழந்தது.
    திருவண்ணாமலை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை விவசாயி. இவரது மனைவி கமலா. அவர் திருவண்ணாமலை எடப்பாளையம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் 7 மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி விட்டு 4 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்தார்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ஓடி வந்து கிணற்றில் குதித்து அந்த பெண்ணையும், 4 மாத குழந்தையையும் உயிருடன் மீட்டனர். ஆனால் 7 மாத ஆண் குழந்தையை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி கைக்குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குழந்தையை பிணமாக மீட்டனர். மீட்கப்பட்ட பெண்ணுக்கும், அந்த பெண் குழந்தைக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில் தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் மற்றும் 7 மாதத்தில் ஆண் குழந்தை இருந்தது. ஆண் குழந்தைக்கு உடல் நல குறைப்பாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

    இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனவேதனை அடைந்த கமலா மருத்துவமனை செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    அப்போது அவர் 4 வயது மகள் மற்றும் 7 மாத கைக்குழந்தையுடன் திருவண்ணாமலை எடப்பாளையம் பகுதிக்கு வந்து அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை அருகே வலியால் துடித்த பெண்ணிற்கு வீட்டிலேயே 108 ஆம்புலன்சு மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா மங்கலம் அடுத்த வேதந்தவாடி கிராமத்தில் இருந்து நேற்று காலை 108 ஆம்புலன்சு கட்டுப்பாட்டு அறைக்கு பிரசவ வலியால் கர்ப்பிணி ஒருவர் துடிப்பதாக  அழைப்பு வந்தது.

    உடனடியாக மங்கலம் பகுதியில் இயங்கும் 108 ஆம்புலன்சுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவ உதவியாளர் பவதாரணி மற்றும் டிைரவர் பிரபாகரன் ஆகியோர் 108 ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

    அங்கு விவசாயி ஏழுமலை என்பவரின் மனைவி அலமேலு (வயது 22) என்பவர் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்சில் ஏற்ற முயன்றே போது அலமேலுவிற்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் வேறுவழியின்றி மருத்துவ உதவியாளர் பவதாரணி வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். 

    இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்பு தாயையும், குழந்தையையும் மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளார்.
    போளூரில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் கஸ்தம்பாடி கிராமத்தில் நேற்று நடைபெற்ற மனுநீதி முகாமில் திருவண்ணாமலை ஆதி திராவிடர் நல அலுவலர் பார்த்திபன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    போளூர் தாசில்தார் சண்முகம் முன்னிலை வகித்தார், தாசில்தார் அருள், வருவாய் ஆய்வாளர் அறிவழகன், கிராம நிர்வாக அலுவலர்கள், மணிகண்டன், தமிழ்ச்செல்வி, அருண் குமார், அன்பழகன், மீனா, துணை வேளாண்மை அலுவலர்கள் சதீஷ்குமார், ராமு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, கஸ்தம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பவுன் அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் மொத்தம் 216 மனுக்கள் பெறப்பட்டது. மொத்தம் 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    திருவண்ணாமலை துணி வியாபாரி கொலையில் தாய், மகன் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பட்டேல் அப்துல்ரசாக் தெருவை சேர்ந்தவர் முகமத் (வயது 27), துணி வியாபாரி. 

    இவர் கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி இரவு நல்லவன்பாளையத்தில் அவரது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். 

    அப்போது அங்கு வந்த திருவண்ணாமலை தென்னைமர தெருவை சேர்ந்த முன்னா என்ற சையது முகமது (25) தரப்பினருக்கும், முகமத் தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் முகமத் மற்றும் அவரது நண்பர்கள் அவரவர் வீட்டிற்கு சென்று உள்ளனர். 

    முகமத் திருவண்ணா மலை அண்ணாநகர் 1-வது தெரு வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னா, அவரது தாய் ஷாமா (46), தேனிமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22), மோசஸ் (40), மிதுலன் (23) ஆகியோர் முகமத்தை வழி மடக்கி தகராறில் ஈடுபட்டனர். 

    பின்னர் முகமத்தை இரும்பு ராடால் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.
    இதில் படுகாயம் அடைந்த அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக முகமத் இறந்தார்.

    முகமத் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதனை தொடர்ந்து முன்னா, அவரது தாய் ஷாமா, மோசஸ், மிதுலன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர். 

    5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். 

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் 5 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இன்று அதிகாலையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அங்காள பரமேஸ்வரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (வயது 40). இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    வினோத்குமார் (17) அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தம்பி தினகரன் (16). அதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

    இவர்கள் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென்று வீட்டின் மேற்கூரை இடிந்து வினோத்குமார், தினகரன் மீது விழுந்தது.

    இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தினகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    வினோத் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கைதி மரணமடைந்த சம்பவத்தால் மனைவி மலர் மற்றும் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தன் கணவரை போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த இளையாங்கண்ணி தட்டறையை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது48). நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்ட கலால் போலீசார் கள்ளச்சாராயம் விற்றதாக தங்கமணியை கைது செய்தனர். இதையடுத்து அவரை திருவண்ணாமலை சப் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தங்கமணிக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனது. இதையடுத்து தங்கமணியை திருவண்ணாமலை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தங்கமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி மலர் மற்றும் உறவினர்கள் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தன் கணவரை போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்கமணி தற்போது கள்ளச்சாராயம் விற்பது இல்லை அவரை கைது செய்வதற்கு முன்பே எங்களிடம் பேரம் பேசினார்கள். நாங்கள் அதற்கு ஒத்துழைக்காத காரணத்தால் அவரை கைது செய்துள்ளனர். நேற்று மாலை தங்கமணி திடீரென உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.

    அவரது உடலை கையெழுத்து போட்டுவிட்டு பெற்று செல்லுங்கள் தங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ நாங்கள் தருகிறோம் இதை வெளியில் பெரிதுபடுத்த வேண்டாம் என போலீசார் எங்களிடம் தெரிவித்தனர்.

    இதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை இறந்து போன உயிர் மீண்டும் வருமா? என்று அவர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 
    ராகிங் வீடியோ வைரலானதை தொடர்ந்து செங்கம் பள்ளியில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
    செங்கம்:

    செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்களை அடித்து நடனம் ஆட வைத்தும், விசிறி விட சொல்லியும் ராகிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த வீடியோவில் நடனம் ஆடாத, விசிறி விடாத சக மாணவர்களை அடிக்கும் காட்சிகள் வெளியானது. 

    இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமையில் செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். 

    மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு  பெற்றோர்கள் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. 

    அப்போது தாசில்தார் முனுசாமி, செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் அரவிந்தன் உள்பட ஆசிரியர் கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாணவர்கள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும், 

    பெற்றோர்கள் மாணவர் களை பள்ளிக்கு அச்சத் துடனே அனுப்பி வைப்ப தாகவும், மாணவர்கள் பள்ளிக்கு சர்வசா தாரணமாக செல்போன் களை கொண்டு வந்து பயன் படுத்துவ தாகவும் தெரிவித்தனர். 

    இதை தொடர்ந்து ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 5 பேரை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    திருவண்ணாமலையில் பொது இடங்களில் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து வரவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அவ்வாறு முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு ரூ.500  அபராதம் வசூலிக்கப்படும். 

    அரசு, தனியார் அலுவலங்களிலும் பணிபுரியும் பணியாளர்கள் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய கல்வியியல் நிலையங்களில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் முககவசம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பஸ்களில் அனைத்து பயணிகளும் முககவசம் அணிந்து பயணம் செய்வதை கண்டக்டர் மற்றும் டிரைவர் கண்காணிக்க வேண்டும். 

    அனைத்துவித வியாபார மையங்களிலும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து கடைக்குவர அறிவுத்தவேண்டும். வழிப்பாட்டுதலங்களுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்து வருவதை கோவில் நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும் என கலெக்டர் முருகேஷ் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
    கீழ்பென்னாத்தூரில் ஏ.டி.எம். கண்ணாடி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் சாணிப்பூண்டி செல்லும் சாலையில் வங்கி ஏ.டி.எம். எந்திரம் ஒன்று உள்ளது. 

    இதனை, வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் ஏ.டி.எம். எந்திரம் உள்ள அறையின் அருகே சத்தம் கேட்டது. 

    அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, ஏ.டி.எம். எந்திரம் உள்ள அறையின் முன்புற கண்ணாடி உடைந்திருந்தது. இது குறித்து வங்கி கிளை மேலாளர் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் வங்கியில் உள்ள கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.
    ×