என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டாட்சியர் விசாரணை நடத்திய காட்சி.
    X
    கோட்டாட்சியர் விசாரணை நடத்திய காட்சி.

    செங்கம் பள்ளியில் கோட்டாட்சியர் விசாரணை

    ராகிங் வீடியோ வைரலானதை தொடர்ந்து செங்கம் பள்ளியில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
    செங்கம்:

    செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சக மாணவர்களை அடித்து நடனம் ஆட வைத்தும், விசிறி விட சொல்லியும் ராகிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த வீடியோவில் நடனம் ஆடாத, விசிறி விடாத சக மாணவர்களை அடிக்கும் காட்சிகள் வெளியானது. 

    இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமையில் செங்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். 

    மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு  பெற்றோர்கள் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. 

    அப்போது தாசில்தார் முனுசாமி, செங்கம் கல்வி மாவட்ட அலுவலர் அரவிந்தன் உள்பட ஆசிரியர் கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாணவர்கள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் எனவும், 

    பெற்றோர்கள் மாணவர் களை பள்ளிக்கு அச்சத் துடனே அனுப்பி வைப்ப தாகவும், மாணவர்கள் பள்ளிக்கு சர்வசா தாரணமாக செல்போன் களை கொண்டு வந்து பயன் படுத்துவ தாகவும் தெரிவித்தனர். 

    இதை தொடர்ந்து ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 5 பேரை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×