என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பு சுவரில் பலமாக மோதியுள்ளது.
    • இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 3மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியிலிருந்து சிமெண்ட் கலவையை டேங்கர் லாரி மூலம் எடுத்துக்கொண்டு ஓட்டுநர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த பாபு என்பவர் வந்துள்ளார்.

    சென்னையில் சிமெண்ட் கலவையை இறக்கிவிட்டு மீண்டும் திருவள்ளூர் வழியாக டேங்கர் லாரியை ஓட்டி வந்துள்ளார். சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பு சுவரில் பலமாக மோதியுள்ளது.

    இதனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 3மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று அமாவாசை தினம் என்பதால் வீரராகவர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகளவில் இருந்ததால் போக்குவரத்து நெரிசல் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    இந்தப் போக்குவரத்து பாதிப்பால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

    • வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • 200-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அம்மனூர் ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியில் மாபெரும் கண்சிகிச்சை ரத்ததான மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    அரக்கோணம் அடுத்த அம்மனூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் சிஎஸ்ஐ தூய பேதுரு ஆலயம், ஆண்கள் ஐக்கிய சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் கண்சிகிச்சை ரத்ததான முகாம் மற்றும் வேலைவாய்ப்பு முகாமை பேராயர் கிதியோன் தினகரன் தொடங்கி வைத்தார்.

    இந்த கண் சிகிச்சை முகாம் மூலம் அம்மனூர், மேல்பாக்கம், பருத்திப் புத்தூர், நாகவேடு சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினி சுதாகர், பிளாரன்ஸ், ஆகியோர் உடன் இருந்தனர்

    • பொக்லைன் எந்திரம் மூலம் லாரி அகற்றப்பட்டது.
    • போலீசார் விசாரணை.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது25) இவர் நேற்று லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு வேலூருக்கு சென்றுவிட்டு இரவு 10 மணி அளவில் வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    வந்தவாசி அடுத்த செங்கம் பூண்டி கிராமம் அருகே வரும்போது லாரி நிலை தடுமாறி ஓடியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள ஆலமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் லாரி டிரைவர் ஜனார்த்தனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தகவலறிந்த பெரணமல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி ஜனார்த்தனன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10, 12-ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும்.
    • இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியே 5 இடங்கள் ஏற்பாடு.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தபட்டோர், சீர்மரபினர் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவர்களுக்காக 28 விடுதிகளும், மாணவிகளுக்காக 13 விடுதிகளும் என மொத்தம் 41 பள்ளி விடுதிகள் உள்ளது. மேலும் 4 மாணவர்கள் விடுதிகளும், 4 மாணவிகள் விடுதிகளும் என மொத்தம் 8 கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகள் உள்ளது.

    பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.

    விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும்.

    மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.

    இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் மூலமாக அப்பகுதியில் அமைந்துள்ள விடுதிகளின் காப்பாளர்களிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை வருகிற ஜூலை மாதம் 31-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் விண்ண ப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்.

    பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையரக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 3 சதவீத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயில விண்ணப்பம் செய்யலாம். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு என தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளவும் அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிப் பயிலவும் அனுமதிக்கலாம். எனவே மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்
    • ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் பஸ்நிலையத்தில் புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா நடந்தது. நகர செயலாளர் அன்பு தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் சரவணன், துணைத் தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) பொதுமேலாளர் ராஜாகுமார் வரவேற்றார்.

    துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு புதிய ஆவின் பாலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, ஆவின் பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இதில், மாவட்ட ஆவின் விற்–பனை மேலாளர் ஞானசேகரன், மாவட்ட விற்பனை அலுவலர் நரசிம்மன், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கனகா பார்த்திபன், பாக்கியராஜ், ஜீவாமனோகர், வட்ட செயலாளர்கள் விஜயன், கலைச்செல்வன், கார்த்திகேயன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் கருணாநிதி, தக–வல் தொடர்பு அணி செய–லா–ளர் சின்னா, ஒன்–றிய பிர–தி–நிதி அருள்–மணி, நக–ர–இ–ளை–ஞ–ரணி அமைப்–பா–ளர் வினோத், துணை அமைப்பாளர் விக்கி, மாணவரணி அமைப்பாளர் ராஜேஷ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    முடிவில் நகர இலக்கிய அணி தலைவரும், ஆவின் முகவரான பன்னீர் நன்றி கூறினார்.


    • காட்டுப் பூனையை சுட்டு வீழ்த்தினர்
    • நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த சொரகுளத்தூர் காப்புக்காடு பகுதியில் கலசபாக்கம் பகுதியை ேசர்ந்தவர்கள் சந்தோஷ் (வயது 30) சின்னமணி (34), இவர்கள் இருவரும் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை கொண்டு வன விலங்குகளை வேட்டையாடுவதாக திருவண்ணாமலை வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் நேரில் சென்று பார்த்தபோது காட்டுப் பூனையை சுட்டு வேட்டையாடி உள்ளனர்.

    மேலும் மானை வேட்டையாட முயற்சி செய்ததனர். பின்னர் அவர்களை தடுத்து நிறுத்தி சந்தோஷ், சின்னமணி இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    மேலும் 2 இருசக்கர வாகனங்கள், உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து, சார்ஜ் பேட்டரி, நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும்தோட்டாக்கள், இரும்பு குண்டுகள், கம்பி வலைகள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

    • தண்ணீர் செல்ல வழி ஏற்பாடு.
    • இருபுறமும் நடைபாதை அமைக்கப்படுகிறது

    கண்ணமங்கலம்:

    கணணமங்கலம் அருகே கொளத்தூர் ஏரி உபரிநீர் வழிந்தோடும் இடத்தில் ரூ.1.70 மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது.

    நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டப்படும் 3 மீட்டர் உயரத்தில், 10 மீட்டர் அகலம் மற்றும் 23 மீட்டர் நீளம் அமைக்ககப்படுகிறது.ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்ட நிதி மூலம் பாலம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதில் 3 தண்ணீர் போகும் வழிகள் அமைக்கப்படுகிறது.

    இதன் மூலம் உபரிநீர் சாலையில் வழியாமல் பாலத்தின் வழியே சென்று மீண்டும் கண்ணமங்கலம் ஏரிக்கால்வாயில், கண்ணமங்கலம் ஏரிக்கு செல்கிறது. இதன் காரணமாக உபரிநீர் வீணாகாமல் ஏரிக்கு செல்லும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. 10மீட்டர் அகலம் கொண்ட இப்பாலம் இருபுறமும் நடைபாதைக்கும் வழிவிடப்படுகிறது.

    தற்போது கட்டப்பட்டு வரும் இந்த பாலம் விரைவில் ஓரிரூ மாதங்களில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

    • 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
    • மாவட்ட அளவில் நடந்தது

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானத்தில் ஆரணி கோட்டை சிலம்பம் விளையாட்டு அமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. லோகநாதன் முன்னிலை வகித்தனர், நந்தகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆரணி நகர மன்ற துணை தலைவர் பாரிபாபு பங்கேற்றார்.

    இதில் காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட சிலம்பம் வீரர்கள் பங்கேற்றனர்.

    மேலும் சிலம்பம் போட்டியில் 6 வயது முதல் 20வயது மாணவ மாணவிகள் தங்களின் திறமைகளை வெளிகாட்டி அசத்தினார்கள்.

    தற்போது வளர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் செல்போனில் முழுமையாக அர்பணித்து தங்களுடைய எதிர்காலத்தை வீணடிக்கின்றனர் இதனால் தமிழர்களின் பாரம்பரியமான கலையாகவும் தற்காப்பு கலையாகவும் விளங்கும் சிலம்பாட்டம் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த போட்டியை நடத்தியதாக தெரிவித்தனர்.

    இறுதியில் வெற்றி பெற்ற சிலம்பாட்ட வீரர்களுக்கு ஆரணி நகர மன்ற துணைதலைவர் பாரிபாபு பரிசுகளை வழங்கினார்.

    இந்நிழ்ச்சியில் கவுன்சிலர்கள் விநாயகம் பானுப்பிரியா பாரதிராஜா தேவராஜ் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் அடுத்த தொரப்பாடி, நரசிங்கநல்லூர் கிராமங்களுக்கு இடையே உள்ள பூமலையில் ஸ்ரீபாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலய நுழைவு வாயிலில் அமைந்துள்ள ஸ்ரீஇடம்புரி விநாயகர் மற்றும் அதன் அருகில் புதிதாக அமைக்க ப்பட்டுள்ள 21 அடி பிரம்மாண்ட பூமலை முருகன் சிலைக்கு மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னிட்டு பூமலை அடிவாரம் ஊர்பொதுமக்கள் உள்பட சுற்றுவட்டார பகுதியில் உள்ள இறையூர், அம்மாபாளையம், பாய்ச்சல், முடியனூர், வாசுதேவன்பட்டு மேலபுஞ்சை, படிஅக்கரகாரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    மகா கும்பாபிஷேக புனித கலசநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழா குழுவினர் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

    • 5-ம் பிரகாரத்தில் பலி பீடம் வைக்கப்படுகிறது
    • சிவாச்சாரியர்கள் பங்கேற்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி மாடவீதிகளில் 8 திசைகளில் 8 பலிபீடங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இவை அஷ்டதிக்கு பாலகர்களாக இருந்து வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பத்து நாள் கார்த்திகை தீப உற்சவம் விழா காலங்கள் மற்றும் பல்வேறு திருவிழாக் காலங்களிலும் கோவிலை சுற்றியுள்ள 8 அஷ்டதிக்கு பாலகர்களுக்கு முதலில் சாமி வருவதற்கு முன்பு பூஜை செய்து அன்னம் இடுவது வழக்கம்.

    அதன்பிறகுதான் சாமி மாட வீதி உலா நடைபெற்று வருகின்றன. தற்போது மாடவீதி சுற்றிலும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பணியை தொடங்கி வைத்து உள்ளார்.

    இப்பணி தற்போது நடைபெற்று வருவதால் மாடவீதியை சுற்றியுள்ள 8 பலி பீடங்களையும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இன்று காலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சாமி சன்னதி முன்பு 8 கலசங்கள் வைக்கப்பட்டு சிவாச்சாரியர்கள் பாலாலய பூஜை செய்தனர்.

    இதன்பிறகு பலிபீடங்களை கோவிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் வைக்கப்படுவதாக கூறப்படுகின்றன.

    • போலீசார் எலும்புக்கூடுகளை சேகரித்து விசாரணை.
    • 3 பேர் சிக்கினர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த நாவல்பாக்கம் கிராமம் அருகே குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தில் எரிந்த நிலையில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தெள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் எலும்புக்கூடுகளை சேகரித்து விசாரணை செய்தனர்.

    எரிந்த நிலையில் டி-ஷர்ட்டும் மற்றும் கடை சாவி இருசக்கர வாகன சாவி ஆகியவை அங்கு கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்ததில் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரி ஏழுமலையின் மகன் விஜய் (வயது 22) என்பது தெரியவந்தது. அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மளிகை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பாமல் காணாமல் போனது தெரியவந்தது.

    போலீசார் இதுகுறித்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விஜயை கொலை செய்துவிட்டு அவருடைய இரு சக்கர வாகனத்தை அருகே உள்ள கிணற்றில் வீசியதாக தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கிணற்றில் தீயணைப்பு வீரர்களை கொண்டு இருசக்கர வாகனத்தை வெளியே எடுத்தனர்.மேலும் போலீசார் விசாரணையில் கார் வாங்குவதில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக விஜய்யை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன் திருவத்தூர் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 56), நெசவு தொழிலாளி ஒரு வருடத்திற்கு முன்பு கொரானாவால் பாதிக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். மேலும் பட்டு நெசவு தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான மனோகரன் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்.

    இந்நிலையில் நேற்று காலை நெசவு கூடத்தில் மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனை சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் மனோகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து இறந்தவரின் மகன் சிவகுமார் செய்யார் போலீசில் நேற்று புகார் செய்தார்.போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×