வாலிபர் எரித்துக் கொலை

போலீசார் எலும்புக்கூடுகளை சேகரித்து விசாரணை. 3 பேர் சிக்கினர்.
எலும்பு கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார்.
எலும்பு கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார்.
Published on

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த நாவல்பாக்கம் கிராமம் அருகே குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தில் எரிந்த நிலையில் ஆங்காங்கே எலும்புக்கூடுகள் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தெள்ளார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் எலும்புக்கூடுகளை சேகரித்து விசாரணை செய்தனர்.

எரிந்த நிலையில் டி-ஷர்ட்டும் மற்றும் கடை சாவி இருசக்கர வாகன சாவி ஆகியவை அங்கு கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை செய்ததில் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரி ஏழுமலையின் மகன் விஜய் (வயது 22) என்பது தெரியவந்தது. அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மளிகை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பாமல் காணாமல் போனது தெரியவந்தது.

போலீசார் இதுகுறித்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விஜயை கொலை செய்துவிட்டு அவருடைய இரு சக்கர வாகனத்தை அருகே உள்ள கிணற்றில் வீசியதாக தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த கிணற்றில் தீயணைப்பு வீரர்களை கொண்டு இருசக்கர வாகனத்தை வெளியே எடுத்தனர்.மேலும் போலீசார் விசாரணையில் கார் வாங்குவதில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக விஜய்யை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com