search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரி உபரி நீர் செல்லும் பாதையில் புதிய தரைப்பாலம்
    X

    கொளத்தூர் ஏரி உபரி நீர் வழிந்தோடும் பகுதியில் சாலையில் புதிய பாலம் கட்டப்படுகிறது.

    ஏரி உபரி நீர் செல்லும் பாதையில் புதிய தரைப்பாலம்

    • தண்ணீர் செல்ல வழி ஏற்பாடு.
    • இருபுறமும் நடைபாதை அமைக்கப்படுகிறது

    கண்ணமங்கலம்:

    கணணமங்கலம் அருகே கொளத்தூர் ஏரி உபரிநீர் வழிந்தோடும் இடத்தில் ரூ.1.70 மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது.

    நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டப்படும் 3 மீட்டர் உயரத்தில், 10 மீட்டர் அகலம் மற்றும் 23 மீட்டர் நீளம் அமைக்ககப்படுகிறது.ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்ட நிதி மூலம் பாலம் கட்டும் பணி தொடங்கியுள்ளது. இதில் 3 தண்ணீர் போகும் வழிகள் அமைக்கப்படுகிறது.

    இதன் மூலம் உபரிநீர் சாலையில் வழியாமல் பாலத்தின் வழியே சென்று மீண்டும் கண்ணமங்கலம் ஏரிக்கால்வாயில், கண்ணமங்கலம் ஏரிக்கு செல்கிறது. இதன் காரணமாக உபரிநீர் வீணாகாமல் ஏரிக்கு செல்லும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. 10மீட்டர் அகலம் கொண்ட இப்பாலம் இருபுறமும் நடைபாதைக்கும் வழிவிடப்படுகிறது.

    தற்போது கட்டப்பட்டு வரும் இந்த பாலம் விரைவில் ஓரிரூ மாதங்களில் நிறைவு பெறும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×