என் மலர்
நீங்கள் தேடியது "Forest officials made the arrest."
- காட்டுப் பூனையை சுட்டு வீழ்த்தினர்
- நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த சொரகுளத்தூர் காப்புக்காடு பகுதியில் கலசபாக்கம் பகுதியை ேசர்ந்தவர்கள் சந்தோஷ் (வயது 30) சின்னமணி (34), இவர்கள் இருவரும் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை கொண்டு வன விலங்குகளை வேட்டையாடுவதாக திருவண்ணாமலை வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் நேரில் சென்று பார்த்தபோது காட்டுப் பூனையை சுட்டு வேட்டையாடி உள்ளனர்.
மேலும் மானை வேட்டையாட முயற்சி செய்ததனர். பின்னர் அவர்களை தடுத்து நிறுத்தி சந்தோஷ், சின்னமணி இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும் 2 இருசக்கர வாகனங்கள், உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி, வெடிமருந்து, சார்ஜ் பேட்டரி, நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும்தோட்டாக்கள், இரும்பு குண்டுகள், கம்பி வலைகள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.






