என் மலர்
திருவண்ணாமலை
- கோரிக்கை வைக்க வேண்டிய அவசியமே இல்லை
- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக முதல்- அமைச்சர் இன்றைக்கு சென்னையில் இருந்தாலும் கூட அவர் திருவாரூர்காரர். நாமோ திருவண்ணாமலை காரர்கள். திருவாரூர் என்றால் ஆன்மிக பெருமக்கள் எப்படி சொல்வார்கள் என்றால் திருவாரூரில் பிறந்த முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று சொல்கிறார். நான் பகுதறிவாலனாக இருக்கின்ற காரணத்தினால் எப்படி சிந்திக்கிறேன் என்றால். திருவாரூரிலும் திரு இருக்கிறது, திருவண்ணாமலையிலும் திரு இருக்கிறது.
இரண்டு திருவையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது. திரு என்ற திருவாரூருக்கு என்றைக்கு அடக்கமாக திருவண்ணாமலை இருந்தே தீரும். அப்படி பட்ட திருவாரூரில் பிறந்த தலைவர் கலைஞர் தான் நமக்கு முகவரி கொடுத்தார். வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்த போது ஒரு மனு கொடுக்க வேண்டும் என்றால் 2½ மணி நேரம் பயணம் செய்து சென்று வேலூரில் தான் மனு கொடுக்க வேண்டும். இன்றைக்கு சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை வேங்கிக்காலில் மனு கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி திருவண்ணாமலை மாவட்டம் என்று முகவரியை தந்தவர் தலைவர் கலைஞர்.
இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிற தமிழக முதல்- அமைச்சர் எங்களுடை பகுத்தறிவு கோவிலினுடைய மூலவர் நீங்கள் தான். உங்களை மையப்புள்ளியாக வைத்து தான் நாங்கள் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறோம். 2 நாட்களுக்கு எனது பள்ளி நண்பர் என்னிடத்தில் சொன்னார், நான் பஸ்சில் போய் கொண்டிருந்தேன். இருபுறமும் 2, 2 சீட்டு இருந்தது. நடுவில் சென்ற நடத்துனர் ஒரு புறம் இருந்த பெண்கள் பகுதியில் திரும்பே இல்லை. ஆண்கள் பகுதியில் மட்டும் டிக்கெட் கேட்டு கொண்டு வந்தார். அப்போது நடத்துனரிடம் பெண்களின் டிக்கெட் கேட்க வில்லையே என்று கேட்டபோது பெண்களிடம் டிக்கெட் கேட்டால் தமிழக முதல்- அமைச்சர் என் சீட்டை கிழித்து விடுவார் என்ற சொன்னதாக கூறினார்.
இது தான் திராவிட மாடல் ஆட்சி. 100 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட இயக்கத்தினுடைய நீதிகட்சி தான் பெண்களுக்கு முதல் முதலாக ஓட்டு உரிமை கொடுத்தது. 100 ஆண்டுகளுக்கு பின்னால் இன்றைக்கு பெண்கள் பொருளாதாரத்தில் வளர வேண்டும் என்று திராவிட மாடல் ஆட்சி நடத்துபவர் தமிழக முதல்- அமைச்சர். அப்படி பட்ட தலைவரிடத்தில் நான் என்ன கோரிக்கை வைப்பது. கோரிக்கை வைக்க வேண்டிய அவசியமே இல்லை. நம் கோப்பு செல்லும் போது திருவண்ணாமலைக்கு அனைத்தையும் அவரே தருவார். இவ்வாறு அவர் பேசினார்.
- லாரி மீது மோதியது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த திருச்சி அரசு பஸ் மோதி பெண்கள் உட்பட 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
சந்தவாசல் அருகே உள்ள வேலூர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் அசோக்குமார் நேற்று வேலூரில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ்சை வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பஸ்சை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு தனியார் கல்லூரி அருகே டைல்ஸ் லோடு ஏற்றி வந்த லாரி சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன் மீது அரசு பஸ் திடீரென எதிர்பாராமல் பின்புறத்தில் வேகமாக மோதியது. இதனால் பஸ்ஸின் முன்பக்கம் உட்கார்ந்து இருந்த 2 பெண்கள் உட்பட5 பேர் படுகாயம் அடைந்த னர். அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 45 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது
- வேலுடன் நிறுவ ஏற்பாடு
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் செந்தில்முருகன் கோவில் உள்ளது.
இக்கோயில் எதிரே உள்ள சிறிய பாறை அருகில் கிராம பொதுமக்கள் சார்பில் புதியதாக 45 அடி உயர முருகர் சிலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
பீடத்தின் மீது முருகர் சிலை வேலுடன் இருப்பது போல் நிறுவ உள்ளதாக அப்பகுதி மக்களும், ஆன்மீகவாதிகளும் தெரிவித்தனர்.
- வாகனங்கள் செல்ல முடியாமல் அவதி
- மின் வாரிய அதிகாரிகளுக்கு மக்கள் பாராட்டு
கண்ணமங்கலம்:
கணணமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் தம்டமலைகோடி மலை செல்லும் வழியில் ரோட்டில் சில இடங்களில் குறுக்கே தாழ்வான நிலையில் மின் கம்பிகள் இருந்தது.
இதனால் அவ்வழியே வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இது குறித்து காட்டுக்காநல்லூர் மின் வாரிய அதிகாரிகளிடம் ஏற்கனவே அப்பகுதி மக்கள் புகார் செய்திருந்தனர்.
மேலும் இது சம்பந்தமாக படங்கள் நேற்று முன்தினம் வாட்ஸ் அப்பில் பரவியதால், மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு நேற்று 9ம்தேதி தாழ்வான நிலையில் இருந்த மின் கம்பிகளை உரிய முறையில் உயர்த்தி கட்ட புதிய மின் கம்பம் நட்டு சீரமைத்தனர்.
மின் வாரிய அதிகாரிகள் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
- பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாடினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்யாறு:
செய்யாறு டவுன், அண்ணா சிலை அருகே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், ஆரணி எம்.பி.யுமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் எம். கலையரசன் தலைமை வகித்தார்.
மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஆர்.அன்பழகன், செய்யாறு தொகுதி தலைவர் வீ.வெங்கடேசன், நகரத் தலைவர் வீ.சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பட்டாசுகள் வெடித்தும், பிறந்தநாள் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் கே.கிருஷ்ணமூர்த்தி, சிங்காரவேலு, அமரேசன், பாபு, சுப்பிரமணி, சத்தியமூர்த்தி, முனியாண்டி, மனோகரன் மேலும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சதீஷ்குமார், பரமசிவன், சிலம்பரசன், மனோஜ் குமார், ஆனந்தன், லோகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நாசம்
- வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு மங்களாபுரம் கிராமம் படவேடு செண்பகத்தோப்பு அணைக்கு செல்லும் வழியில் உள்ள மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள விவசாய நிலங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இரவு நேரத்தில் காட்டு எருமைகள் விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது.
இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் அச்சமும் வேதனையுடன் உள்ளனர்.
எனவே சந்தவாசல் வனத்துறையினர் காட்டெருமைகள் வருவதை கண்காணிக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனை சரி செய்ய வேண்டிய வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். விவசாய நிலங்களில் காட்டெருமைகள் வராமல் தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு படவேடு வேட்டகிரிபாளையம் பகுதியில் வாழைத் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை அப்பகுதி விவசாயி ஒருவரை தாக்கியது. அதில் அவர் பரிதாபமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.
- பணிமுடிந்து சைக்கிளில் வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (வயது70). இவர் சேத்பட் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாகன உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 6-ந் தேதி( புதன்கிழமை) மாலை பணிமுடிந்து இவர் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வந்தவாசி-சேத்பட் சாலையில் சீனிவாசா நகர் அருகில் செல்லும்போது இவருக்கு பின்னால் பயணிகள் ஏற்றி கொண்டு வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக தாமோதரன் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாமோதரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாமோதரனின் மகன் ராமச்சந்திரன் வந்தவாசி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின் கம்பிகள் உரசுவதால் மின்சாரம் தாக்கும் ஆபத்து உள்ளது
- அதிகாரிகள் சீரமைக்க வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் தம்டமலைகோடி மலை முருகர் கோயிலுக்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த தாழ்வான நிலையில் மின் கம்பங்கள் வழியாக மின் கம்பிகள் உள்ளது. இவ்வழியே தினமும் பள்ளி பேருந்துகள், அறுவடை இயந்திரங்கள் சென்று வருகின்றன. அப்போது உயரமான வாகனங்களில் மின் கம்பிகள் உரசுவதால் மின்சாரம் தாக்கும் ஆபத்து உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக காட்டுக்காநல்லூர் மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் இன்னும் மின் கம்பிகளை உரிய முறையில் உயர்த்தி கட்ட வில்லை.
எனவே இந்த மின் கம்பிகளை உரிய முறையில் மின் வாரிய அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
- சிசிடிவி கேமரா பதிவை வைத்து ஆய்வு
- போலீசார் விசாரணை
போலீசார் விசாரணைஆரணி:
ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவா் பூவரசன் டிரைவா்இவர் மனைவி பட்டு என்பவருடன் தனது பைக்கில் ஆரணி டவுன் மண்டி வீதியில் உள்ள தனியார் வங்கிக்கு வந்தார். அப்போது வங்கியின்வளாகம் வெளியில்நிறுத்தி விட்டு வங்கி உள்ளே சென்றுள்ளார்.
மேலும் சிறிது நேரம் வங்கி வேலையை முடித்து விட்டு வெளியில் வந்தார் . பூவரசன் வங்கி வளாகம் வெளியில் பைக்கில் இருந்த இடத்தில் தன்னுடைய பைக்கை இல்லாததை கணடு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கம் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை இதனால் ஆரணி டவுன் போலீசில்பூவரசன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் வங்கியின் உள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து ஆய்வு செய்த போது பைக்கை வாலிபா் ஒருவா் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
போலீசார் பைக் திருடிய வாலிபரை தேடி வருகின்றனர்.
- 130-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர்
- குடல் சரிந்த நிலையில் இறந்தது
வேட்டவலம்:
வேட்டவலம் அடுத்த இசுக்கழி காட்டேரி ஊராட்சியை சேர்ந்தவர்கள் முனுசாமி, கண்ணன் இவர்கள் இருவரும் அதே பகுதியில் அருகருகே ஆட்டுப்பட்டி அமைத்து 130-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு, மீண்டும் ஆட்டுப்பட்டியில் அவற்றை அடைத்து வைத்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆட்டுப்பட்டிகளில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது.இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது முனுசாமியின் பட்டியில் இருந்த 10 ஆடுகளும், கண்ணன் பட்டியில் இருந்த 5 ஆடுகளும், குடல் சரிந்த நிலையில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தது.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் கால்நடை மருத்துவர்கள் ராஜேஷ்வரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இறந்த ஆடுகளை உடற்கூறு ஆய்வு செய்தது அருகில் உள்ள இடத்தில் புதைத்தனர்.மேலும் ஆடுகளை மர்ம விலங்கு ஏதேனும் கடித்து இறந்து இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
- தி.மு.க. ஆட்சியில்தான் திருவண்ணாமலை கோவிலில் முழுமையாக திருப்பணிகள் செய்யப்பட்டது.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு 13 கோவில்களுக்கு குட முழுக்கு செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் இன்று காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் பண்பாட்டுச் சிறப்புகளால் பரவி கிடக்கிறது. 217 அடி உயர ராஜகோபுரத்துடன் கூடிய அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ள இந்த திருவண்ணாமலைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் 1989-ம் ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.
1963-ம் ஆண்டு நடந்த திருவண்ணாமலை இடைத்தேர்தல் தான் 1967 ஆட்சி மாற்றத்திற்கு அடித்த ளமாக அமைந்தது. அதே போல கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நான் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்தை திருவண்ணாமலையில் தொடங்கினேன். அது வெற்றி பயணமாக தொடங்கி தற்போது ஆட்சி பயணமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கும் அடித்தளமாக அமைந்தது திருவண்ணாமலை தான்.
தி.மு.க. ஆட்சியில்தான் திருவண்ணாமலை கோவிலில் முழுமையாக திருப்பணிகள் செய்யப்பட்டது.
2004-ம் ஆண்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை தொல்பொருள் துறை எடுத்துக்கொள்ள முடிவு செய்தது. அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த கருணாநிதியிடம் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
தொல்பொருள் துறை கட்டுப்பாட்டுக்குள் கோவில் வந்தால் ஆன்மீக பணியில் தொய்வு ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர். அதனை ஏற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும் அருணாசலேஸ்வரர் கோவிலை மீட்டுக் கொடுத்தோம்.
மதத்தின் பெயரால் அரசியல் கட்சி நடத்துபவர்களுக்கு இந்த வரலாறு தெரியாது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்கள், சித்ரா பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்தின்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்து பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
இதற்காக கலெக்டர் தலைமையில் குழு அமைத்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் காந்தி சிலையிலிருந்து திருவூடல் தெரு வரை கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
கோவிலில் முதலுதவி மையம் தொடங்கப்பட்டு உள்ளது. ரூ.1 கோடியே 14 லட்சம் செலவில் மின்விளக்கு மேம்பாடு செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு 13 கோவில்களுக்கு குட முழுக்கு செய்யப்பட்டு உள்ளது. மேலும் 131 கோவில்களில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் ஆன்மிக வியாதிகள். மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மீகத்தை பயன்படுத்த கூடாது.
அறிவார்ந்தவர்கள் எங்களுக்கு ஆலோசனைகளை கூறலாம். அதனை நாங்கள் செயல்படுத்துவோம். எங்களுக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் காத்துக் கிடக்கிறது. இது தேர்தல் காலம் அல்ல மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய காலம். பொய் புரட்டு பேசி மலிவான விளம்பரம் தேடுபவர்கள் பேசுபவர்கள் பற்றி ஐ டோன்ட் கேர். அதே போல் நீங்களும் ஐ டோன்ட் கேர் என கூறிவிட்டு மக்கள் பணிகளை செய்யுங்கள்.
பொய்களை அனாதைகளாக விட்டுவிட்டு உண்மை வெளிச்சத்தின் துணையுடன் சென்றால் முன்னேற்றம் அடையலாம் இலக்குகளை அடையலாம். காலம் தவறாமல் கடமையை செய்ய வேண்டும். கோப்புகள் நாடாவில் கட்டுக்குள் உறங்கிக் கிடக்கும்போது ஊழல் எழுந்து உட்கார்ந்து ஊர் சுத்த புறப்பட்டு விடுகிறது என்று கருணாநிதி கூறுவார். அரசு அலுவலகங்களில் எந்தவித கோப்புகளும் தேங்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பணியாற்ற வேண்டும். இதற்காக தான் நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நேரடியாக ஆய்வு செய்து வருகிறேன்.
மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நாங்கள் மக்கள் பணியாற்றி வருகிறோம். என் மீது மக்கள் வைத்திருக்க கூடிய நம்பிக்கை நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த நம்பிக்கை என் மீது தனிப்பட்ட முறையில் வைத்த நம்பிக்கை அல்ல தமிழினம் ஒளி பெற நடந்து கொண்டு இருக்கிற திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை. அந்த நம்பிக்கையை காப்பாற்ற உங்களில் ஒருவனாக உண்மையாக உழைப்பேன்.
அண்ணா, கருணாநிதி காட்டிய கொள்கை வழியில் நடப்போம். அனைத்து வளங்களும் கொண்ட மாநிலமாக இந்த தமிழகத்தை உயர்த்தி காட்டுவோம். இந்த திராவிட மாடல் ஆட்சியில் எல்லாருக்கும் எல்லாம் என்பதை செயல்படுத்தி காட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
- திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வருகை தந்தார். அவருக்கு வழிநெடுகிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசி பாடி புதூர் கிராமத்தில் வசிக்கும் மனவளர்ச்சிக்குன்றிய மாணவர் சிவானந்தம் என்பவரது வீட்டிற்கு சென்று அவருக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி நலம் விசாரித்தார்.
பின்னர் அவர் ஆராஞ்சி கிராமத்தில் நடந்த 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையத்தை தொடங்கி வைத்தார்.
மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க தொடர் வாசிப்பு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாவட்டங்கள் மற்றும் வட்டாரங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார். அவர் புகைப்பட விளக்க புத்தகத்தை வெளியிட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் இல்லம் தேடி கல்வி மையத்தை தொடங்கி வைத்து கற்றல் உபகரணங்கள் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
திருவண்ணாமலை பெரிய தெருவில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகளை வழங்கினார்.
இதையடுத்து முதல் நாள் பயணத்தின் முக்கிய நிகழ்வான திருவண்ணாமலை ஈசானிய மைதானம் அருகே அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அங்கு நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
2-வது நாளான இன்று காலை திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் பிறகு நகராட்சி மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு 1 லட்சத்து 71 ஆயிரத்து 169 பயனாளிகளுக்கு ரூ.693.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில் 91 முடிவுற்ற புதிய கட்டிட பணிகளை திறந்து வைத்தார். மேலும் 246 புதிய கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. விழாவையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.






