என் மலர்
உள்ளூர் செய்திகள்

வங்கி முன்பு நிறுத்திய பைக் திருடப்பட்ட காட்சிகள் கேமராவில் பதிவானது.
வங்கி முன்பு நிறுத்திய பைக் திருட்டு
- சிசிடிவி கேமரா பதிவை வைத்து ஆய்வு
- போலீசார் விசாரணை
போலீசார் விசாரணைஆரணி:
ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவா் பூவரசன் டிரைவா்இவர் மனைவி பட்டு என்பவருடன் தனது பைக்கில் ஆரணி டவுன் மண்டி வீதியில் உள்ள தனியார் வங்கிக்கு வந்தார். அப்போது வங்கியின்வளாகம் வெளியில்நிறுத்தி விட்டு வங்கி உள்ளே சென்றுள்ளார்.
மேலும் சிறிது நேரம் வங்கி வேலையை முடித்து விட்டு வெளியில் வந்தார் . பூவரசன் வங்கி வளாகம் வெளியில் பைக்கில் இருந்த இடத்தில் தன்னுடைய பைக்கை இல்லாததை கணடு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அக்கம் பக்கம் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை இதனால் ஆரணி டவுன் போலீசில்பூவரசன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் வங்கியின் உள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து ஆய்வு செய்த போது பைக்கை வாலிபா் ஒருவா் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
போலீசார் பைக் திருடிய வாலிபரை தேடி வருகின்றனர்.






