என் மலர்
நீங்கள் தேடியது "சிகிச்சை பலனின்றி தாமோதரன் பரிதாபமாக இறந்தார்."
- பணிமுடிந்து சைக்கிளில் வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் தாமோதரன் (வயது70). இவர் சேத்பட் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாகன உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சீதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 6-ந் தேதி( புதன்கிழமை) மாலை பணிமுடிந்து இவர் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வந்தவாசி-சேத்பட் சாலையில் சீனிவாசா நகர் அருகில் செல்லும்போது இவருக்கு பின்னால் பயணிகள் ஏற்றி கொண்டு வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக தாமோதரன் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தாமோதரன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாமோதரனின் மகன் ராமச்சந்திரன் வந்தவாசி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






