என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை வேலூர் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை மற்றும் அண்ணா நுழைவாயில் ஆகியவற்றை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலைக்கு வேண்டிய அனைத்தையும் முதல்-அமைச்சரே நிறைவேற்றி தருவார்
- கோரிக்கை வைக்க வேண்டிய அவசியமே இல்லை
- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக முதல்- அமைச்சர் இன்றைக்கு சென்னையில் இருந்தாலும் கூட அவர் திருவாரூர்காரர். நாமோ திருவண்ணாமலை காரர்கள். திருவாரூர் என்றால் ஆன்மிக பெருமக்கள் எப்படி சொல்வார்கள் என்றால் திருவாரூரில் பிறந்த முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று சொல்கிறார். நான் பகுதறிவாலனாக இருக்கின்ற காரணத்தினால் எப்படி சிந்திக்கிறேன் என்றால். திருவாரூரிலும் திரு இருக்கிறது, திருவண்ணாமலையிலும் திரு இருக்கிறது.
இரண்டு திருவையும் யாரும் பிரித்து பார்க்க முடியாது. திரு என்ற திருவாரூருக்கு என்றைக்கு அடக்கமாக திருவண்ணாமலை இருந்தே தீரும். அப்படி பட்ட திருவாரூரில் பிறந்த தலைவர் கலைஞர் தான் நமக்கு முகவரி கொடுத்தார். வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்த போது ஒரு மனு கொடுக்க வேண்டும் என்றால் 2½ மணி நேரம் பயணம் செய்து சென்று வேலூரில் தான் மனு கொடுக்க வேண்டும். இன்றைக்கு சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை வேங்கிக்காலில் மனு கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி திருவண்ணாமலை மாவட்டம் என்று முகவரியை தந்தவர் தலைவர் கலைஞர்.
இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிற தமிழக முதல்- அமைச்சர் எங்களுடை பகுத்தறிவு கோவிலினுடைய மூலவர் நீங்கள் தான். உங்களை மையப்புள்ளியாக வைத்து தான் நாங்கள் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறோம். 2 நாட்களுக்கு எனது பள்ளி நண்பர் என்னிடத்தில் சொன்னார், நான் பஸ்சில் போய் கொண்டிருந்தேன். இருபுறமும் 2, 2 சீட்டு இருந்தது. நடுவில் சென்ற நடத்துனர் ஒரு புறம் இருந்த பெண்கள் பகுதியில் திரும்பே இல்லை. ஆண்கள் பகுதியில் மட்டும் டிக்கெட் கேட்டு கொண்டு வந்தார். அப்போது நடத்துனரிடம் பெண்களின் டிக்கெட் கேட்க வில்லையே என்று கேட்டபோது பெண்களிடம் டிக்கெட் கேட்டால் தமிழக முதல்- அமைச்சர் என் சீட்டை கிழித்து விடுவார் என்ற சொன்னதாக கூறினார்.
இது தான் திராவிட மாடல் ஆட்சி. 100 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட இயக்கத்தினுடைய நீதிகட்சி தான் பெண்களுக்கு முதல் முதலாக ஓட்டு உரிமை கொடுத்தது. 100 ஆண்டுகளுக்கு பின்னால் இன்றைக்கு பெண்கள் பொருளாதாரத்தில் வளர வேண்டும் என்று திராவிட மாடல் ஆட்சி நடத்துபவர் தமிழக முதல்- அமைச்சர். அப்படி பட்ட தலைவரிடத்தில் நான் என்ன கோரிக்கை வைப்பது. கோரிக்கை வைக்க வேண்டிய அவசியமே இல்லை. நம் கோப்பு செல்லும் போது திருவண்ணாமலைக்கு அனைத்தையும் அவரே தருவார். இவ்வாறு அவர் பேசினார்.






