என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஷ்ணு பிரசாத் எம்.பி., பிறந்த நாளையொட்டி திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் கலையரசன் சிறுமிக்கு இனிப்பு ஊட்டிய போது எடுத்த படம்.
செய்யாறில் ஆரணி எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி. பிறந்தநாள் விழா
- பட்டாசு வெடித்து, கேக் வெட்டி கொண்டாடினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்யாறு:
செய்யாறு டவுன், அண்ணா சிலை அருகே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், ஆரணி எம்.பி.யுமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் எம். கலையரசன் தலைமை வகித்தார்.
மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஆர்.அன்பழகன், செய்யாறு தொகுதி தலைவர் வீ.வெங்கடேசன், நகரத் தலைவர் வீ.சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பட்டாசுகள் வெடித்தும், பிறந்தநாள் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் கே.கிருஷ்ணமூர்த்தி, சிங்காரவேலு, அமரேசன், பாபு, சுப்பிரமணி, சத்தியமூர்த்தி, முனியாண்டி, மனோகரன் மேலும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சதீஷ்குமார், பரமசிவன், சிலம்பரசன், மனோஜ் குமார், ஆனந்தன், லோகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






