என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறந்து கிடந்த ஆடுகள்.
மர்ம விலங்கு கடித்து செம்மறி ஆடுகள் பலி
- 130-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர்
- குடல் சரிந்த நிலையில் இறந்தது
வேட்டவலம்:
வேட்டவலம் அடுத்த இசுக்கழி காட்டேரி ஊராட்சியை சேர்ந்தவர்கள் முனுசாமி, கண்ணன் இவர்கள் இருவரும் அதே பகுதியில் அருகருகே ஆட்டுப்பட்டி அமைத்து 130-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு, மீண்டும் ஆட்டுப்பட்டியில் அவற்றை அடைத்து வைத்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆட்டுப்பட்டிகளில் இருந்து ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது.இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது முனுசாமியின் பட்டியில் இருந்த 10 ஆடுகளும், கண்ணன் பட்டியில் இருந்த 5 ஆடுகளும், குடல் சரிந்த நிலையில் படுகாயங்களுடன் இறந்து கிடந்தது.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் கால்நடை மருத்துவர்கள் ராஜேஷ்வரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இறந்த ஆடுகளை உடற்கூறு ஆய்வு செய்தது அருகில் உள்ள இடத்தில் புதைத்தனர்.மேலும் ஆடுகளை மர்ம விலங்கு ஏதேனும் கடித்து இறந்து இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.






