என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் விபத்தில் 5 பேர் படுகாயம்
- லாரி மீது மோதியது
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த திருச்சி அரசு பஸ் மோதி பெண்கள் உட்பட 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
சந்தவாசல் அருகே உள்ள வேலூர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் அசோக்குமார் நேற்று வேலூரில் இருந்து திருச்சி செல்லும் அரசு பஸ்சை வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பஸ்சை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு தனியார் கல்லூரி அருகே டைல்ஸ் லோடு ஏற்றி வந்த லாரி சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன் மீது அரசு பஸ் திடீரென எதிர்பாராமல் பின்புறத்தில் வேகமாக மோதியது. இதனால் பஸ்ஸின் முன்பக்கம் உட்கார்ந்து இருந்த 2 பெண்கள் உட்பட5 பேர் படுகாயம் அடைந்த னர். அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






