என் மலர்
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி 23 டன் நோட்டு புத்தகங்களுடன் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
திருவள்ளூர்:
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 23 டன் எடை கொண்ட நோட்டு புத்தகங்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி லாரி வந்தது.
திருவள்ளூர் அருகே உள்ள மேலனூர் மூலக்கரை பகுதியில் இன்று காலை லாரியை டிரைவர் சாலை ஓரமாக நிறுத்த முயன்றார்.
அப்போது சாலையோரத்தில் இருந்த மண்ணில் சரிவு ஏற்பட்டது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி 23 டன் நோட்டுப்புத்தகங்களுடன் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்துதும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.

திருவள்ளூர் அருகே பஸ் நிறுத்தம் அமைப்பதற்கும், ஆக்கிரமிப்பை அகற்றவும் கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள விஷ்ணுவாக்கம் கிராமத்தில் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு செய்து பஸ்நிறுத்தம் அமைப்பதற்கு இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
இதற்கிடையே ஏற்கனவே தேர்வு செய்த இடத்தில் இல்லாமல் தற்போது வேறு இடத்தில் மாற்றி பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் விஷ்ணுவாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் அரசுக்கு சொந்தமான 23 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கான்கிரீட் சுவர் எழுப்பப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் தமிழரசு தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கண்ணன் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அரசு நிலத்தை பாதுகாத்து ஆக்கிரமிப்பை அகற்ற கோரி விஷ்ணுவாக்கம் கிராமத்தில் திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் தாரணி ஈஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன், சுப்பிரமணி மற்றும் வெங்கல் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பஸ் நிறுத்தம் அமைப்பதற்கும், ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நேமலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்களை சிலர் ஆக்கிரமித்து விற்பனை செய்வதை கண்டித்து திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகே தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்:
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள நேமலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்களை சிலர் ஆக்கிரமித்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகே தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் நிறுவனர் ரபீக் தலைமை தாங்கினார். தேசிய பொதுச்செயலாளர் விஜயலட்சுமி, தேசிய செயலாளர் சுமலதா, மாவட்ட தலைவர் யுவராஜ், மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் பாலகுரு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறும்போது, ‘விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்வதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

மீஞ்சூர் அருகே ஊராட்சி தலைவர் படுகொலை தொடர்பாக 7 பேரை பிடித்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த கொண்டகரையை சேர்ந்தவர் மனோகரன் (வயது38). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கொண்டகரை ஊராட்சியில் 2வது முறையாக தலைவராக பதவி வகித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அவர் மனைவி சர்மிளா, மகன் ரக்சன், மகள் ரக்சிதா ஆகியோருடன் குருவி மேடு கிராமத்தில் நடந்த ஒரு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து விட்டு காரில் திரும்பி கொண்டு இருந்தார்.
குருவி மேடு அசோக் லேலாண்ட் கம்பெனி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி திடீரென கார் மீது மோதி இடித்து தள்ளியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் சரிந்து சிக்கியது.
அப்போது லாரியில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 10 பேர் கும்பல் மனோகரனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது.
கொலையுண்ட ஊராட்சி தலைவர் மனோகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதேபோல் வல்லூர் அனல்மின் நிலையத்தில் சாம்பல் கழிவுகளை எடுக்கும் ஒப்பந்தம் மற்றும் தனியார் கம்பெனிகளில் காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து வந்துள்ளார்.
தொழில் போட்டியில் இந்த கொலை நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் 7 பேரை பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே மனோகரன் காரில் வந்தபோது லாரி மோதி தள்ளும் பதைபதைக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி உள்ளது.
அதில் மனோகரன் குடும்பத்துடன் வந்த காரை எதிரே லாரியில் வந்த கொலை கும்பல் மோதி இடித்து சிறிது தூரம் தள்ளி செல்கின்றனர். பின்னர் லாரியில் இருந்து இறங்கும் மர்மநபர்கள் மனோகரனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடும் காட்சி பதிவாகி உள்ளது.
மனோகரனை கொலையாளிகள் வெட்டியதும் கடைசி நேரத்தில் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்த அவர் காரில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது மனோகரனும், அவரது மனைவி சர்மிளாவும் கொலையாளிகளிடம் உயிருடன் விட்டுவிடுங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்று கெஞ்சி உள்ளனர்.
அப்போது கொலையாளிகள் எவ்வளவு பணம் கொடுப்பாய் என்று கேட்டபடி மனோகரனை கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி இருக்கிறார்கள்.
இந்த கொலையில் ஈடுபட்டது கூலிப்படையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, மனோகரன் கொலையில் குற்றவாளிகள் சிக்கி உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

தொழில் போட்டியில் மனோகரனுக்கும் சிலருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த கொண்டகரையை சேர்ந்தவர் மனோகரன் (வயது38). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கொண்டகரை ஊராட்சியில் 2வது முறையாக தலைவராக பதவி வகித்து வந்தார்.
நேற்று இரவு அவர் மனைவி சர்மிளா, மகன் ரக்சன், மகள் ரக்சிதா என குடும்பத்துடன் குருவி மேடு கிராமத்தில் நடந்த ஒரு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து விட்டு காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
குருவி மேடு அசோக் லைலாண்ட் கம்பெனி அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென கார் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் சரிந்து சிக்கியது.
அப்போது லாரியில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 10 பேர் கும்பல் கார் கண்ணாடியை உடைத்து மனோகரனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மனோகரன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை கண்ட காரில் இருந்த அவரது மனைவி சர்மிளா மற்றும் மகன், மகள் அலறி துடித்தனர்.
உடனே கொலை வெறி கும்பல் தாங்கள் வந்த அதே லாரியில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிய மனோகரனை மீட்டு திருவெற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மனோகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனோகரன் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி மீஞ்சூர் மணலி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் மீஞ்சூர் மணலி நெடுஞ்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலையாளிகளை பிடிக்க செங்குன்றம் உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ஊராட்சி தலைவர் மனோகரனை மர்ம கும்பல் திட்டமிட்டு தீர்த்து கட்டி உள்ளனர். அவர் காரில் வருவதை அறிந்து லாரியால் மோதவிட்டு கொடூரமாக மனைவி, குழந்தைகள் கண்முன்னேயே தீர்த்து கட்டி இருக்கிறார்கள்.
கொலையாளிகள் தப்பி சென்ற லாரி எந்த வழியாக சென்றது என்பது குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கொலையுண்ட ஊராட்சி தலைவர் மனோகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதேபோல் வல்லூர் அனல் மின் நிலையத்தில் சாம்பல் கழிவுகளை எடுக்கும் ஒப்பந்தம், மற்றும் தனியார் கம்பெனிகளில் காண்டிராக்ட் எடுத்து தொழில் செய்து வந்துள்ளார்.

மனோகரனுடன் தொழில் ரீதியாக மோதலில் ஈடுபட்டவர்கள் விபரத்தை சேகரித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இதற்கிடையே கொலையாளிகள் தப்பி சென்ற லாரி அத்திப்பட்டு புதுநகர் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. லாரியை அங்கு நிறுத்தி விட்டு கொலையாளிகள் தப்பி சென்று உள்ளனர். அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை வைத்து லாரி உரிமையாளர், அதனை ஓட்டிச்சென்ற டிரைவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 81 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இரவு நேரத்தில் பெய்த பலத்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியது.
திருவள்ளூர்:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென பலத்த மழை கொட்டியது.
இரவு 11 மணி வரை விட்டு, விட்டு மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதே போல் மாவட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு, ஊத்துக்கோட்டை, ஆவடி, பூண்டி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவலாக மழை கொட்டியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 81 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இரவு நேரத்தில் பெய்த பலத்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியது. இன்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:
கும்மிடிப்பூண்டி-2
பள்ளிப்பட்டு-9
ஆர்.கே.பேட்டை-37
செங்குன்றம்-2
ஜமீன் கொரட்டூர்-6
திருவாலங்காடு-42
திருத்தணி-10
பூண்டி-18
தாமரைக்குப்பம்-7
திருவள்ளூர்-81
ஊத்துக்கோட்டை-25
ஆவடி-20

பொன்னேரி அருகே பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமாரி (65). இவர் அருகில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம வாலிபர் திடீரென ஜெயக்குமாரி அணிந்து இருந்த 6 சவரன் நகையை பறித்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.