என் மலர்
திருப்பத்தூர்
- உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம்
- அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததால் நடவடிக்கை அளிக்கப்பட்டது.
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே ஆங் காங்கே சுற்றித்திரிவதாக வாணியம்பாடி நகராட்சி அதிகா ரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி நேற்று வாணியம்பாடிசி.என்.ஏ. சாலை பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மூன்று மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.3ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தொடர்ந்து சாலைகளில் சுற்றித்திரியும் அனைத்து மாடுக ளையும் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமம் ஊராட்சிக்குட்பட்ட பாரத கோவில் முதல் குள்ளகிழவன் வட்டம் வரையும் மற்றும் தாமரை குளம் முதல் நேதாஜி நகர் வரையி ரூ. 6 லட்சம் செலவில் சாலை அமைக்கப்படுகிறது. தேவராஜி எம்.எல்.ஏ. பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை நேற்று தொடங்கி வைத்தார்.
விழாவில் ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர், நகர மன்ற முன்னாள் துணை தலைவர் பெரியார்தாசன், ஊர் கவுண்டர்கள் கண்ணதாசன், சசிகுமார், ஊர் நாட்டாண்மை சென்றாயன், நகர மன்ற உறுப்பினர் இனியன், ஏலகிரி கிராமம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஹேமாவதி ஜீவா, உள்ளிட்ட ஊர் பெரியோர்கள் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர் முடிவில் எக்ஸெல் ஜி.குமரேசன் நன்றி கூறினார்.
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி அம்பூர் பேட்டையைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 40). இவர் தனது ஆட்டோவை ஒட்டிக் கொண்டு அண்ணா நகரில் இருந்து நியூடவுன் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நியூடவுன் பைபாஸ் சாலையில் எதிர் திசையில் ஜெயபால் (42) என்பவர் ஒட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ தலைகுபுற கவிழ்ந்தது.
இதில் ஆட்டோ டிரைவர் யுவராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக படுகாயம் அடைந்த யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோ மற்றும் காரை பறிமுதல் செய்தனர் .
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகரின் முக்கிய பகுதியான ஆசிரியர் நகர், அமீனாபாத், பெரிய பேட்டை, முஸ்லீம்பூர், சென்னம் பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், பூக்கடை பஜார் பகுதி யிலும் கடந்த 3 நாட்களாக 4 மர்ம நபர்கள் வீதி வீதியாக நடந்தே சென்று முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் வீடுகளை நள்ளிரவு நேரத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதே இடத்தில் அவர்களின் வீடுகளுக்கு எதிரே நின்று செல்பி எடுத்துக்கொண்டும் செல்கின்றனர்.
இது சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதனை கண்ட தொழிலதிபர்களும், முக்கிய பிரமுகர்களும் நேற்று மாலை வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அதில் நள்ளிரவு நேரத்தில் 4 நபர்கள் தொடர்ந்து வெவ்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை புகைப்படங்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
- மாணவர்கள் வேதனை
- சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மதனாஞ்சேரி ஊராட்சி அமைந்துள்ளது.
இங்கு எகுறான் வட்டம் முதல் குட்டை பெருமாள் கோவில் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மண் சாலை இருந்தது. இந்த வழியாக அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுவதால் யாரும் அந்த சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும்,இங்கு தார் சாலை அமைக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
ஜல்லி கற்கள் பெயர்ந்து மேலே வந்துள்ளது
இதை கடந்த 2018-2019-ம் ஆண்டு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து ஒரு அடுக்கு ஜல்லி கற்கள் கொட்டி ஜல்லி சாலை போட்டுள்ளனர்.பின்னர் தார் சாலை அமைக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
ஜல்லி போட்டு 5 ஆண்டுகள் ஆகியும் தார் சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் ஜல்லி கற்கள் பெயர்ந்து மேலே வந்துள்ளது.இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் ஜல்லி கற்கள் மட்டுமே போடப்பட்ட அந்த சாலையில் செல்லும் பள்ளி மாணவர்களின் சைக்கிள் மாதம் 5 முறைக்கு மேல் பஞ்சர் ஆகிவிடுகிறது.
சில நேரங்களில் நிலை தடுமாறி கீழே விழுந்தது காயம் ஏற்படுவதாகவும் பள்ளி மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் பலமுறை முதல் அமைச்சர் தனிபிரிவு,மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உடலை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் மல்லானூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் பயணம் செய்தார்.
அப்போது திடீரென ரெயிலில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல சென்னை சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் ஊராட்சி, தங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 40).
இவருக்கு திருமணம் ஆகி, தம்பதியினருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரை பிரிந்து அவரது மனைவி தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
சிவா சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல சென்னை நோக்கி சிவா தனது பைக்கில் புறப்பட்டு சென்றார்.
ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி அருகே சென்ற போது, நின்று கொண்டிருந்த லோடு ஆட்டோ பின்புறத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது.
படுகாயம் அடைந்த அவரை அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிவா தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு
- ஏலகிரி மலையில் 10,000 மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அத்தனாவூர், நிலாவூர், மங்கலம், தாயலூர் உள்ளிட்ட 14 கிராமங்களை கொண்டுள்ளது.
இங்கு சுமார் 10,000 மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் பெரும்பாலும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.
மகளிர் தலைவிக்கு ரூ.1000 வழங்குவதற்கான விண்ணப்பம் படிவங்கள் வினியோகம் செய்யும் பணியை திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங்களில் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைப்பெற்று வருகிறது.
இதனை ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற துணை தலைவர் அ.திருமால் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
- பஞ்சாப் செல்ல எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
தருமபுரி மாவட்டம், வேனுசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). இவரது மனைவி ஜோதிமணி (30). தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சீனிவாசன் பஞ்சாபில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பினார். விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்கு செல்ல சீனிவாசன் முடிவு செய்தார்.
அதன்படி நேற்று பஞ்சாப் செல்ல எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஜோதிமணி தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரோந்து பணியில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் தாலுகா போலீசார் மாதனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது கீழ் முழங்கை சேர்ந்த காந்தி (வயது 40), வாசுதேவன் (53) ஆகியோர் பாலாற்றில் இருந்து மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்தனர்.
- முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர்
- விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஏலகிரி மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும், பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடும் அவதிப்பட்டனர் மேலும் வீட்டிற்கு நனைந்தபடியே சென்றனர்.
மேலும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக சாலையோரம் உள்ள சிறு வியாபாரிகளுக்கு பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் வியாபாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
மேலும் ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி மற்றும் ஏலகிரி மலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.
இதனால் முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர் தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் குளங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் நிரம்பியது.
மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- போலீசார் இரவு ரோந்து பணியில் சிக்கியது
- ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் உத்தரவின் பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், டவுண் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் நேற்று இரவுதும்பேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தும்பேரி பாரதிநகர் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் இருந்த மூட்டை களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
பின்னர் 24 மூட்டைகளில் இருந்த 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக அம்பலூர் போலீசார் மேல் நடவடிக்கைக்காக வேலூர் குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அவர்களிடம் ரேஷன் அரிசியை ஒப்படைத்தனர்.






