என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • 2 பேர் தப்பி ஓட்டம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் வடகரை ஊராட்சி பாலாற்றின் அருகே டாஸ்மாக் கடையில் மது வகைகளை காரில் கடத்திச் சென்ற வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் கார் பறிமுதல் செய்தனர்.

    மது வகைகளை பறிமுதல் செய்த உமராபாத் போலீஸார் விசாரணை நடத்தினர்.

    தப்பி ஓடிய ராஜ்குமார் மற்றும் ஒருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

    • 2 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சணைக்கு தீர்வு
    • பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளியூர் கிராமத்தில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    அந்தபகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை, தனிநபர் ஒருவர் தனக்கும் சொந்தமான இடம் எனக்கூறி பாதையில் கம்பிவேலி அமைத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஊர் பெரியோர்கள் பேசியும் கூட கடந்த 2 ஆண்டுகளாக இந்த பிரச்சணைக்க தீர்வு காண முடியவில்லை.

    இதனால் அந்தவழியாக செல்லும் பொதுமக்களின் போக்குவரத்து முற்றிலும் தடையானது.

    இதுகுறித்து கிராம மக்கள், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாரிடம் பொது வழி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.

    அதன்பேரில் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், மண்டல துணை தாசில்தார் நடராஜன், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் அதிகாரிகள் அளவீடு செய்தனர்.

    அந்த இடம் வருவாய்த்துைறக்கு சொந்தமானது என தெரிந்ததை தொடர்ந்து, அதிகாரிகள் தனிநபர் அமைத்திருந்த கம்பி வேலியை அகற்றினர்.

    2 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சணைக்கு தீர்வு காணப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

    • அமைச்சர் கேள்விக்கு பெண் பதிலால் சிரிப்பலை
    • படிக்காதவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூற வேண்டும் என அமைச்சர் அறிவுரை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் தேவஸ்தானம் ஊராட்சியில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறபடுவதை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ.வேலு நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெரும் திட்டத்தின் கீழ் மகளிர் உரிமை தொகை வழங்குவது யார் என்று கேள்விகளை கேட்டார்.

    அப்போது ஒரு பெண் கலைஞர் கொடுக்கிறார் என்று கூறி அமைச்சர் முன்பு வெட்கபட்டார்.

    இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது.

    மீண்டும் அமைச்சர் அங்கிருந்த மற்றொடு பெண்ணை கேட்டார் அவர் ஸ்டாலின் தான் கொடுக்கிறார் என்று மெதுவாக சொன்னார்.

    உடனே ஏன் பயபடுற தைரியமாக சொல்லுமா என்று கூறினார்.

    இச்சம்பவம் பெண்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    பின்னர் மகளிர் உரிமை தொகை மனுக்கள் பெரும் போது இந்த திட்டம் யார் மூலம் நிறைவேற்ற படுகிறது என்று படிக்காதவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து கூற வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.

    • ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கினர்
    • 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக குற்றச்சாட்டு

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் 2 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர்.

    இவர்களுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் அகவிலைப்படி மருத்துவ படி உள்ளிட்டவை அடங்கிய 2022 ம் ஆண்டு முதல் மாத ஊதியம் ரூ.7 ஆயிரத்து 332 வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சம்பளத் தொகையானது ஒவ்வொரு ஊராட்சியிலும் வேறுபடு வதாக கூறப்படுகிறது.

    இதனால் ஓட்சா கூட்டமைப்பு தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் கே. லட்சுமணன் தலைமையில் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் தற்போது அரசு நிர்ணயித்துள்ள சம்பள விகிதப்படி அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் துரையிடம் (கி.ஊ) மனு அளித்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    மேலும் இந்த நிகழ்வின்போது மாநிலத் துணைத் தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் கண்ணன் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே நாச்சார்குப்பத்தில் வீடு புகுந்து 2 லேப்டாப் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

    ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம்(35). இவர் ஆம்பூரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.

    இவரதுவீட்டில் மாடியில் உள்ள ஒரு அறையில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு லேப்டாப், ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை திருடிசென்றுள்ளனர்.

    நேற்று இரவு மாடிக்கு சென்ற செல்வம் கதவு திறந்திருப்பதை கண்டு ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

    • உதிரிபாகம் வழங்கிய கணக்கு குறித்து கேட்டுள்ளார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் தனியார் பைக் ஷோரூம் இயங்கி வருகிறது.

    இதில் ஜோலார்பேட்டை வக்கணம்பட்டி பகுதி சேர்ந்த விக்னேஷ் (வயது23) என்பவர் மெக்கானிக் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

    மேலும் சர்வீஸுக்கு வரும் பைக்குகளுக்கு உதிரி பாகங்கள் வழங்கி கணக்கு எழுதி வைப்பதும் செய்து வந்துள்ளார்.

    இதனால் அதே நிறுவனத்தில் மேற்பார்வை யாளராக பணிபுரிந்து வருபவர் நேற்று முன்தினம் உதிரிபாகம் வழங்கிய கணக்கு குறித்து கேட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த விக்னேஷ் தனது நண்பர்களை வரவழைத்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கை யர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் நிறுவனத்தில் பணி புரியும் மேற்பார்வையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விக்னேஷ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது
    • 1 மணி நேரம் போராடி மின் கம்பியை மாற்றினர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஆம்பூர்ரெயில் நிலை யத்தில் நேற்று மாலை 4.45 மணிக்கு சென்னை நோக்கி செல்லும் மார்க்கத்தில் 2-வது பிளாட்பாரத்தில் மின்சார ரெயில் என்ஜினுக்கு செல்லும் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து தண்டவாளத்தில் விழுந்தது. இதனால் மின் தடை ஏற்பட்டது.

    இதன் காரணமாக மைசூ ரில் இருந்துசென்னை நோக்கி சென்ற வந்தே பாரத் ரெயில் விண்ணமங்கலம் ரெயில் நிலையத்தில் மாலை 4.54 மணியளவில் நிறுத்தப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி, ஜோலார் பேட்டை ரெயில்வே ஊழியர் கள் மின் கம்பியை சரிசெய் யும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரம் போராடி அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை அகற்றிவிட்டு புதியதாக மின் கம்பியை மாற்றினர்.

    இதனால் சுமார் 1 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. சரிசெய்யப்பட்ட பின்னர் நடுவழியில் நின்ற வந்தே பாரத் ரெயில் மாலை 5.27 மணியளவில் அரை மணி நேரம் தாமதமாக மேலும் ஆம்பூர் அருகே பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் டபுள் டெக்கர் ரெயில் சில நிமிடம் நின்று தாமதமாக சென்னை நோக்கி புறப்பட்டது.

    ரெயில்கள் நடுவழியில் நின்றதால் ரெயில் பயணிகள் அவதிப் பட்டனர்.

    • பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்
    • உடல் பரிசோதனை செய்து கொண்டார்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள அக்ராகரம் ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாமினை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

    அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் அம்மனாங்கோயில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து காட்டூர் பனம்தோப்பு பகுதியில் குறுங்காடுகள் அமைக்கும் பணியை பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார் புதுப்பேட்டை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு திட்டத்தை முன்னிட்டு அப்துல் கலாம் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    புதுப்பேட்டை அரசு சமூதாய சுகாதார மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து உடல் பரிசோதனை செய்து கொண்டார் அதன் பிறகு ரத்த தானம் முகாமில் மாவட்ட கலெக்டர் பங்கேற்று ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கினார் இந்த ஆய்வின் போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதிஷ்குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில், ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, டாக்டர் சுமன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே.சதிஷ்குமார், மாவட்ட ரத்த வங்கி அலுவலர் குமரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 4 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா மலைப்பகுதியைச் சேர்ந்தவர் சக்தி (வயது 23).இவர் நேற்று மாலை வாணியம்பாடி பஜாருக்கு வந்தார்.

    அங்கு காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கிக்கொண்டு மாத கடப்பா மலைக்கு, மலை பாதை வழியாக சென்று கொண்டிருந்தார்.

    மலைப்பகுதியில் இருந்து எதிரே தும்பேரி கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 22), சீனிவாசன் (வயது 18), சக்திவேல் (வயது 19) ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் வந்தனர். அப்போது 2

    மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் பழுதான மற்றும் புதிய மின் கம்பங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் பகுதியில் இருந்து நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மின் கம்பங்கள் ஏற்றி கொண்டு டிராக்டர் சோதனை சாவடி வழியாக நாட்டறம்பள்ளி நோக்கி சென்றது. டிராக்டரை டிரைவர் அரியானா மாநில வாலிபர் சம்ராடு (வயது 29) என்பவர் ஓட்டி சென்றார்.

    பங்காளமேடு அருகே சென்று கொண்டிருக்கும் போது டிராக்டர் டிரெய்லர் சாலையின் நடுவில் கவிழ்ந்தது.

    இதில் டிரெய்லரில் இருந்த மின் கம்பம் சரிந்து விழுந்ததில் மின் கம்பம் மீது அமர்ந்து இருந்த அரியானா மாநிலம் பகத்சிங் மகன் அனில் (வயது 37) என்பவரும் சரிந்து விழுந்தார்.

    இதில் அவர் மின் கம்பங்களுக்கு இடையில் சிக்க தலை நசுங்கி சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • யார்டுகள் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்
    • பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்

    ஜோலார்பேட்டை:

    சென்னை கோட்ட ரயில்வே பொது மேலாளராக விஸ்வநாதன் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை ெரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள தனி ரெயில் மூலம் விஸ்வநாதன் ரெயில்வே துறை அதிகாரிகளுடன் வந்தார்.

    அப்போது ரெயில் நிலைய மேலாளர் சேகர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் மற்றும் ரெயில்வே தொழிற்சங்க செயலாளர் எஸ். ஜெகன் தலைமையில் சங்க நிர்வாகிகள் ஆகியோர் சென்னை கோட்ட புதிய மேலாளருக்கு மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    இதனை தொடர்ந்து சென்னை கோட்ட பொது மேலாளர் ரெயில் நிலையங்களில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்கள், ரெயில்வே காவல் நிலையங்கள், முன்பதிவு அலுவலகங்கள், ரன்னிங் ரூம், ரெயில் நிலைய யார்டுகள் போன்ற பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ரெயில் நிலையத்தில் பணிபுரியும் பிரிவு அலுவலர்களை தற்போதுள்ள பராமரிப்பு பணிகள் மற்றும் மேம்படுத்தப்பட உள்ள பணிகள் போன்றவைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது எஸ்.ஆர்.எம்.யூ. ஜோலார்பேட்டை பொறுப்பாளர் ஏ.டி.எஸ். கிளை செயலாளர் ஜெகன், ஓஎல் கிளை செயலாளர் செந்தில்குமார், எச்கீயூ கிளை செயலாளர் ஜெகன் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கையும் களவுமாக பிடித்தனர்
    • போலீசில் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலைநகர் பகுதியை சேர்ந்த வர் கணேசன். இவரது மனைவி சாந்தலட்சுமி (வயது 37).

    இவர் தனது வீட்டில் இருந்தபோது, நேற்று அதி காலை அடையாளம் தெரி யாத நபர் ஒருவர் வீட்டின் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து வீட்டின் வராண்டாவில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம், மணி பர்ஸ் ஆகியவற்றை திருட முயன் றுள்ளார்.

    இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர்.

    அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர் ஜோலார்பேட்டையை அடுத்தபால்னாங்குப்பம் கங் காநகர் பகுதியை சேர்ந்த அரு ணாச்சலம் என்பவரது மகன் ராஜேஷ் (37) என்பது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சேதுக்கர சன் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்தார்.

    ×